உ
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹI
ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்.
கிரகங்கள் மனிதனை, அவனவன் கர்மவினைக்குத் தக்க, ஆட்டிப் படைக்கின்றன. இவ்வுலகில் உன்னதமான பிறவி மனிதப் பிறவியேயாம். ஏனெனில், இவ்வுலகப் படைப்பில் பகுத்தறிவு என்பது மானிடப் பிறவிக்கு மட்டுமே உரித்தானது. தர்ம, அர்த்த, காமம், மோட்சம் வாயிலாக, ஒவ்வொரு ஆத்மாவும் பேரின்ப வீட்டை அடையும் முகமாக, நமது முன்னோர்களும், முனிவர்களும் பல அரிய வேதசாத்திர நூல்களை, நமக்கு அளித்துள்ளனர். அத்தகைய நூல்களில், அதர்வண வேதம், சத்பத ப்ராம்ணா, மனு ஸ்மிருதி மற்றும் புராண இதிகாச நூல்கள் குறிப்பிடத் தக்கவையாகும். இவை அனைத்திலுமே, முக்கியமாக சமூகத் தேவைகள் மற்றும் திருமண விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பேரின்ப வீட்டை அடைய பொருள், இன்பம் என்ற இரு கரைகளுக்குக் இடையே ஒடும், தர்மம் எனும் நீர்போக்கில் சென்று, மோட்சம் எனும் பெருவீட்டை அடையவேண்டும். சத்பத ப்ராம்ணாவில் “ மனைவியும், குழந்தைகளுமின்றி ஒருவனின் வாழ்க்கை முழுமையடைவதில்லை “ எனக் குறிப்பிடப்படுகிறது. பண்டைய நூல்களில் பதினாறுவித ஸம்ஸ்காராக்களில் ( சோடஸ ) திருமணமும் ஒன்று. பராசரர் காலத்தில் (.கி. மு. 3000 ) திருமணகாலமே வாழ்க்கையின் மைய நிகழ்வாகக் கருதப்பட்டது. எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவளே “ தர்மபத்தினி ” என அழைக்கப்படுகிறாள். முகூர்த்த நூல்களில் கூறப்பட்டுள்ள பதினாறு ஸம்ஸ்காரக்கள் எனும் நிகழ்வுகள் : -
1. நிஷேகம் – முதலிரவு
2. கர்பாதானம் – கருத்தரிப்பு
3. பும்ஸவனம் – கருவுக்குப் பால்பிரிவு தருதல்
4. சீமந்தம் – கருவுக்கு உயிர் அளித்தல்
5. ஜாதககர்மா – தோஷம் நீக்குதல் ( குழந்தைக்கு )
6. நாமகரணம் — பெயர் சூட்டுதல்
7. தோளாரோகணம் – தொட்டில் இடல்
8. அன்னப் பிரஸன்னம் – உணவு ஊட்டுதல்
9. கர்ணவேதம் – காது குத்துதல்
10. சௌளம் – முடியெடுத்தல்
11. அசஷராப்பியாசம் – எழுத்தறிவித்தல்
12. உபநயனம் – பூணூல் அணிவித்தல்
13. விவாகம் – திருமணம் (பிரம்மச்சரியம், குடும்பவிரதம், கன்யாதானம், உத்தானம் (பாணிக்கிரகணம்) சப்தபதி (அம்மிமிதித்தல், அருந்தி பார்த்தல்)
14. நித்தியகர்மா – அன்றாடக் கடமைகள்
15. கிரஹஸ்தாஸ்ரமம் – இல்வாழ்க்கை நடமுறை, வானப்ரஸ்தம் – பற்றற்ற வாழ்வு.
16. அபரக்கிரியைகள் – அந்திமக்கடன்கள் ஆகியவையாகும்.
திருமணத்தைப் பற்றி பேசும்போது 7 ஆம் இடம் மாய உலகைக் கோடிட்டுக் காட்டுகிறது. 7 ஆம் வீடு, எந்த ஒரு வீட்டிலிருந்தும் முடிவுறும் வீடாகிறது. உடல் இலக்னம் எனில் உடல் இணைவுறம் இடமென்று ஏழாம் இடத்தைக் கொள்ளலாம். எனவே திருமணத்தை 7 ஆம் வீட்டுடன் தொடர்புபடுத்தலாம் அல்லவா ? மேலும் 7 ஆம் வீடு காமத் தரி கோணத்தில் அமைகிறது. ஜாதக நிலைகளை ஆராய கீழ்க்கண்ட ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம். இது
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜனன ஜாதகம் ஆகும்.
இதில் களத்திரகாரகன் சுக்கிரன் 2 ஆம் பாவத்தில் உச்சநிலையில் உளளார்.( 7 ஆம் வீட்டுக்கு 8 ஆம் வீடு ). அவருக்கு இடங்கொடுத்த குரு 5 இல் வக்கிரமடைந்து, ஜாதகருக்கு இனியபேச்சு மற்றும் கவிதைத் திறனை அளித்து காதல் உணர்வுகளைக் குறைந்தார். சுக்கிரன் உணர்வுகளை அதிகரித்து, அவர் தன்னுடைய மனைவியைக் தேவியின் அவதாரமாகவும், புனித தாயாகவும் கருதவைத்தார்.
காமத்திரிகோண வீடுகளில், இலக்னத்தில் சூரியன், 7 ஆம் வீடு கிரகமமின்றியும், 5 ஆம் வீட்டில் சாத்வீக குணமுடைய 11 ஆம் அதிபதி குரு அமர்ந்துள்ளார். குரு, 5 ஆம் அதிபதி புதனைப் பார்க்கிறார். 9 இல் உச்சச் சனி, வக்கிரமாகி உள்ளார். சனி இலக்னாதிபதியானதால், அவருடைய பக்தி மற்றும் ஞானமார்க்கத்தை பரைசாற்றுகிறது. மோட்ச ஸ்தானமான 12 ஆம் வீட்டில் 3 ஆம் அதிபதி செவ்வாய் அமர்ந்து அவரை ஞானியாக்கியது.
சுக்
|
ராகு
|
குரு (வ)
| |
லக்,
சூரி,சந், புத(வ)
|
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்
18 – 2 – 1836 – 6 – 44 காலை
கமர்புகுர் – ஹூக்ளி.
மேற்குவங்காளம்
| ||
செவ்
| |||
கேது
|
சனி (வ)
|
சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பரஸ்பரத் தன்மைகள், புனித முனிவரின் உள்மனதைக் குறிகாட்டுகிறது. குருவின், பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ள சந்திரன் கும்பத்தில் அமர்வு மற்றும் அதன் அதிபதி சனி உச்சமாகி தர்ம வீடான 9 இல் இருப்பது அவரின் ஞானசக்தியைக் குறிகாட்டுவதோடு, காமத்தை விட்ட நிலையையும் குறிகாட்டுகிறது.
காலபருஷ தத்துவப்படி 7 ஆம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன், கான்டிகாரகனாகி காம உந்துதலில் சிக்கலைத் தருகிறார். 5 ஆம் வீடு ஆரூட லக்னமாகி அங்கு குரு அமர்ந்திருப்பது தர்மத்தைப் பரப்பப் பிறந்தவர் என்பதைக் குறிகாட்டுகிறது.
கடகம் உபபதா இலக்னமாகி, அதற்கு 7 ஆம் இடத்தில் உச்சச் செவ்வாயின் அமர்வு, அவருடையை ஞானமார்க்கத்திற்கு அவரின் மனைவியும் உதவக் காரணமானது.
ரிஷபம் தாரபதாவாகி, அதற்கு 7 இல் கேது அமர உடல் தொடர்பற்ற மணவாழ்க்கையைத் தந்தது.
7 ஆம் அதிபதி இலக்னத்தில் இடம்பெற்றுள்ளது, சீக்கிர மற்றும் நிலையான திருமண வாழ்வைத் தந்தது. ஜாதகர் தனது 23 வது வயதில் 6 வயதுச் சிறுமி சாரதாவை மணந்தார்.
இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதிக்கு இடங்கொடுத்தவனுமான சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது மணமான நிலையில், தூய்மையான ஞானியாகவும் இருக்கச் செய்தது. சந்திரன் மற்றும் சுக்கிரனின் 2 / 12 நிலை ஞானிக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மையைத் தந்தது.
எனவே, நண்பர்களே ! எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படதன்படி நடந்ததல்லவா ?