Showing posts with label தினபூமி - இந்த வார நட்சத்திர பலன்கள்.. Show all posts
Showing posts with label தினபூமி - இந்த வார நட்சத்திர பலன்கள்.. Show all posts

Sunday, April 19, 2015

தினபூமி - இந்த வார நட்சத்திர பலன்கள். அஸ்வினி முதல் ஆயில்யம் வரை

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
உங்கள் நட்சத்திர பலன்கள்.
   19 – 04 – 2015 முதல் 25 - 04 – 2015 வரை  


                                                     Web site – www.studyofastrology.com.  
Blog – svijayanarasimhan.blogspot. com

மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
      இந்த வாரம் அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். அவர்களின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கலாம்எடுத்த காரியங்களில் தடைகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். சிலருக்கு எதிரிகளின் பணமும் வந்து சேரும்.   வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். சிலருக்கு ஆடம்பரச் செலவுகளால் பணமுடைகள் ஏற்படலாம். அச் சமயங்களில், உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். தொழிலில் எதிர்பார்த்தபடி ஆதாயங்கள் ஏற்பட்டு  பொருளாதார உயர்வுகள் ஏற்படும். பூஜை வழிபாடுகளால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பயணத்தின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
பரணி  --
      இந்த வாரம் தொழிலில் புதிய விரிவாக்க  நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். அடிக்கடி கோபப்படுவதைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தாய்வழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். நல்ல மனிதர்களின் தொடர்பால் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி இலாபத்தை அதிகரிக்க முயல்வீர்கள்.  எதிரிகளை சுலபமாக வெல்லும் திறன் ஏற்படும் வாழ்க்கையில் உங்கள் திறமையால் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு.
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
      இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமாபொழுது போக்குதல் எனச் செலவுகளுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளுக்குச் செலுத்த  வேண்டிய கல்லூரிக் கட்டணங்களுக்கான வங்கி உதவிகளுக்கு முயற்சித்தால் தேவையான கடன் உதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள்கோபத்தை அடக்கிக் குடும்பத்தாருடன் அனுசரித்துப் போவது நல்லது.  அரசாங்கத் துறையின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
       இந்த வாரம் தனவருமானம் கூடும். வியாபாரிகளுக்கு வியாபார விஷயமான நற்செய்திகள் வரும். விற்பனைத் திறமைகளைக் காட்டித் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அரசு அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக்களிப்புத் தரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். மனைவியிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிலருக்கு மனச் சஞ்சலங்களும், அலைச்சல்களும் ஏற்படலாம். திடீர் செலவுகள் அதிகரிக்கும். வாரக் கடைசியில் புதிய முயற்சிகளால் தனவரவு அதிகரித்து எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
ரோகிணி  –
       இந்த வாரம் பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்திமயமாகக் கழியும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும்   மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். உங்களுக்கு எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு அதிகரித்து                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பெரிய மகான்களின் தரிசனமும் கிடைக்கும். சிலருக்கு வியாபாரப் போட்டிகளால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள்  தனித்திறமைகளால் புதிய இலக்குகளை எட்டி அதிக இன்சென்டிவும், பாராட்டும் பெறுவர்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
       இந்த வாரம் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகளால்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க தாமதம் ஏற்படும். சிலருக்கு பூமி, வீடு என அசையாச் சொத்துக்கள் சேரும். இறை தரிசனத்தால் வாழ்க்கையில் முன்னேற்றங்களை அடைவீர்கள்.   உங்களுக்குப்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               பணம் சம்பாதிப்பதில் எப்பொதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் ஏற்படும்காவல்துறை மற்றும் இராணுவப் பணியாளர்கள் பல சாகஸங்களை நிகழ்த்துவர்குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மனக் கசப்புக்களைத் தவிர்க்கலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள்  அதிகாரிகளிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
       இந்த வாரம் உங்களுக்கு இறை சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களால் ஆதாயம் அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.    உயர்அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்தால் கல்லூரியில் நல்ல பிரிவில் இடம் பெறலாம்
திருவாதிரை ---
       இந்த வாரம் நீங்கள் பணவிஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லதுநல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தில் துன்பமும் ஏற்படும்கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர். அரசு வகைத் தொல்லைகள் ஏற்படும். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் அனுகூலமாய் முடியும். தொடர் முயற்சி காரணமாக, வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். வேலைகளில் சுறுசுறுப்புக் குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.   பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
       இந்த வாரம் மனதுக்குப் பிடித்த மங்கையுடன் நட்பு ஏற்படும். கோடை விடுமுறையில் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவீர்கள்வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும்.    சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். உறவுகளால் எவ்வித  உதவியும் இருக்காது. விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும்மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்.  ஆயினும், எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம்.
பூசம் -- 
       இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசுப் பணியில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் அஜீரணத் தொல்லைகள் எழலாம். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொலை தூரச் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். பெரியோர்களின் உதவியால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை  எதிர்பார்க்கலாம் 

ஆயில்யம்
     இந்த வாரம் உங்களுக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று அனைத்து வழிகளிலும் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம்மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும்..  வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலமாக. ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்