Showing posts with label கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக. Show all posts
Showing posts with label கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக. Show all posts

Tuesday, June 5, 2018

கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக







         கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக



சூரியன் – தந்தை, அரசாங்கம், மகன், ஒளிமிகுந்த, அரசியல்வாதி, அரசன்,
சந்திரன் – தாய், தண்ணீர், தோழி, அசைவு, வெள்ளை, பெண், வஞ்சகம், மோசம்,            பால், கலை, பெண்ணின் மாமியார்,
செவ்வாய் – சகோதரன், எதிரி, அம்பு, கூர்மையான ஆயுதம், தீ, ஆண், சிகப்பு,               படைவீரர், பிடிவாத குணம்.
புதன் – சகோதரி, சகோதரன், பெண், நண்பன், தாய் மாமன், விஷ்ணு, கல்வி,                புத்திசாலித்தனம், நிலம் சொத்து, பச்சை.
குரு – ஆசிரியர், குரு, கௌரவம், மதிப்பு மிக்க, வாழ்க்கை , ஜீவன், இரக்கம்,                அந்தஸ்தை அளிப்பவர், மதபோதகர்.
சுக்கிரன்- பெண் கிரகம், மனைவி, சகோதரி, பொருளாதாரம், வசிப்பிடம், அழகான           உருவம், இனிய குரல்,
சனி – தொழில், புரஃபஷன், மூத்த சகோதரன், கருப்பு,
சனி + இராகு – இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகள்.
சனி – கேது – பட்டாபிஷேகம். பதவியேற்பு, கடமையாற்றும் போது விலகுதல்               பிரிதல்.
இராகு – வாய், முகமதியர், கோபுரம், முட்டை வடிவம், தனித்த அல்லது பாழான            பகுதி, அகன்ற பாதை, வட்டம், வட்ட வடிவம், தந்தை வழி பாட்டனார்,              படுக்கை, தலை, இருட்டு, மனத்தோற்றம், விஸ்தாரமான,                           காலபுருஷனின் வாய்.
கேது – ஜெனரேட்டிவ் ஆர்கன், மயிர், கிருத்துவர், சந்து, நூல், நரம்பு தளர்ச்சி, வக்கீல், தடைகள், வேர், வால், விடுதலை, கயிறு, ஜலதாரை, சாக்கடை, அழிந்த, பாழான, இடிந்த, வயதான, சிறிய, குளியலறை, செயின், நீதிமன்றம், வெப் அல்லது நெட்டில் சிக்குதல்.
         உதாரணம் – ஒரு ஜாதகத்தில் புதன் + கேது இணைவு ஜாதகர் இளமையில் காதலித்து இருப்பார் என்பதைக் குறிகாட்டுகிறது. அடுத்து ஜாதகரின் நண்பன் பிரச்சனையில் இருக்கிறான் என்பதையும் குறிகாட்டும். ஜாதகர் பூமி விஷயமான வழக்கு விவகாரங்களில் சிக்கி இருப்பதையும் குறிகாட்டுகிறது.
ஜனன ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார செவ்வாய், ஜனன சூரியனைக் கடக்கும் போது மனதில்        கோசார சந்திரன், ஜனன சூரியனைக் கடக்கும்போது ஜாதகரின் தந்தைக்கு ஏற்படும் பொருளாதார இலாபத்தையும், அவருக்குப் பயணம் ஏற்படும் என்பதையும் குறிகாட்டுகிறது.
படபடப்பு, பிடிவாதம், கோபத்தால் ஏற்படும் கஷ்டங்கள், தொழிலில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள்  ஆகியவை ஏற்படும். பெண் ஜாதகமானால் கடக்கும் போது அவள் கணவன் கர்வம் மிக்கவனாக நடந்து கொள்வான். ஆண் ஜாதகம் எனில் ஜனன சூரியனை கோசார செவ்வாய் கடக்கும் போது ஜாதகரின் மகனுக்கு கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
         கோசார புதன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது நண்பனின் உதவி தந்தைக்குக் கிடைக்கும். அத்துடன் பூமி வகையிஅல் முன்னேற்றங்கள் இருக்கும்.
         கோசார குரு - ஜனன சூரியனைக் கடக்கும் போது மத குருமார்களை சந்திக்கும் வாய்ப்பு தந்தைக்கு ஏற்படும்.  மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் மதிப்பு மிக்க மனிதர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
         கோசார சுக்கிரன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது தந்தைக்கு பொருளாதார வகையில் இலாபங்கள் கிடைக்கும். மேலும், நுண்ணிய, அழகிய  உருவமுடைய அழகுப் பொருட்களும் கிடைப்பதோடு, ஒரு பெண்ணின் சந்திப்பும் ஏற்படும்.
        கோசார சனி - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு மனவருத்தம், சஞ்சலம், அமைதியின்மை ஏற்படும். தொழில் இடத்தில் ஆபத்துக்கள் ஏற்படும். தந்தை மற்றும் மகனுக்கிடையே வழக்கு விவகாரங்கள் ஏற்படும் முன்னறிவிக்கிறது. மேலும், ஜாதகரின் தந்தைக்கு தொழில் இடத்தில் புதிதாக வந்தவர் மூலமாக ஏற்படும், ஆபத்துக்களை குறிகாட்டுகிறேன்.
           கோசார இராகு - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு                      சோம்பேறித்தனத்தைக் கொடுக்கிறது. மேலும், தந்தைக்கு கண் ஒளி மங்குவதோடு, தீயசெய்திகள் அவரின் காதில் விழும்.
         கோசார கேது - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகர் ஆன்மிக விஷயங்களைப் படிப்பதோடு, புனிதமான பெரிய மனிதர்களை சந்திப்பதைக் குறிகாட்டுவதோடு, ஜாதகரின் தந்தை தெய்வீகத் தன்மை கொண்ட சிந்தனைகளை மேற்கொள்வதோடு துறவு பூணவும் நினைப்பார்.
ஜனன ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தை தேவையற்ற பழியைச் சுமப்பதோடு, பயணங்களையும் எதிர்பார்க்கலாம்.
         கோசார செவ்வாய் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சகோதரனுக்கு பயண வாய்ப்புகள் வரும். ஜாதகருக்கு மனக்கவலைகள் ஏற்படும். ஜாதகர் விரைவான மற்றும் அடிக்கடி மாறுகின்ற, சலனப்புத்தி உடையவராக இருப்பார்.
         கோசார புதன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகர் குற்றம் சாட்டப்படுவார். அவருக்குப் பெண்களால், தோழிகளால்  மன அமைதியின்மை, வருத்தம் ஆகியவை ஏற்படும். சிறு பயணங்களும், கலைத்துறை மூலமான இலாபங்களும் ஏற்படும்.
         கோசார குரு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது இருப்பிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மறைமுக எதிரிகளின் மூலமாக குற்றம் சாட்டப்படுவார். தெய்வீக தனமையுடைய சிந்தனைகள் ஜாதகரின் தாய்க்கு ஏற்படும். சளி, இருமல் காரணமாக ஆரோக்கியக் குறைவும் ஏற்படும்.
         கோசார சுக்கிரன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவிக்கோ, மகளுக்கோ ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்கள் ஆகியவை ஏற்பட்டு அதன் காரணமாக மனமைதியும் குறையும். ஜாதகருக்கு தேவையற்ற செலவீனங்களும், பண இழப்புகளும் ஏற்படும்.
         கோசார சனி - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழில், பணி மாற்றங்கள் ஏற்படும். மனதைப் புண்படுத்துகிற நிகழ்வுகளும் ஏற்படும்.
          கோசார இராகு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது தாய்க்கு ஆபத்துகள் ஏற்படும். ஜாதகருக்கு மன பிரமை மற்றும் பயம் ஏற்படுத்தும் அளவுக்கான நிகழ்வுகள் ஏற்படும்.
          கோசார கேது - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தெய்வீக சிந்தனைகள் ஏற்படும். புனித நீராடல்கள் ஏற்படும். ஜாதகரின் தாய்க்கு உடலில் உபாதைகள், அசௌகரியங்கள் ஆகியவை ஏற்படும்.