Showing posts with label “ முத்துக்குமரா ”. Show all posts
Showing posts with label “ முத்துக்குமரா ”. Show all posts

Saturday, September 29, 2012

“ முத்துக்குமரா ”






முத்துக்குமரா யெனக் கத்துங்கடல் !


முத்துக்குமரா யென்று கத்துங்கடலே – அந்த
சத்தங்கேட்டு,ஷண்முகனைக் கூவும் மயிலே !
செந்திலதிபா யென்று,சேவற்கூவுமே – உனைச்
சிந்திக்கின்ற பக்தருள்ளம் மெய்மறக்குமே !
                                    (முத்துக்குமரா)
தித்திக்கின்றதே  நாவும் தித்திக்கின்றதே – உனை
பக்தியோடு,சிரத்தையோடு பாடும்போதிலே ;
சக்தி வந்ததே புது சக்தி வந்ததே – நாளும்
ஷண்முகனின் பொன்னடியைத் தேடும்போதிலே .
                                    ( முத்துக்குமரா )
என்றுமின்பமே  நெஞ்சி லென்று மின்பமே – வொரு
கன்றினைப்போற்,தாயினருட் பாலருந்தவே ;
குன்றவில்லையே யின்பங் குன்றவில்லையே – அந்தக்
குன்றிலாடுங் குமரன் குரல் கேட்குஞ் செவிக்கே !
                                     ( முத்துக்குமரா )