Showing posts with label நாடி ஜோதிட ஜாதக ஆய்வு. Show all posts
Showing posts with label நாடி ஜோதிட ஜாதக ஆய்வு. Show all posts

Saturday, July 21, 2018

நாடி ஜோதிட ஜாதக ஆய்வு





நாடி ஜோதிட ஜாதக ஆய்வு 




ஜாதகம் – 33
       கீழ்க் கண்ட கோசார கிரக நிலைப்படி ஒரு ஜாதகரின் நிலையைப் பார்ப்போம்.  ஜாதகரின் 29 வயது முதல் 30 ½ வயதுவரை கோசார சனி மகரத்தில் ஜன்மச் சனியாக அமைந்தது. ஜனன ஜாதகத்தில் கேதுவும் மகரத்திலேயே இருந்தது. இதன் காரணமாக ஜாதகரின் தொழிலில் தடைகள் பல ஏற்பட்டன. மன அமைதியின்மையும் ஏற்பட்டது. செவ்வாய் மகரத்தில் இருந்த போது அந்த நேரத்தில் ஜாதகருக்கு மனதில் சஞ்சலங்களும், பணக் கஷ்டங்களும், தன்னம்பிக்கை இன்மையும், அதன் காரணமாக ஏற்படும் எதிர்பாராத, திடீர் தொழில் பாதிப்புகளும் ஆகிய நிகழ்வுகளால் ஏற்படும் கவலைகளும் உருவாகின. சுக்கிரன் மகரத்தில் நுழைந்த போது அவரது குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகின. அப்போது ஜாதகருக்கு பொறுமையைக் கடைப்பிடிக்கவும், எப்போதும் இறை சிந்தனையில் இருந்து வேண்ட அனைத்தும் நன்மையாக நடக்கும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
செவ்

சூரி,சுக்
புத


உ. ஜா. 33.
கோசாரம்
இராகு

சனி,
கேது






சந்

அதன் பிறகு 1992 ஆம் வருடம் கோசார சனி  ஜனன ஜாதக கேதுவின் பாகையுக் கடந்து, பிறகு குருவின் பாகையைக் கடந்த போது ஜாதகர் கண்டிப்பாக மிக நல்ல பலன்களையே அனுபவிப்பார். தொழில் விருத்தியும், முன்னேற்றங்களும் சிறப்பாக இருக்கும்.
ஜாதகம் - 34        
         மற்றுமொரு ஜாதகர் வந்து கேட்ட கேள்வி நேரத்தின் போது உள்ள கோசார ஜாதகத்தைப் பார்ப்போம்.
         கோசார சனி, ஜனன ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது, சந்திரனைக் கடந்து விட்டது. ஆகையால் ஜாதகர் மீது தேவையற்ற குற்றங்கள் மற்றவர்களால் சுமத்தப்பட்டு பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அத்துடன் அவர் மனதில் தன்னம்பிக்கைஇன்மையையும், வாழ்வில் அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. கோசார குரு ஜனன ஜாதகத்தில் சிம்மத்தில் உள்ள புதனை கடக்கும் போது ஜாதகர் கல்வி நிலையிலும், அறிவுத்திறன் மேம்பாட்டிலும் வெற்றி பெறுவார். கோசார சூரியன் சிம்மத்தைக் கடக்கும் போது, ஜனன ஜாதக்த்தில் புதனும், சூரியனும் பரிவர்த்தனையில் உள்ளதால்  ஜாதகரின் தந்தை வீட்டில் இவரது நங்கைக்கு திருமணம் போன்ற சுப மங்கள காரியங்கள் நடைபெறும். அதாவது ஜாதகரின் 30, 31, 32 வது வயதுகளில் கோசார குரு சிம்மம், கன்னி ஆகிய இராசிகளைக் கடக்கும் போது வீடு, பூமி, சொத்துக்கள் வாங்குதல் போன்ற சந்தோஷ தருணங்களும்,  குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.                                                       
குரு


இராகு

உ. ஜா. 34.
கோசாரம்


சனி
புத(வ)
 சந்,கேது


செவ்
சூரி,சுக்

ஜாதகம் – 35 அ & ஆ.
         இந்த ஜாதகங்களில் அ. ஜாதகரின் ஜனன ஜாதகம் மற்றும் ஆ.  கோசார பிரசன்ன ஜாதகம் ஆகும். ஜனன ஜாதகத்தில் புதன் மற்றும் கேது மகரத்தில் உள்ளது. அவர் வந்த நேரத்தில் கோசாரத்தில் சனி மற்றும் சூரியனும் மகரத்தில். இதில் சனி கேது தொடர்பு ஜாதகரின் தொழிலில் தடைகளைத் தந்தது. புதன்,கேது இணைவு பூமி மற்றும் சொத்துகளில் வழக்கு விவகாரங்களைத் தந்தது. இதன் காரணமாக தொழிலில் முன்னேற்றம் இல்லை, மற்றவர்கள் இவரின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டார்கள். அங்கு சூரியன் இருந்தாலும் பகைவீடு ஆனதால் அரசாங்க உதவிகளும் கிடைக்கவில்லை. கோசார இராகு ஜனன சூரியனை தொட்டபோது ஜாதகரின் தந்தைக்கோ அல்லது மகனுக்கோ ஆபத்து / கண்டம் ஏற்படலாம்.


லக்// சனி
செவ்

சந்
உ. ஜா. 35. அ
இராசி
இராகு

கேது,புத
குரு(வ)
 சூரி

சுக்



         ஜனன ஜாதகத்தில் உள்ள கேதுவை கோசார சனி கடக்கும் காலம் வரை ஜாதகருக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திலும், சம்பாத்தியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். 
         ஜா.35 ஆ வில் கோசார லக்னாதிபதி சந்திரன் மேதாவித்தனத்துக்கு உரிய கன்னி இராசியில் உள்ளார்.  சிம்மத்தில் உள்ள வக்ர குரு தனது பின் நகர்வால் சந்திரனைக் பார்க்க முடியாது.   சந்திரனில் இருந்து 5 ஆம் இடத்தில் உள்ள பரஸ்பர பகை கிரகங்களான சூரியன் சனியும் உள்ளனர். சந்திரனுக்கு 9 இல் எந்த கிரகமும் இல்லை. எனவே, இன்னும் 1 ½ வருடத்திற்கு ஜாதகர் எவருடைய உதவியும் இன்றி இப்படியே காலத்தைக் கடத்த வேண்டிய சூழ்நிலையே எழும்.  அதன் பிறகே அவர் வாழ்வில் இன்பக் காற்றை சுவாசிக்க முடியும்.

  



கேது

உ. ஜா. 35. ஆ
கோசாரம்
லக்///

சூரி
சனி
குரு(வ)
புத,செவ்
ராகு,சுக்



சந்

Thursday, July 12, 2018

நாடி ஜோதிட ஜாதக ஆய்வு



நாடி ஜோதிட ஜாதக ஆய்வு







ஜாதகம் – 30 அ & ஆ



லக்///

செவ்
உ. ஜா. 30.அ
இராசி
இராகு

சந்,கேது
சுக்

குரு
சனி
சூரி,புத

         மற்றுமொரு ஜாதகத்தைப் பார்ப்போம். உச்சம் பெற்ற கர்மகாரகன் சனியால் ஜாதகர் மிக உயரிய பதவியில் இருந்து, சமூகத்தில் கௌரவம், மதிப்பு, மரியாதையுடன் வாழ்பவர் என்பதை அறிகிறோம். சனிக்கு 2 இல் குரு இருப்பது அவர் பார்க்கும் பணியில் மேலும் முன்னேற்றத்தை அளிக்கிறது. கன்னியில் உள்ள சூரியன் + புதன் இணைவுக்கு திரிகோணத்தில் சந்திரனும், கேதுவும் உள்ளனர். இந்த இணைவு ஜாதகர் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடிய, மிகப் பெரிய மேதாவியாக, மறைபொருள் (சந்திரன் + கேது) விஷயங்களையும் அறிந்தவராகவும் இருப்பார் என்பதை உணர்த்துகிறது.



கேது

உ. ஜா. 30. ஆ
கோசாரம்


சனி
குரு(வ)
சூரி, செவ்
ராகு, புத
சுக்




        ஜாதகம் பரிசீலனைக்கு வந்த நேரத்தில் கோசார சனி மகரத்தில் நுழைந்த போது ஜனன ஜாதகத்தில், அங்குள்ள சந்திரன், கேதுவின் மேல் நகர்கிறது. இது சந்திரன், கேது மற்றும் சனியின் இணைவை மகரத்தில் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தாய்வழிச் சொந்தங்கள் இவரோடு சண்டையிடவும், பழி போடுதலும் மற்றும் குற்றம் சுமத்துவதுமாக உள்ளனர்.
         ஜனன ஜாதகத்தில் கீழ்திசை கிரகங்கள் சிம்மத்தில் உள்ள சுக்கிரன், தனுசுவில் உள்ள இராகு ஆகும். இது ஜாதகரின் மனைவி மிகுந்த மனக் கஷ்டத்தில் உள்ளார் என்பதை அறிகிறோம். அவளுக்கு இருக்கும் நோய் மற்றும் வீடு பற்றிய விவகாரங்களில் சண்டை சச்சரவு ஏற்படும்.  

ஜாதகம் – 31 அ & ஆ


சூரி,சுக்
புத




உ. ஜா. 31. அ
இராசி



இராகு
லக்//,குரு(வ)
சனி(வ)








லக்///,கேது

உ. ஜா. 31. ஆ
கோசாரம்


சனி
குரு(வ)
ராகு,
சூரி, செவ்

சுக்,சந்,புத




        ஜாதகம் எண் 31 அ வை பார்ப்போம்.  இந்த ஜாதகத்தில் இலக்னத்தில் கிழக்கு திசை இராசியில் குரு, மற்ற கிழக்கு இராசிகளான மேஷத்தில் சூரியனும், சிம்மத்தில் இராகுவும் உள்ளனர். ஆனால், குருவும், சனியும் வக்கிர நிலையில் உள்ளனர். ஜனன ஜாதகத்தில் குரு + சூரியன் + இராகு இணைவு. ஜாதகத்தில் இராகு உள்ள இடத்தில் கோசாரத்தில் வக்கிர குரு உள்ளார். சூரியனும், குருவும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இதன் காரணமாக ஆண் மகவை குறிகாட்டும் சூரியன், இராகுவினால் பாதிப்பு அடைகிறார். இது ஜாதகருடைய மகன் கடும் இன்னல்களை சந்திப்பதைக் குறிகாட்டுகிறது.
         களத்திர காரகன் சுக்கிரன் கோசாரத்தில் நீச சந்திரனுடன் இருப்பது ஜாதகரின் மனைவியும் கஷ்டங்களை அடைவதையும், அவளுக்கு மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.
         கோசாரத்தில் சூரியனும், இராகுவும் ஒரே பாகையில் உள்ளனர். இதன் காரணமாக ஜாதகரின் மகனுக்கு மரணத்துக்கு இணையான பெரிய ஆபத்து / கண்டத்தைக் குறிகாட்டுகிறது.

ஜாதகம் – 32 அ & ஆ 

கேது,சந்
லக்///



உ. ஜா. 32. அ
இராசி




சனி,புத
சூரி, செவ்

குரு,சுக்


இராகு




லக்///,கேது

உ. ஜா. 32. ஆ
கோசாரம்


சனி,சந்
குரு(வ)
 செவ்,சூரி
புத,ராகு

சுக்




        இந்த ஜாதகத்தில் இராகு தனுசுவில் வந்துள்ளது. ஜனன ஜாதகத்தில் அவ்விடத்தில் தந்தைக் காரகன் சூரியன், சனியுடன் பகை பெற்றுள்ளனர். புதனும், செவ்வாயும் பகை நிலையிலேயே உள்ளனர்.
        கோசாரத்தில் இராகுவுடன் இணைந்து இதே கிரக இணைவுகள் உள்ளன. குருவும், சூரியன் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். ஆனால், குரு வக்ரமாகி உள்ளதால் அவருக்குப் பின்புற பார்வையே உள்ளது. இதன் காரணமாக குருவின் பார்வை கடகத்தில் இருந்து துவங்கி, பணத்தைக் குறிக்கும் சுக்கிரன் இருக்கும் விருச்சிகத்தில் முடிகிறது. இதனால், அவருடைய சகோதரருடன் சண்டை சச்சரவுகள் மற்றும் ஜாதகருக்குப் பணக் கஷ்டங்களும் இருக்கும். வக்ர குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் ஜாதகர் அவரது மகனின் செல்வாக்கால் பெரிய மனிதர்களின் உதவியால் ஜாதகர் இந்த இக்கட்டான சூழ்யிலையில் இருந்து வெளிவருவார்.
         ஜனன ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இது சுக்கிரனும் அவர் நண்பர் செவ்வாயும் இணைந்துள்ளதற்கு சமம். விருச்சிகம் பூமியைக் குறிகாட்டுகிறது. எனவே, ஜாதகரின் கேள்வி பூமி, சொத்து பற்றியமாகவே இருக்கும். கேள்வி நேரத்தில் கோசார இராகு சுக்கிரனுக்கு அடுத்த இராசியில் உள்ளது. எனவே, அந்த சொத்து மிகவும் பழமையானது என அறிகிறோம்.
         ஜனன ஜாதகத்தில் குரு, செவ்வாய் பரிவர்த்தனையினால், சுக்கிரனும் இவர்களுடன் இணைவு பெறுகிறார். இதனால் இந்த வீடு, சொத்துக்கள் தெய்வீக தன்மையுடையதைக் காட்டுகிறது.
         இந்த ஜாதகரின் தந்தைக்கு இரு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. அந்த பரம்பரைச் சொத்துக்கள் மீது வழக்கு விவகாரங்கள் இருந்தன. கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில்   குரு வக்ரம் காரணமாக கடகத்தில் இருந்து சுக்கிரனைப் பார்ப்பதாகக் கொள்ளலாம். எனவே, குறுகிய காலத்திலேயே ஜாதகருக்கு சாதகமான நிலை உருவாகும் எனலாம்.