Showing posts with label எட்டாம் பாவ காரகங்கள். Show all posts
Showing posts with label எட்டாம் பாவ காரகங்கள். Show all posts

Monday, October 27, 2014

எட்டாம் பாவ காரகங்கள்


எட்டாம் பாவ காரகங்கள்


       ஆயுள்> ஆராய்ச்சி> ஆன்மீக விஞ்ஞானத்தில் ஆர்வம்> மந்திர சக்தி> உள் மற்றும் வெளி மாற்றங்கள்> கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்ச்சிகள்> இறப்பு> உயில்> ஆயுள் காப்பீடு> சுலபமான இலாபங்கள்> மணவாழ்வின் பந்தம்> மரபு உரிமை> காயம் ஏற்படக்கூடிய நிலை> பயம்> விபத்து. தடைகள்> வழக்குகள்> திருட்டு> நஷ்டங்கள்> துரதிர்ஷ்டம்> அவமானம்> திவாலாகுதல்> ஏமாற்றங்கள் ஆகியவையும் வாள்> துப்பாக்கி முதலியவற்றால் ஏற்படும் காயம்> போர்> சண்டை> மலை> பலமாடிக் கட்டிடம் போன்ற உயரமான இடங்களில் இருந்து விழுந்து அல்லது குதித்து உயிர் துறத்தல்> தீராத வியாதிகள்> வருத்தம்> நீங்காத பல வகைக் கஷ்டங்கள்> துன்பங்கள்> மானபங்கம்> ஆயுள் அளவு> நீங்காத அல்லது தீராத பகை> வீணான தேவையற்ற அலைச்சல்> பாவம்> அஞ்ஞானம்> திடீர் சாவு> தோல்வி> சிறைப்படல்> தற்கொலை> தூக்கு> கொலை> கொள்ளை> கைமைநிலை> மன உளைச்சல்> மரியாதைக் குறைவு ஆகியவையும். 7 ஆம் இடத்துக்கு 2 ஆம் இடமாதலால் வரதட்சிணை மற்றும் மனைவியின் மூலம் வரும் வருமானம்> எதிரியின் வலிமை> நண்பர்கள்> வெற்றி> கூட்டாளியின் சொத்து> போனஸ்> கிராஜூவிட்டி> சாவின் வகை> கசாப்புக் கடைக்காரர்> சர்ஜன்> மருத்துவ அதிகாரி> லஞ்சம்> நதியைக் கடந்து போகுதல்> பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.

ஆறாம் வீட்டுக்கு 3 ஆம் வீடாவதால் சகோதரரின் வேலைக்காரர்களையும்> 5 ஆம் வீட்டுக்கு 4 ஆம் வீடாவதால் குழந்தைகளின் தாயைப்பற்றியும்> 3 ஆம் வீட்டுக்கு 6 ஆம் வீடாவதால் சகோதர> சகோதரிகளின் ஆரோக்கியக் குறைவையும்> 10 ஆம் இடத்திற்கு 11 ஆம் இடமாவதால் நண்பர்களின் கௌரவம் மற்றும் மரியாதையைப் பற்றியும்> மேலும்> 8 ஆம் வீடு அங்கஹீனம் தண்டனை பெறுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.
    
       8 ஆம் வீட்டுடன் யுரேனஸ்ஸின் தோடர்பு வித்தியாசமான மற்றும் நிடீர் இறப்பையும்> வெடி விபத்து> கொள்ளை நோய்கள்> என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமலே தவறான மருத்துவ முறையால் ஜாதகர் இறக்க நேரிடலாம். இடி> மின்னல் தாக்கி அல்லது மின்சாரம் தாக்கி இறக்கலாம்> நெப்டியூன் தொடர்பு> கோமா மற்றும் மயக்கநிலைக்குக் கொண்டு செல்லலாம் அல்லது அலர்ஜி> மருந்து ஓவர்டோஸ் ஆகலாம். கேஸ்> நீரில் மூழ்குதல்> விஷம் ஆகியவற்றால் மரணம் நிகழலாம்> 8 ஆம் பாவ உடற் பாவங்கள் -- குதம்> இனவிருத்திக்கான உறுப்புகள்> அசுத்தங்களை வெளியேற்றும் பாகங்கள்> இடுப்பு எலும்பு ஆகியவை ஆகும்.



        8 ஆம் வீடு அதன் அதிபதி ஆகியவை பாதிப்படைந்தால்  விரை வீக்கம்> வெடிப்பு> வீக்கம்> ஆண்மையின்மை> மூலம்> சிறுநீரக நோய்> கட்டிகள்> தீராத வியாதிகள் ஆகியவை ஏற்படுகின்றன. பலம் வாய்ந்த ஆயுள்காரகன் சனி இவற்றில் இருந்து நம்மைக் காக்க உதவுகிறான். 
   
                             ________________


வல்லமை தாராயோ பராசக்தி - இந்த மானுடம் பயனுற 

வாழ்வதற்கே.

என் கடன் பணி செய்து கிடப்பதே.