கூடலின் நாயகனே !
கூடலின் நாயகனே – எங்கள்
குடும்பத்தின்
காவலனே
!
மதுரவல்லி மணாளனே – மங்கை
ஆண்டாள் காதலனே !
பாடலின் நாயகனே – யென்றும்
பக்தர்
குறைதீர்ப்பவனே.
அருள்வாயப்பா, பெருமாளப்பா,யிருள் நீக்கி
யொளி சேர்க்க
வருவாயப்பா ;
ஒருநாளில்லை,யிருநாளில்லை,பலநாளாய்ப்
பதம்
பணிந்தோம்,குறைதீரப்பா ;
வருநாளெல்லாம் திருநாளென்றே,நிறைதரு
முனைப்
பணிந்தோம்,நிகர்யாரய்யா ;
திருக்கோலத்தை,யிருகண்களாற் பருகியே
மனமகிழ்ந்தோ
மெழில் நீயப்பா.
(அருளவாயப்பா)
வலம் வந்ததும்,நிலம் வீழ்ந்ததும்,வரங்கேட்டு
வழிகாட்ட
முறையிட்டதும் ;
குலம் வாழவும்,குறைதீரவும் “கோபாலா”
யென்றுறக்கக்
கூப்பிட்டதும் ;
கலங்காதவோர்,மனம் வேண்டியே “கண்ணா” யெனக்
கூவி யுனை
யழைத்ததும் ;
உலகளந்தவா,உடன் வந்தெனை,உயர்வான
ஓரிடத்தை நீ
காட்டியே.
(அருள்வாயப்பா