Friday, December 9, 2016

தனயோகம்.

தனயோகம்.

       பல்வேறு பெயர்களில் உலா வரும் இராஜயோகங்களுக்கான இணைவுகள் பாக்கியாதிபதி மற்றும் கர்மாதிபதி ஆகியோரால் அளிக்கப்பட்டு, செல்வமும், சக்தியும் அதிகரிக்கிறது. பொதுவாக்க் கீழ்கண்ட பாவாதிபதிகளின் தொடர்புகளால் தனயோகங்களால் ஏற்படுகிறதுஅவை இலக்னம்,1, 2, தனபாவம், 5, பூர்வ புண்ணிய ஸ்தானம், 9 – பாக்கிய பாவம் மற்றும் 11. இலாப்பாவம் ஆகியவை ஆகும். திருக் பாவாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்புறும் போது யோகங்கள் ஏற்படுகின்றன. விபரீத ராஜயோகங்கள் இந்த திருக் பாவ தொடர்புகளால் ஏற்படுகிறது

       ஜெய்மினி சூத்திரத்தில் ஆரூட இராசி மற்றும் ஆத்மகாரக இராசிகளால் யோகங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

       சந்திரனால் அதியோகம், வசுமதி யோகம் ஆகியவை ஏற்படுகின்றன. சுக்கிரன் மற்றும் குருவின், சந்திரனுடனான இணைவுகளும் யோகம் அளிக்கின்றன. அதிசக்தி மிக்க செல்வ நிலைக்கான யோகங்கள். பலமான வீட்டில், பலமான கிரகங்களின் பார்வைபடும் போது இராகு, கேதுக்களும் இராஜயோகத்தை  ஏற்படுத்துகின்றன. இது தவிர ஹேமதுரும யோகம் போன்ற தரித்திர யோகமும் சந்திரனால் ஏற்படுகிறது.

       ஒரு ஜாதகத்தில் இலக்னம், இலக்னாதிபதி, சூரிய, சந்திரர்கள், முக்கியமாக பாக்கியதிபதி ஆகியோர் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால், நல் அதிர்ஷ்டம் தரக்கூடிய பல யோகங்கள் சிறந்த பலன்களை அளிக்கின்றன. இந்த யோகங்களின் அளவு இந்தக் காரணிகளை ஒத்தே கூடுதலாகவோ, குறைவாகவோ ஏற்படுகின்றனஇவைகளின் பலத்தைப்பற்றி பார்க்கும் போது கிரகத்தின் பலம், ராசியில் அதன் நிலை, அங்கே அதன் மதிப்பு ஆகியவையும், இராசி மற்றும் நவாம்சத்தில் அவற்றிற்கு இடம் கொடுத்தவனின் பலமும் பார்க்கப்பட வேண்டும். மேலும் செல்வ நிலையைப்பற்றி ஆராயும் போது, தசாம்ச சக்கரமும், சதுர்தாம்ச சக்கிர பலன்களும் ஆராயப்பட வேண்டும்.

       ஜாதகரின் செல்வ நிலையைப்பற்றி ஆராயும் போதும், ஏதாவது அல்லது பலயோகங்களின் பலன்களை ஆராயும் போதும், அதற்குக் காரணியான கிரகங்களின் நேரடித் தொடர்புகளையும் பார்க்கவேண்டும். ஜாதகரின் முழுமையான செல்வநிலை 2 ஆம் பாவத்தால் குறிகாட்டப்படுகின்றன. அதற்குத் திரிகோண பாவங்களும், பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு 2 ஆம் பாவமான  6 ஆம் பாவமும், பாக்கிய பாவத்துக்கு 2 ஆம் வீடான 10 ஆம் பாவம் மற்றும் கர்ம பாவத்துக்கு 2 ஆம் பாவமான இலாப பாவமான 11 ஆம் பாவம் ஆகியவை மிக முக்கியமான பாவங்களாகும். சுக்கிரன், குரு ஆகியோர் செல்வத்துக்குக் காரகர்கள் ஆகிறார்கள். எனவே, இவர்களின் நிலையும் இலக்னத்தில் இருந்தும், சந்திரா இலக்னத்தில் இருந்தும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.  

       மேற்சொன்ன பாவங்களின் பலம் மிக்க அதிபதிகள், அவர்களின் நன்நிலை, அவைகளின் சுபர்களுடனான சிறப்பான தொடர்புகள் மற்றும் நன்நிலை ஆகியவை சீரான மற்றும் அதிகரிகக் கூடிய செல்வநிலைக்குக் காரணமாகின்றன. இவற்றில் இயற்கை மற்றும் தற்காலிக சுபர்களின்  இருப்பு  கூடுதல் சிறப்பாகும். இவற்றில் அசுபர்களின் இருப்பு நிலையும் ஆராயப்பட வேண்டும். ஏனெனில் ஒரு ஜாதகரின் பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானங்களை 5, 9 ஆம் வீடுகள் குறிகாட்டுவதால், இவ்வீடுகள், அதிபதிகளுக்குப் பாப கிரகங்களால்  ஏற்படும் பாதிப்பு செல்வ நிலையைப் பொறுத்தவரை ஜாதகருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

       இந்த பாவாதிபதிகள் தங்கள் ஆட்சி, உச்ச வீட்டிலோ, கேந்திர, திரிகோணங்களிலோ இடம்பெறும் போது ஜாதகரின் அதிர்ஷ்ட நிலைகளை மிகவும் உயர்த்திவிடுகிறதுஅதேபோல், இந்த பாவாதிபதிகள் பாதிப்பு அடைந்திருந்தால், ஜாதகரின் செல்வ நிலையும் பாதிப்படையும். நீசமடைந்த பூர்வபுண்யாதிபதி, பாக்கியாதிபதி, நீசபங்கம் ஆகாவிடில் பாதிப்பைத் தருவார்.

       4 ஆம் பாவம் மிகவும் முக்கிய பாவமாகும். இந்த பாவம் ஜாதகரிடம் உள்ள அல்லது அடையப்போகிற பூமி, அசையும் மற்றும் அசையா  சொத்துக்களைக் குறிப்பதாகும்.சுகாதிபதி, சுகபாத்தில் அல்லது எந்தவொரு நல்ல பாவத்தில் இருந்தாலோ அல்லது சுபர் அந்த பாவத்தில் இருந்தாலோ, பார்த்தாலோ ஜாதகர் வாகனம், பூமி ஆகியவற்றைப் பெற ஆசிர்வதிக்கப் பட்டவராவார். எவ்வளவு சொத்துக்களை உடையவராய் இருப்பார் என்பது கிரகங்களின் வலிமையைப் பொருத்தே அமையும்.

       10 ஆம் பாவம் என்பது கர்ம பாவம் ஆகும். இதை ஆராயும் போது அதன் அதிபதி, 10 ஆம் இடத்தைப் பார்க்கும், இணையும் கிரகங்கள் மேலும் 10 ஆம் இடத்துக்குக் காரகர்கள் ஆன குரு, சூரியன், புதன் மற்றும் சனி ஆகியோரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவைகளின் மூலமாகவே  ஜாதகரின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சம்பாத்தியத்தை அவர் எவ்வழியில் பெறுகிறார், சொத்துசுகம் என்ன ? - என்பவற்றை ஆராயலாம். ஆயினும் எதற்குமே கிரகங்களின், பாவங்களின் பலமே இவற்றை நிர்ணயிக்கும்.

       யாருக்கு பரம்பரைச் சொத்துக்கள் கிடைக்கும் ? எதிர்பாராத வரவுகள் எவர்க்குக் கிடைக்கும் ? லாட்டரி, பங்குச்சந்தை மூலமான வருமானங்கள் எவருக்குக் கிடைக்கும் ?

       அன்றன்றைக்கான வருமானத்துக்கு, பொருள் வரவு அல்லது தனவரவுக்கு 2 மற்றும் 11 ஆம் இடங்கள் பொறுப்பாகின்றன. அதற்கு எதிர் பாவங்களான 8 ( மரபுவழி சொத்து ) மற்றும் 5 ஆம் ( பூர்வபுண்ணியம் ) பாவம் ஆகியவை உழைப்பால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கப்படாத வருமானத்தைக் குறிக்கின்றனஇந்த பாவங்களை ஆராயும் பொது அவற்றின் காரகர்களான குரு மற்றும் சனி, அவர்களின் தகுதி ஆகியவையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் தங்கள் நல்ல பார்வைகள் மூலமாகத் தொடர்பு கொள்ளும்போது, அளவுக்கு அதிகமான உழைத்து சம்பாதிக்கப்படாத செல்வத்தை குறிகாட்டுகின்றன. அறுங்கோணப் பகுதி பார்வை (செமிசெக்ஸ்டைல்ஸ்) 30° , அறுங்கோணப்பார்வை (செக்ஸ்டைல்ஸ்) 60°, முக்கோணப்பார்வை ( ட்ரைன் ) 120°

        பொதுவாக 10 மற்றும் 11 ஆம் பாவங்களின் நட்சத்திராதிபதி நிற்கும் கிரகங்கள், லக்னப் புள்ளியின் நட்சத்திராதிபதி நிற்கும் கிரகங்களே செல்வ நிலை உயரக் காரணமாகிறார்கள். 10, 11 மற்றும் இலக்னத்தில் நிற்கும் கிரகங்களின் நட்சத்திரத்தில் இடம்பெறும் கிரகங்களும், யோக காரகனின் நட்சத்திரத்தில் இடம் பெறும் கிரகங்களும்  செல்வத்தை அள்ளித் தருகின்றன. மாறாக 8 ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்கள் செல்வநிலையை அழிக்கவல்லனவாகும்.
      
லக்//
சனி

சுக்,செவ்()
ராகு
குரு
சூரி






இராசி
22/6/1966
01-18 (நள்ளிரவு)காலை
பிக்கானேர்
புத
சந்
குரு

நவாம்சம்
புத
கேது


லக்//
சுக்,ராகு
செவ்
சனி

கேது



சந்
சூரி



சனி தசா இருப்பு 0 – 3 மா – 12 நாள்.

       இந்த ஜாதகர் 1990 இல் வட இந்தியாவில் இருந்து, பிழைப்புத் தேடி சென்னைக்குத் தன் பையில் 500 / ரூபாயுடன் வந்தார். அப்போது இவருக்கு சுக்கிர திசை நடந்தது. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக 40 லட்சத்திற்கும் மேலாகச் சம்பாதித்தார். சுக்கிரன், சந்திரா இலக்னத்தில் இருந்து இலாப பாவத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 5 ஆம் அதிபதி சந்திரன், 8 ஆம் அதிபதி சுக்கிரன் ஆவர். இங்கு சனியானவர் அறுங்கோணப் பார்வையால் சுக்கிரனைப் பார்க்கிறார். சுக்கிரன் சந்திரனை அறுங்கோணப் பார்வையால் தொடர்பு கொள்ளுகிறார். குரு , சந்திரனையும், சுக்கிரனையும் அறுங்கோணப் பகுதி பார்வையால் பார்க்கிறார். இந்த நிலைகளே இவரின் அளவற்ற வருமானத்திற்குக் காரணமானது.

முகேஷ் அம்பானியின் ஜாதகம் --



சுக்,சூரி
கேது,புத
செவ்





சூரி
ராகு
சுக்,லக்///

இராசி
19/4/1957
12 N 48
45 E 00



நவாம்சம்
சந்

குரு
()

சனி –()

சந்
சனி()
ராகு
லக்//

குரு-()
புத,கேது

செவ்

       இவரின் 5 ஆம் அதிபதி குரு, 8 ஆம் அதிபதி புதன் ஆவர். புதன் தனது முக்கோண பார்வையால் குருவை தொடர்பு கொள்கிறார். நடப்பு இராகு தசை. இராகு 12 இல், ஆனால் சந்திரனில் இருந்து 11 ஆம் இடத்திலும் உள்ளார். இராகு விசாக நட்சத்திரத்தில் உள்ளார். நட்சத்திராதிபதி குரு 10 ஆம் வீட்டிலுள்ளார். எனவே, இந்த திசை அவருக்கு அசாத்தியமான வளர்ச்சியைத் தந்தது.

       எனவே, நண்பர்களே! தனயோகத்துக்கான காரணிகளை உதாரண ஜாதகங்களோடு ஆராய்ந்தது, பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.