இலக்ன பலன்கள்.
மேஷம்
இலக்னத்தில் சூரியன் -
உச்சம் பெற்ற சூரியன் சொத்துக்களையும், நல் அதிர்ஷ்டத்தையும், கௌரவத்தையும், வாழ்க்கையில்
நல்ல உயர்வான நிலையையும் தரும். மதிப்பு, மரியாதை
மிக்க வாழ்க்கை அமைவதற்கான சக்தியையும் அளிக்கிறான். குழந்தைகள் மூலமான நன்மைகள்
ஏற்படும். புத்திசாலித்தானம் மிக்கவராக, கற்றறிந்தவராக
ஆக்கிவிடுகிறது. குடியிருப்பு மாற்றங்கள் ஏற்படும். எதிரிகளை வெல்லக் கூடிய அதிக
சக்தியை அளிக்கிறான். வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இழப்புகளையும், செல்வ நிலை, தொழில் நிலை, பதவி
ஆகியவற்றில் திடீர் சரிவுகளையும் தரும். ஜாதகர் மற்றவர்களுக்கு உதவிகரமாக
இருப்பார். சீரற்ற இதயத் துடிப்பினால், இரத்த
ஓட்டமும் சீரற்றதாக இருக்கும். பித்த ரோகமும் இருக்கும்.
மேஷம் இலக்னமாகி சந்திரன் இருக்க --
மேஷ இலக்னத்தில் சந்திரன் ஜாதகரை மிக்க அதிர்ஷ்டசாலியாகவும், சொத்துக்களை உடையவராகவும்,
மதிப்புக்கு
உரியராகவும், மரியாதை, கௌரவத்துக்கு
உரியராகவும் நிலையை உயர்த்திவிடுகிறது. நன்கு கற்றவராகவும், குழந்தைகளால் நன்மை அடைபவராகவும் ஆக்கிவிடுகிறது.
இவருக்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் இருக்கும். மத்திய வயதில்
சூரியனைப் போன்றே இவரும் நேர் எதிர் மாற்றங்களைத் தருகிறார். வெளிநாட்டுப் பயணம், கண்கள் பாதிப்பு, உறவுகளின் மூலமான இழப்பு, பொதுவாக தாய்வழி உறவுகள் மூலமான இழப்புகள் ஏற்படும். வாழ்க்கையில்
எதிர்பாலரால் ஏற்படும் தாக்கம் அதிகமான இருக்கும்.
மேஷம் இலக்னமாகி செவ்வாய் இருக்க –
மேஷ இலக்னத்தில் செவ்வாய்
இருக்க நல்ல ஆளுமையுடைய நிர்வாகியாக இருப்பார். நிலப் பிரபு,
சொத்துக்களை உடையவர், வாழ்க்கையில் முழு
வெற்றி அடைவார். அரசாலும் மக்களாலும் மதிக்கப்படுவார்.
நல்ல பேச்சாளர்களாகவும், சிறந்த ஆலோசகராகவும்
இருப்பர். உடலில் காய அடையாளம் அல்லது மச்சம் இருக்கும்.
மேஷம்
இலக்னமாகி புதன் இருக்க
மேஷ இலக்னத்தில் புதன் இருக்க ஆரோக்கியக்
குறைவு ஏற்படும். துர்குணம் உடையவர், சரியான சாப்பாட்டு இராமனாக
இருப்பார். பொய்யர், சண்டைக்காரர், ஆனால், ஜோதிடம்
மற்றும் மறைபொருள் விஞ்ஞானத்தில் ஆர்வம் உடையவராக இருப்பர். இவரது
மனைவி பேரழிகியாக இருக்கமாட்டார். குணமும் கேள்விக்கு
உரியதாவே இருக்கும். பூர்வீக சொத்துக்களை அழித்துவிடுவார்,
மேஷம்
இலக்னமாகி குரு இருக்க
மேஷ இலக்னத்தில் குரு இருக்க
மதத்தின் மீதும், மத குவின் மீதும் மரியாதை உடையவராக
இருப்பார். கற்றவர், அனைவராலும்
மதிக்கப்படுபவர், அறிவாளி, அரசில்
உயர்பதவிகள் வைக்கக் கூடிய தகுதி உடையவர். உண்மையானவர்.
குணக்குன்றாய் இருப்பார். இரக்க முணமும்
உடையவர். மக்களுக்காகப் பொதுச் சேவையில் ஈடுபாடு உடையவர்.
மேஷம்
இலக்னமாகி சுக்கிரன் இருக்க –
வாகன யோகம், சொத்துக்கள் உடையவர்.
இனிய பேச்சு உடையவர். எதிர் பாலரிடம் உறவுகள்,
அதிக பெண்குழந்தைகள் உடையவர். பயணங்கள் மற்றும்
வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மத்திம வாழ்க்கையில்
இந்த நிலைகள் தலைகீழாக மாறலாம். பணவிஷயமான வழக்கு
விவகாரங்கள் ஏற்படலாம். கண்ணில் பிரச்சனைகள் ஏற்படும்.
மேஷம்
இலக்னமாகி சனி இருக்க –
மேஷத்தில் சனி நீசமாகி ஜாதகரின்
வாழ்க்கையை கஷ்டம் நிறைந்ததாகச் செய்கிறார். வெற்றிகள் கிடைக்காத
நம்பிக்கைகள், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள். பூர்வீக சொத்துக்களை அழித்துவிடுவார். தூர பயணங்கள்
ஏற்படும். பொறாமை குணம் உடையவராய் இருப்பார். உறவுகளுடனான உறவு சுமுகமானதாக இருக்காது. சனி,
ஜாதகரை கர்வம் மிக்கவராகவும், நம்பிக்கை
அற்றவராகவும், தாயை எதிர்ப்பவராகவும் ஆக்கிவிடுகிறது.
மேஷம்
இலக்னமாகி இராகு அல்லது கேது இருக்க –
மேஷ இலக்னத்தில் இராகு
அல்லது கேது அசுப கிரக தொடர்பு இன்றி இருக்க ஜாதகர் மரியாதை, கௌரவம்
மிக்கவராகவும், சொத்துக்களை உடையவராகவும், வாழ்க்கையிலும், இராணுவத்திலும் உயர்பதவி
வகிப்பவராகவும் இருக்க ஆசிர்வதிக்கப் படுகிறார். தைரியமும்,
ஆணையிடும் ஆற்றலும், ஆளுமையும் உடையவராகிறார்.
வாகனங்களும், அதிர்ஷ்டங்களும் தொடர்ந்து
வருகின்றன. ஆனால், பார்வையாலோ, சேர்க்கையாலோ அசுப கிரக தொடர்பு ஏற்பட்டால் இதற்கு எதிர் மாறான பலன்களே
ஏற்படும்.