முத்துக்குமரா வென கத்துங் கடலே !
‘முத்துக்குமரா’ வென்று கத்துங்கடலே
–அந்த
சத்தங்கேட்டு,சண்முகனைக் கூவும் மயிலே,
‘செந்திலதிபா’ வென்று சேவற்
கூவுமே – உனை
சிந்திக்கின்ற பக்தருள்ளம் மெய்மறக்குமே.
தித்திக்கின்றதே,நாவும் தித்திக்கின்றதே – உனை
பக்தியோடு போற்றிப் போற்றி பாடும் போதிலே,
சக்திவந்ததே புது சக்திவந்ததெ – நாளும்
சண்முகனே, பொன்னடியைத் தேடும் போதிலே
என்றுமின்பமே நெஞ்சிலென்று மின்பமே – வொரு
கன்றினைப் போற் தாயினருட் பாலருந்தவே,
குன்றவில்லையே யின்பங் குன்றவில்லையே – அந்த
குன்றிலாடுங் குமரன் குரல் கேட்குஞ் செவிக்கே.
No comments:
Post a Comment