Showing posts with label ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்.. Show all posts
Showing posts with label ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்.. Show all posts

Saturday, November 22, 2014

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்.

       எவனொருவன் இந்த உலகத்தில் கஷ்டங்கள் நிறைந்த சம்சார சாகரத்தை சுலபமாகக் கடக்க விரும்புகிறானோ, அவன் பகவத்கீதையெனும் படகின் உதவியுடன் சுலபமாகக் கடந்துவிடமுடியும்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்.

       ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் என்பது இரண்டாவது திருமணம் மட்டுமன்றி, இரண்டாவது அல்லது அதிகப் பெண்களுடன் மணமுடித்துக் குடும்பம் நடத்துபவர்களைக் கூட ஜாதகப் பொருத்தம் பார்க்க வரும் போது ஆய்வு செய்து அறிய வேண்டியது ஜோதிடரின் கடமையாகிறது. ஏனெனில், நமது பாரதத்தில் உடலளவிலும், மனதளவிலும் புனிதமாக இருக்கும் ஆண், பெண் இருவரையும் இணைத்து வாழ வைக்கும், புனிதச் சடங்கு திருமணமாகும். அந்த வாழ்க்கை அமைதியாகவும், தர்மத்துடனும், புனிதமாகவும் இருக்கும்படியாக அமைய, ஜாதகப் பொருத்த ஆய்வு மிகமிக முக்கியமாகிறது. அதிலும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமண யோகமுடையவர்களை ஆய்வுமூலம் காண்பது அவசியமாகிறது.

       கீழ்க்கண்ட இணைவுகள், ஒன்றுக்கு மேற்பட்ட திருமண இணைவுகளுக்குக் காரணமாகின்றன ----

1.   7 ஆம் அதிபதி அஸ்தமனமாக, நீசமாக (பங்கமாகாமல்) அல்லது பகைவீட்டில் பலம் இழந்து நிற்கவும்.

2.   7 ஆம் அதிபதி அசுப இராசியில் நிற்க அல்லது அசுபரால் பார்க்கப்பட, பாதிக்கப்பட அல்லது 7 இல் புதன் அல்லது சனி இருக்கவும்.

3.   இலக்னாதிபதி 8 இல் இருந்து, 7 இல் செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி இருக்கவும்.
4.   உபய இராசியில் சுக்கிரன் இருந்து, அதன் அதிபதி உச்சராசியில் இருக்க மற்றும் 7 ஆம் அதிபதி பலமற்று இருக்கவும்.

5.   இலக்னாதிபதி, 7 ஆம் அதிபதி, களத்திர காரகன் சுக்கிரன் உபய இராசிகளில் இடம் பெறவும்.
6.   8 ஆம் அதிபதி இலக்னத்தில் அல்லது 7 இல் இடம் பெறவும்.

7.   இலக்னாதிபதி 6 இல் இருக்கவும்.

8.   2 ஆம் அதிபதி 6 இல் இருக்க மற்றும் 7 இல் அசுபர் இடம் பெறவும்.



லக்//
இராகு

செவ் குரு


குரு
இராகு
சூரி


இராசி
பெண்
21-8-1930.
09-22 இரவு
சந்
புத


நவாம்சம்
சுக்

சூரி

சந்
சனி()
சனி ()

கேது
புத,சுக்

லக்//
செவ்
கே



சனி இருப்பு – 17 6 மா 27 நாள்.

4, 5 மற்றும் 8 ஆம் விதிகளுக்கான உதாரண ஜாதகம்

       மேஷம் இலக்னமாகி, 7 ஆம் அதிபதி சுக்கிரன் 6 இல் இருக்கிறார். 11 ஆம் அதிபதி சனியின் பார்வை பெறுகிறார். செவ்வாயும், சுக்கிரனை 4 ஆம் பார்வையால் பார்க்கிறார். சுக்கிரன் மீதான சனியின் பார்வை பாதிக்கிறது. இங்கு களத்திர காரகன் சுக்கிரன் 7 ஆம் அதிபதியும் ஆகிறார். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கான இணைவு குறிகாட்டப்படுகிறது. திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தம்பதிகள் 2 குழந்தைகளோடு 1976 இல் பிரிந்து 1978 இல் விவாகரத்துப் பெற்றனர். இந்த சில நேரங்களில் மறுமணம் தவிரப் பிரிவை மட்டுமே  காட்டலாம். இன்னும் சில களந்திர மரணத்தாலோ, விவாக ரத்தாலோ கூடப் பிரிவைத் தரலாம். எனவே, இந்தக் கண்ணோட்டத்திலும் ஜாதகம் அலசப்பட வேண்டும்.

9.   சுபருடன் கூடிய 7 ஆம் அதிபதி தனது பகை இராசியில் அல்லது நீச இராசியில் இருக்க மற்றும் 7 ஆம் இடத்தில் அசுபக் கிரகம் இடம்பெறவும்.

10.  அசுபருடன் கூடிய களத்திர காரகன் பகை இராசியில் இருக்க அல்லது நவாம்சத்தில் கிரகணமாக.

11.  மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுபக்கிரகங்கள் 7 ஆம் இடத்தில் இடம் பெறவும்.

12.  இரண்டாம் அதிபதியால் பார்க்கப்படாத, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுபக் கிரகங்கள் இரண்டில் அமரவும்.

13.  இதேபோல், 7 ஆம் அதிபதியால் பார்க்கப்படாத மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுபக் கிரகங்கள் ஏழில் அமரவும்.

14.  1, 2 மற்றும் 7 இல் அசுபர் இருக்க மற்றும் 1 இல் 7 ஆம் அதிபதி நீசமாக அல்லது அது பகை இராசியாகவோ அல்லது கிரகணமாக.

செவ்
புதன்
சுக்
குரு



செவ்

சுக்,சூரி
கேது
சூரி
. ஜா. 2.
இராசி
7 – 3 – 1953
7-15 இரவு
இராகு
லக்//


நவாம்சம்

கேது




சந்
சனி()
லக்//
இராகு
சனி,
குரு
சந்
புதன்


சனி தசா இருப்பு 8 7 மா 22 நாள்

      உதாரண ஜாதகம் 2 இல் ( விதி – 6 ) ஜாதகர், 1979 ஆம் வருடம் அக்டொபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு இவரின் மனைவி அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, பிரசவத்தில் மரணம் அடைந்தாள். பின்னர் 1993 இல் ஜாதகர் ஒரு விதவையை மணந்துகொண்டார்.

      இந்த ஜாதகத்தில் இலக்னாதிபதி புதன், 8 ஆம் அதிபதி அசுபர் செவ்வாயோடு இணைந்து, உபய இராசியான 7 இல் இருக்கிறார். இது  ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைக் காட்டுகிறது.. 7 ஆம் அதிபதி குரு 8 இல் இருப்பது, நீடித்த நிலைக்காத முதல் திருமணத்திற்குக் காரணமாகிறது.

15.  உச்சம் பெற்ற கிரகம் இலக்னத்தில் இருக்க அல்லது இலக்னாதிபதி தனது உச்ச இராசியில் இடம்பெறவும்

16.  பலம் பொருந்திய சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைந்திருக்கவும்.

17.  இலக்னாதிபதி, 2 ஆம் அதிபதி, 6 ஆம் அதிபதி ஆகியோர் அசுபருடன்  7 ஆம் இடத்தில் இணைந்திருக்கவும்.

18.  7 ஆம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்தில் அதாவது 9 ஆம் இடத்தில் பலம் மிக்கச் சந்திரன் இருக்கவும்.

19.  7 ஆம் அதிபதி சனியாகி அவருடன் அசுபக்கிரகம் இணைந்து இருக்கவும்.

20.  2 மற்றும் 12 ஆம் அதிபதிகள் 3 இல் இருந்து அவரை குரு அல்லது 9 ஆம் அதிபதி பார்க்கவும்.

21.  பலம் மிக்க 7 ஆம் அதிபதி கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ அல்லது சுபவர்க்கத்திலோ இருந்து 10 ஆம் அதிபதியின் பார்வை பெறவும்.

22.  7 ஆம் அதிபதி மற்றும் 11 ஆம் அதிபதி இணைந்து இருக்க அல்லது பரஸ்பர பார்வை புரியவும்.

23.  நவாம்சத்தில் 7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் சுபருடன் இணைந்து பர்வதாம்சத்திலோ அல்லது அதைவிட உயர்வான வர்க்கத்திலோ அல்லது மிகவும் பலத்துடன் திகழவும்
.
24.  7 ஆம் அதிபதி பலம் இழந்தவராக இருக்க மற்றும் 7 ஆம் வீட்டில் அசுபர் இருக்க அல்லது 7 ஆம் வீட்டை அசுபர் பார்க்கவும்.

லக்//
குரு



கேது
சந்

சூரி

.ஜா. – 3.
இராசி
23/8/1952.
இரவு 09-14
புத,
கேது
லக்//


நவாம்சம்
சனி
இராகு
சூரி
சுக்
புதன்
செவ்

செவ்

சந்
சனி
குரு
சுக்

இராகு

சந்திர தசா இருப்பு –8 7 மா 28 நாள்.

       இந்த உதாரண ஜாதகம் 3 இல் 5 ஆம் அதிபதி சந்திரன் மற்றும் 7 ஆம் அதிபதி புதன் பரிவர்த்தினை பெற்றுள்ளனர். அசுப சனியுடன் , சந்திரன் உபயராசியான 7 ஆம் இடத்தில் உள்ளார். மேலும் சனி 11 ஆம் இடத்துக்கும் அதிபதியாக உள்ளார்.

       இந்த ஜாதகி 1990 இல் மணம் முடித்தார். இவளது கணவன் 1995 இல் இவனோடு பணிபுரிந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தார். 1998 ஜனவரியில் அவளோடு புது வீட்டில் வாழ்ந்து, அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. விதி எண் 24 – இந்த ஜாதகத்திற்கு ஒத்து வருகிறதல்லவாஇந்த ஜாதகியின் மணவாழ்வு பாதிப்பு அடைந்தது. ஆயினும் இப்பெண் விவாகரத்துச் செய்யாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

       இலக்னம், சந்திரன், இலக்னாதிபதி, 7 ஆம் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகியவற்றின் மீதான உபயராசியின் ஆதிக்கம் உண்மையாகவே மணவாழ்க்கையின் மாறுபட்ட நிலைகளுக்குக் ( பிரிவுஉறவு முறிவு ) காரணமாகிறது. இதுவே, முதல் மனைவி இருக்கும் போதே, வேறு ஒருத்தியுடன் வாழக்காரணம்.

25.  2 ஆம் அதிபதி பலமற்றவறாகி மற்றும் 2 ஆம் இடத்தில் அசுபர் இருக்க அல்லது பார்க்கவும்.

26.  இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி தங்கள் நீச இராசியில் இருக்க, பகை இராசியில் இருக்க அல்லது நவாம்சத்தில் கிரகணமாகி இருக்கவும்.

27.  7 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தில் அசுபர் இருந்து 12 இல் செவ்வாய் இடம் பெறவும்.




லக்///
செவ்


குரு
கேது

புதன்
கேது
.ஜா. – 34
இராசி
19/9/1960.
இரவு 11-48

சூரி


நவாம்சம்


சந்
இராகு
லக்//

குரு
சனி


சூரி,சுக்
புத

செவ்
இராகு
சந்,சனி
சுக்

        1998 ஆம் வருடம் பிரசவத்திற்கு, பிறந்த வீட்டிற்குச் சென்ற ஜாதகரின் மனைவிக்கு  ஆண் குழந்தை பிறந்த கையோடு அங்கேயே தங்கிவிட்டார். தனக்கென ஒரு வேலையை அங்கேயே தேடிக் கொண்டு ஜாதகரைப் பிரிந்துவிட்டார்.

       விதி எண் 5 – 7 ஆம் அதிபதி, களத்திர காரகன், இலக்னாதிபதி ஆகியோர் உபய இராசியில் இடம் பெற ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது பிரிவினை ஏற்படும்.

       விதி எண் 22 – 7 ஆம் அதிபதி மற்றும் 11 ஆம் அதிபதி இணைந்திருக்க அல்லது பரஸ்பர பார்வை பெறவும் இந்நிலை ஏற்படும்.

       இந்த ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி குரு, இலக்னாதிபதி புதன் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகியோர் உபய இராசியில் உள்ளனர். மேலும், அதிக கிரகங்கள் உபய இராசியிலேயே உள்ளன. விதி எண் 22 இன் படி 7 ஆம் அதிபதி குரு மற்றும் 11 ஆம் அதிபதி செவ்வாயைப் பரஸ்பர பார்வை புரிகிறார். மேலும் அதே செவ்வாய் களத்திர காரகன் சுக்கிரனையும் பார்க்கிறார். அத்துடன் உபய இராசியில் உள்ள சனியும் சுக்கிரனைப் பார்க்கிறார். சனியும், செவ்வாயும் சேர்ந்து பார்க்கும் இடம் கொடும் என்பதால் 4 ஆம் பாவமான சுகஸ்தானமும் கெட்டது. எனவே, மணமுறிவு ஏற்பட்டது.



வல்லமை தாராயோ பராசக்தி இந்த – மானுடம் பயனுற வாழ்வதற்கே.