உ
உங்களுடைய
இராசிபலன் இன்று எப்படி ?
01/12/2014
மேஷம் -- உறவுகள்
செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது
நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்குக் கடின உழைப்பு தேவை.
ரிஷபம் -- தனலாபம் அதிகரிக்கும்.
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள்.
எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
மிதுனம் --- புனிதப்
பயணங்கள்,
கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும்.
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும்.
அரசு ஆதரவு உண்டு.
கடகம் --- இன்பம்
மிகுந்த நாள். மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள்
வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும்.
தனலாபம், ஏற்படும்.
சிம்மம்
– இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண்வழக்குகளை
ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.
கன்னி – பல வழிகளிலும்
பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும்.
அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக்
கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
துலாம் – வியாபாரத்தில்
தனலாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும்
நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர்
கூடி பேரின்பங்காண்பர்.
விருச்சிகம் – திறம்படச்
செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தனுசு – தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின்
உடல் நிலையில் அக்கறை தேவை.
மகரம் – மனத்தெம்பும்
மகிழ்ச்சியும் பெருகும் நாள்.
குழந்தைகள்
மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள்.
தன்னம்பிக்கை கூடும்.
கும்பம்
– இன்று
தனலாபம்,
குடும்பத்தில் நிம்மதி ஆகியவை……………… குறையும்.
மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.
மீனம்
– தங்கள்
சம்பாத்திய நிலை உயரும். மிகவும் கடினமான செயல்களைக் கூட எளிதாக,
வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின்
பாராட்டுதலைப் பெறுவீர்கள்.