Showing posts with label குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கன்னி. Show all posts
Showing posts with label குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கன்னி. Show all posts

Saturday, August 4, 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கன்னி





குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கன்னி





கன்னி


( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
      புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட நல்லவரும், பெற்றோரை அன்போடு பேணிக்காப்பவரும், தருமவானும், இரக்க குணமும் உடையவரான கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயரச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குருதைரிய பாவமான விருச்சிகத்துக்கு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும். பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே சிறப்புத் தரும். சகோதர, சகோதரிகளினால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களின் நயவஞ்சகத்தனத்தால் ஏமாற்றப்படுவீர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. புதிது புதிதாக தேவையற்ற செலவுகள் வந்து கைப்பணம் கரையும். தொழில் வளர்ச்சிக்காகச் கூடுதலான முதலீடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை எழும். முதலீடுகளை தவிர்ப்பது பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களுக்குப் பிறகே சாத்தியமாகும். எவரையும் நம்பி பிணைக் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்.   அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். உறவுகளும் பகையாகும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள்  அதிகரிக்கும். தான தர்மமென தர்மச் செலவுகள் அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்களான அலைபேசி போன்றவற்றில் அதிக காலம் செலவழிப்பதால், கல்வியில் ஈடுபாடு குறைந்து, கழுத்து வலியே மிச்சமாகும்.  சிலருக்கு, கௌரவ பங்கம், ஊரார் சிரிக்கும் அளவுக்கு அவமானங்கள் ஏற்படும். முரடராய் இருந்தாலும், தைரியமற்ற கோழை ஆகிவிடுவார். சந்தோஷமற்ற, குறிக்கோளற்ற அலைச்சல்களால் சரீர களைப்பு ஏற்படும்.

       குரு தனது 5 பார்வையாக களத்திர பாவத்தை பார்வையிடுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன தோழர்கள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். சேவைகள் மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே காதலும், பாசமும் கரைபுரண்டு ஓடும். காதல் விவகாரங்கள் கல்யாணத்தில் முடியும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம்.
        குரு 7 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் சென்று தெய்வீக அருளைப் பெறுவீர்கள். தந்தையின் புகழ் ஓங்கும். பிள்ளைகளின் மீது காட்டும் அதிக அன்பால் அவர்கள் மனம் மகிழும். தாயாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தந்தை வழி சொத்துக்களில்  ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து சாதகமாய் அமையும். தந்தை  மூலமான எதிர்பாராத ஆதாயங்கள் இருக்கும். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய  அம்மாவாசை படையல்களை முறையாகச் செய்துவர சந்ததிகள் வளம் பெருகும்.
        குரு 9 ஆம் பார்வையாக இலாப பாவத்தைப் பார்ப்பதால் கலைத் துறையினர், ஆடம்பர பொருட்களை விற்பவர்கள், இனிப்பு தயாரிப்பாளர்களின் விற்பனை சூடு பிடித்து இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின்  முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் காரணமாக அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் தங்கள் திருமண வயது எய்திய பிள்ளைகளுக்குத் திருமணங்கள் ஏற்பாடாகி, மங்கள காரியங்கள் நிறைவேறும். புதிதிர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம் ஏற்படும்.


 கன்னி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். சுவர்ண மூர்த்தியாகி விளங்குவதால் பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி அதிக சுப பலன்கள் ஏற்படும். 80%

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.