Showing posts with label நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.. Show all posts
Showing posts with label நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.. Show all posts

Thursday, May 10, 2018

நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.





நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.



         பொதுவாக கிரகங்கள் தங்கள் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் இருக்கும் போது பலம் மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
1.   ஆனால், அவை நட்பு, ஆட்சி, உச்ச வீட்டில் இருக்க அதற்குப் பின்போ அல்லது அடுத்தோ பகை கிரகங்கள் இருக்க அந்த கிரகம் தனது முழு சுப பலனை வழங்க இயலாது.
2.   பகை கிரகங்கள் பின்பும், அடுத்தும் இருக்கும் போது இந்த நட்பு, ஆட்சி, உச்ச கிரகம் நடுநிலை அல்லது சமநிலையில் செயல்பட்டு அதன் காரணமாக அவற்றால் நல்ல அல்லது தீய பலன்களை செய்ய முடியாமல் போகிறது. 
3.   ஒரு சுப கிரகத்தின் இரு புறமும் பகை கிரகங்கள் இடம் பெற, சுபக் கிரகம் தரும் சுபலன்கள் தடைப்படுகின்றன.
4.   வக்கிர கிரகம் இருக்கும் இராசிக்கு  அடுத்த இராசியில் அதன்  பகை கிரகம் இருக்க முதல் இராசியில் உள்ள கிரகம் (வ) பாதிப்பு அடைந்து அசுப பலனே தருகிறது.
5.   ஒரு வீட்டினால் ஏற்படப் போகிற நிகழ்வுகள் முதலில் எதிர் பாவம் மூலமாகவும், அதன்பின் அந்த பாவத்திற்கு முன் பின் இராசிகள் மூலமாகவும் நமக்கத் தெரியவருகிறது.  அதே போல் முதலில் 7 ஆம் பார்வை சக்தி மிக்கதாகவும் பிறகு 2 மற்றும் 12 ஆம் பார்வையும் பலம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.
6.   ஒரு கிரகம் உச்சமாகி, தனது உச்ச ஸ்தானத்தில் இருந்தாலும் அதற்கு 7, 2, 12, 5 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லையெனில் அந்த கிரகம் தனது முழுப் பலனை தராது குறைவான பலனையே தரவல்லது.
7.   கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு அல்லது எந்த நிலையில் இராசியில் இருந்தாலும் அதற்கு 2, 5, 7, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் ஒரு கிரகமேனும் இருக்க அந்த கிரகங்கள் பலன்களைத் தரும்.
8.   இரு குறிப்பிட்ட இராசியில் இருக்கும் கிரகத்துக்கு 2, 5, 7, 12 கிரகங்கள் இல்லை எனினும் அது மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் அது செய்யும் மாயங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
9.   இரு கிரகங்களில் அஸ்தமனம் ஆன கிரகம் கூட பரிவர்த்தனை பெற வியக்கத்தக்க பலன்களை அள்ளி வழங்கும்.
10.   அஸ்தமனமான கிரகத்தொடு உள்ள கிரகம் நட்பு கிரகமானால் அஸ்தமனமான கிரகத்தின்  பாதிப்பு வெளித்தெரியாது.
11.  ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமும் ஆனால் அதன் உச்ச நிலை நீங்கிவிடுகிறது. மேலும், உச்சமாகி, வக்கிரமான கிரகம் தனக்கு 12 இல் ஒரு பகை கிரகத்தைக் கொண்டிருந்தால் பயம் தரக்கூடிய உச்ச, வக்ல கிரகமாய் இருக்கும். அதே போல் உச்ச, வக்கிர கிரகம் தனக்குப் 2, 7, 12 இல் பகைக் கிரகத்தைப் பெற்று இருந்தால் உச்ச கிரகம் தனது உச்ச தன்மையில் முழுமை பெற்று இராது..
12.  12 பாவங்களில் எந்த ஒரு பாவத்தில் இருக்கும் கிரகத்துக்குப் 12 இல் அதன் பகை கிரகம் இருந்தால் இந்த இரு கிரகங்களுமே சுமாரான பலனையே தரும். ஆனால், இந்த 12 இல் இருக்கிற பகை கிரகம் வக்கிர கிரகம் ஆகி இருந்தால் அடுத்து உள்ள கிரகம் சுப பலன்களையே அளிக்கும்.
13.  இரு கிரகங்களில் அதிக பாகையில் நிற்கும்  கிரகம் பகை கிரகமாகி, வக்கிரமும் ஆனால், குறைந்த பாகை கொண்ட கிரகம் மிகச் சுமாரான பலன்களையே அளிக்கும்.
14.  பரிவர்த்தனை பெற்ற இரு கிரகங்களில் ஒன்று நீச கிரகமானால் பரிவர்த்தனை யோகத்தால் நீசம் பங்கமாகிறது.  அல்லது நீச கிரகத்துடன் நட்பு கிரகமோ, சுப கிரகமோ அமர்ந்தாலும் அல்லது அதற்கு 7 மற்றும் 5 ஆம் வீடுகளில்  கிரகம் இருக்கவும் அல்லது பார்வை செய்யவும் அந்த கிரகத்தின் நீசம் பங்கமாகும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விதிகளுக்கான விளக்கங்களைக் கீழே காணலாம். –

ஜாதகம் - 1

புத, சுக்
செவ்
சூரி,
இராகு



உ. ஜா. 1
குரு



சந்
சனி, கேது

  
       இந்த ஜாதகத்தில் (1) சூரியன் உச்சம் பெற்று இராகுவால் கிரகணமாகி உள்ளதால் தன் சக்திகளை இழந்து தேவையான பலனை தர முடியாதவர் ஆகிறார். (இதை சரிபார்க்க ஜாதகரின் கைரேகையைப் பார்த்தால் சூரிய மேட்டில் பாம்பு போன்று வளைந்த ரேகை தெரியும்)
       சூரியனுக்கு எதிர் பாவமான 7 ஆம் பாவத்தில் அவரின் பகைவன் அமர்ந்துள்ளதால் மேலும் வலுவிழந்தவர் ஆகிறார்.  சூரியன், இராகு இணைவால் ஜாதகரின் தந்தைக்கு கஷ்டங்களும் ஆபத்துக்களும் நிகழ்வதோடு, 5 ஆம் இடமும் இந்த இணைவால் கெடுவதால் புத்திர பாக்கியத்திலும் பிரச்சனை எழுகிறது. சுக்இரனும் சந்தேகத்துக்கு இடம்மின்றி உச்ச நிலையில் உள்ளார். கிரக பாகை வரிசைப்படி கீழ்க்கண்ட நிலைகளில் செவ்வாய், சுக்கிரன், புதன் ( நீசம் ) உள்ளனர். செவ்வாயும் புதனும் அதிக பகை உள்ள கிரகங்களாகி, சுக்கிரன் நடுவில் இடம் பெற்றுள்ளார். இதனால் சுக்கிரனின் உச்ச பலம் பாதியாகக் குறைகிறது. இதன் காரணமாக சகோதரர்களுக்குள் (செவ்வாய்) செல்வம், சொத்துக்கள் காரரணமாக (சுக்கிரன்) அடிக்கடி சண்டைகள் வெடித்து, குடும்பத்தில் வழக்குகளும், மனக் குழப்பங்களும் ஏற்படுகிறது. இரண்டு போராடும் கிரகங்களுக்கு இடையே (செவ்வாய், புதன் ) மாட்டிக்கொண்ட மனைவி, சகோதரிகளைக் குறிகாட்டும் சுக்கிரன் அவர்கள் முன்னேற்றத்தில் அதிக தடைகளைத் தருகிறார்.
         தொழிலைக் குறிக்கும் சனி உச்சம் ஆனால் அவர் பதவி ஏற்பு மற்றும் விடுதலையைக் குறிக்கும் சனிக்கும் பகைவனான கேதுவுடன் இணைந்து, எதிரி சூரியனால் பார்க்கப்படுவது சனியின் பலன் தரும் சக்தியை மிகவும் குறைத்துவிடுகிறது. சந்திரனும் நீசமாகி சனிக்கு இரண்டில் உள்ளதால் ஜாதகருக்கு மிக அருமையான வேலை கிடைத்த போதும், நீழ்த்தரமான, குறுகிய மனம் கொண்டவர்களால் ( நீச சந்திரன் ) அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகி, கெட்ட பெயர் எடுத்து, மனம் நொந்து  அதன் காரணமாக இரண்டு வேலைகளை விட்டுவிட்டார். இவருக்குத் தொழிலில் தொடர்ந்து தொல்லைகளும், அடிக்கடி மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.

         உச்ச குருவுக்கு 2, 12, அல்லது 7 இல் கிரகங்கள் இல்லாத காரணத்தால் 

ஜாதகருக்கு சமூக அந்தஸ்து, உடல் ஆரோக்கியம், ஒளிமயமான வாழ்க்கை 

ஆகியவற்றை தந்து அருள்பாலிக்கும் நிலையில் அவரும் இல்லை. குருவுக்கு 5 இல் நீச 

சந்திரன் ( கேதுவுக்கு மிக அருகே துலாத்தில் ) உள்ளார், இதன் காரணமாக குரு 

ஜாதகருக்கு எந்தவித நன்மையையும் தர முடியாத பலம் இழந்த நிலையில் உள்ளார்.