Showing posts with label பாவகாரகங்கள். Show all posts
Showing posts with label பாவகாரகங்கள். Show all posts

Friday, June 20, 2014

பாவகாரகங்கள்

                                     c  

  பாவா காரகங்கள்                               

 முதலாம் பாவம் எனும் இலக்னம்

                               

     வீடு என்றால் என்ன ? ஒவ்வொரு வீட்டுக்கான காரகங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். இதில் நாம் ஒருவீட்டுக்கும் மற்ற வீடுகளுக்கும் உள்ள தொடர்புகளையும் பற்றி பார்ப்போம்.

    முதல் வீடு எனும் இலக்னம் -- இந்த இலக்னம் என்கிற முதல் வீட்டின் அதிபதி இலக்னாதிபதி என அழைக்கப்படுகிறார். இவர் ஜாதகரைக் குறிக்கிறார். இந்த வீடானது ஒருவரின் வாழ்க்கையையும்> ஆயுளையும்> ஆரோக்கியத்தையும்> சந்தோஷம்> இயற்கை குணம்> தோற்றம்> நிறம்> மதிப்பு> மரியாதை> கௌரவம்> உயிர்ப்பு> உற்சாகம்> தைரியம்> தீர்மானித்தல்> அழகு> கவலைகள் அல்லது கஷ்டங்கள்> பிரயோஜனமான விஷயங்கள்> இலாபங்கள்> இளைய சகோதரருக்கும, நண்பர்களுக்கும் ஆதாயங்கள்> ( 3 ஆம் வீட்டுக்கு  11 ஆம் இடம்) பேர்> புகழ்> கணவன் அல்லது மனைவி> இறப்பு> கேளிக்கைகள், ஆனந்தம்> விபத்து> நோய்வாய்ப்படல்> பயணங்கள், நீர் வழிப் பயணங்கள்> சுயமான> துணி> கம்பளி> பார்லி> ஓதுமை< தங்கம்> ஆகியவை காரகங்களாகும். பராசர முனிவரின் கூற்றுப்படி -  உடற்கட்டு> புத்திகூர்மை> மனோபலம்> பிறவிக்குணம் ஆகியவையும்> இலக்னம் மூலமாக அனுமானிக்கப்படும். மேலும> வயிறு> ஆபரணம்> நினைப்பு> இப்பிறவி> ஜாதி> சரீர புஷ்டி.> நித்திரை> பிறந்த இடம்> கனவு> அங்க அடையாளங்கள்.> ஐம்புலன்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.
       உடல் பகுதிகள்> தலை> மூளை> மயிர்> கிளாண்ட்ஸ் ஆகியவற்றைக் குறிக்கும். பலமற்ற முதல் வீடு> அல்லது அதன் அதிபதியன் பலமற்ற நிலை தலைவலி> மனுளைச்சல்> வாதம்> மயக்கம்> தலைக் காயம்> புண்கள்> தழும்புகள்> என்டோக்ரின் நாளங்களின் முறையற்ற இயக்கம். தாறுமாறான நிலை> மூளைக் காய்ச்சல்> முட்டாள் தனம்> மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்> ஆகியவற்றிற்கும் காரகராகும். 

       இலக்னமானது> 12 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு ஆவதால்> தனிப்பட்ட  எதிரிகளின் செல்வத்தையும்> 11 க்கு 3 ஆம் வீடாவதால் சகோதரரின் நண்பர்களையும்> 9 க்கு 5 ஆம் வீடாவதால்     குழந்தைகள் அல்லது மத சம்பந்தமான குழுக்களையும்> மத்த்தையும்> பயணத்தையும்> படிக்கும் போது விடுதியில் தங்குதலையும்> அன்னியர்கள்> மற்றும் வெளிநாட்டவருடனான தொடர்பையும் குறிக்கிறது. 10 க்கு 4 ஆம் வீடாவதால்> இளைய சகோதரரின் நண்பர்களையும் குறிக்கிறது. ஜாதகரின்> துணிகரமான மற்றும் ஆபத்தான செயல்களுக்குத் தொடக்கமாகவும்> முடிவாகவும் அமைகிறது.

;;;

இரண்டாம் பாவ காரகங்கள்    

தன பாவம் எனும் 2 ஆம் பாவம் குடும்பம். செல்வம்> ஆண்மகவு> கல்வி> தொழில் வழி நிலை> மனைவி> இரண்டாம் திருமணம்> ( 7 ஆம் வீட்டுக்கு 8 ஆம் இடம்) மாறாத மணவாழ்க்கை> மதிப்பு மிக்க இரத்தினங்கள்> உலோகங்கள்> ரொக்கப் பணம்> சம்பாதிக்கும் திறமை> பொருளாதார நிலை> அதிர்ஷ்டம்> முன்னேற்றம்> அசையும் சொத்துக்கள்> வலது கண்> கண் பார்வை> பேச்சு> உணர்வை வெளிப்படுத்துதல்> சொற்பொழிவு> நூலாசிரியர்> கைகள்> உணவு> குடித்தல்> முகம்> கற்றல்> கடிதம்> வங்கி இருப்பு> பத்திரம்> இளமை> இசை> குருடு> சன்யாசம்> மரணகாலம் அல்லது மாரகம்> ஆளும் அதிகாரம்> இலாபம்> மன அமைதி> பழுதுபடுதல்> சுய சம்பாத்தியம்> உலக அறிவு> நகைகள்> தாத்தா> பாட்டி> கடன்> சகோதர> சகோதரிகள்> ஞாபகசக்தி> சட்ட வழக்குகள்> வியாபாரம்> வர்த்தகம்> ஊதாரித்தனம்> நஷ்டம்> ஸ்பெகுலேஷன்> இளைய சகோதரனுக்கு> மாமாவிற்கு வெகுதூரப் பயணம்> தந்தைக்கு நோய்> மூத்த சகோதரருக்கு வாகனம்> மற்றும் சொத்துலாபம்> ஏழ்மை> துரதிர்ஷ்டம்> புனிதமான> பழக்க வழக்கங்கள்> குடும்பம் என்றால் பிறந்த குழந்தையின் தாயுடனான முதல் உறவு> அதன் பின் தந்தையை அடையாளம் காட்டல்> பின்னர் வீட்டிலுள்ள மற்றவர்களை அறிந்து கொள்ளல்> அதன் பின் திருமணம்> தந்தையாதல் என குடும்ப உறவுகள் மாறிமாறி அமைகின்றன. அதேபோல் கற்றல் என்பது பாரம்பரிய சிற்பக் கலைகள்> வேதங்கள்> சாத்திரங்கள்> ஜோதிடம் போன்ற வேத அங்கங்கள்> ஆயுர்வேதம் போன்றவற்றைக் கற்றலாகும்.

       உடல் பகுதிகள்  -- முகம் - அதில் உள்ள அங்கங்கள். நகம். நாக்கு. மூக்கு. பற்கள். கன்னம். நாடி. முக எலும்புகள். மேல் கழுத்து. அதன் எலும்பு. டான்சில்ஸ் ஆகியவை. 2 ஆம் இடம். அதன் அதிபர் பாதிப்பு அடைய. செரிமானப் பிரச்சனைகள். தெளிவான பேச்சின்மை. தொண்டை.  தாடைகள். கண்கள் ஆகியவற்றில் உபாதைகள் ஏற்படும்.


    2 ஆம் வீடு 12 ஆம் வீட்டுக்கு  3 ஆம் வீடானதால் பரம்பரைச் சொத்தையும். ஒரு சமுதாயத்தை சேர்ந்த எதிரிகளையும். 11 ஆம் வீடு 4 ஆம் வீடாவதால் தந்தை. நண்பர்களின் பேரக்குழந்தைகள். 10 ஆம் வீட்டுக்கு 5 ஆம் வீடாவதால் இளவரசனையும் 7 க்கு 8 ஆவதால் மனைவியின் இறப்புக்கு. நீதி வழங்குதலும் மிகவும் பரிச்சயமானவர்களையும் (கூட்டாளி எதிரிகள் போன்றவர்கள்) 6 க்கு 9 ஆம் வீடாவதால் மதசம்பந்தமான மற்றும் பணியாட்களின் நீண்ட தூரப் பயணங்களையும் 5 க்கு 10 ஆம் வீடாவதால் வணிகம். கடன். தொழில் மற்றும் குழந்தைகளின் கௌரவம் 4 க்கு 11 ஆம் வீடாவதால் தந்தையின் நலனில் அக்கறை உள்ளவர்கள் மற்றும் நண்பர்களையும் 3 க்கு 12 ஆம் வீடாவதால் சகோதரர்களின் எதிரிகளையும் குறிக்கிறது.
  
          

மூன்றாம் பாவ காரகங்கள்

    மூன்றாம் வீடு - தைரியத்தையும் - அசைக்கமுடியாத தன்மையும்- புத்தி கூர்மையையும் - கொட்ட எண்ணங்களையும்-இளைய சகோதர - சகோதரிகளையும்- மனோ திடத்தையும்- கதாநாயகனாகவும் - தியாகியாகவும் - மனத்தையும்-உயர்கல்வி-ஆராய்ச்சி-பாண்டித்தியம்-தத்துவப் போக்கையும்-பணியாட்கள் - தாள் - தகவல் தொடர்பு அண்டைவீட்டுக்காரர்-சித்தப்பா - தந்திகள் - வதந்திகள் - குன்றுகள் - மலைகள் - சிறுபயணங்கள் மற்றும் தரை - இரயில் மூலமான பயணங்கள் - சிறிது தூர விமானப் பயணங்கள் - தீரமான - பலம்மிக்க - தபால்நிலையம் - ரேடியோ - தொலைக்காட்சி - தொலை பேசி நிலையம் - தகவல் தொடர்பு சாதனங்கள் - அலைபேசி - வலைத்தளங்கள் போன்றவை - ஏரி - ஆறு - கணக்கர் - கணிதர் - புத்தகங்கள் பதிப்பித்தல் - வெளியிடுதல் - பத்திரிக்கையாளர் - புத்தக நிலையம் - நூலகம் - இருப்பிட மாற்றம் - அமைதி நாட்டம் - மாறுதல் மற்றும் மாற்றம் - ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுதல் - ஒப்பந்தம் - பாகப்பிரிவினை - பெண் பணியாட்கள் - ஆகியவற்றைக் குறிக்கும். வலது காது - கைகள் - தொண்டை - நரம்பு மண்டலம் - தோள்பட்டை - தைராய்டு க்ளாண்ட்ஸ் - பாதிக்கப்பட்ட 3 ஆம் வீடு - அதன் அதிபதி சுவாசப் பிரச்சனைகளையும் - தைராய்டு சுரப்பி பாதிப்பு -- பக்கவாதம் - மன உளைச்சல் - நடுக்கம் - தோள்பட்டை வலிகள் - கழுத்தெலும்பு முறிவு - காது கேளாமை - ஆஸ்மா - ஷயரோகம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறார். 

  12 ஆம் வீட்டுக்கு 4 ஆம் வீடாக இருப்பதால் கனவுகளையும் - தேவாலயங்கள் - கிளார்க் - கரோல்ஸ் - பெண்களை இடம் விட்டு இடம் மாற்றுதல் ஆகியவையும் - 11 க்கு 5 ஆவதால் - எதிரிகளின் தந்தையையும் - மகன்கள் மற்றும் நண்பர்களையும் - 10 க்கு 6 ஆம் வீடாவதால் -அரச குடும்பத்து நோயையும் - 9 க்கு 7 ஆம் வீடாவதால் மத சம்பந்தப்பட்டவர்களின் எதிரிகளையும் 6 க்கு 10 ஆவதால் பணியாளர்களின் வியாபாரத்தையும் 5 க்கு 11 ஆவதால் நண்பர்களின் - 4 க்கு 12 ஆம் வீடாவதால் தாயின் எதிரிகளையும் குறிக்கிறது. இளைய சகோதரரின் ஆரோக்கியம் - வெற்றிகள் - தோல்விகள் - மாமாவின் நிலை மற்றும் மூத்த சகோதரர் மற்றும் சகோதரிகளின் குழந்தைகளையும் குறிக்கும்.

   
                            

நான்காம் பாவ காரகங்கள்

       சொத்துக்கள் - ஆசையாச் சொத்துக்கள் - வீடு - நீலம் -தாய் - கார் - ஸ்கூட்டர் - டிராக்டர் - போன்ற வாகனங்கள் - நீர் - கற்றல் - சந்தோஷம் - உயிர் காக்கும் மருந்துகள் - புதையல் - எஸ்டேட் - குடியிருப்புப் பகுதிகள் - இரகசிய வாழ்க்கை - முதுமை - மறைவான பொருட்கள் - பாரம்பரியம் - நினைவுச் சின்னங்கள் - வயல்கள் - படிப்பில் ஆர்வம் குறைவு - ஒத்தி அல்லது வாடகைக்கு விடுதல் - வேலையிலிருந்து விடுவிக்கப் படுதல் - முக்கியமான முடிவு எடுத்தல் - பால் - ந்தி - ஏரி - வீண்பழி - வீட்டை இழத்தல் - பசு - எருமைமாடு - பயர் - விவசாயப் பொருட்கள் - நிரந்தரத் தொழில்கள் - அரசு - எண்ணெய் கிளியல் - இனம் - ஆடைகள் - வாசனைப் பொருட்கள் - சந்தோஷமான வாழ்வு - நம்பிக்கை - நல்லபெயர் - கூடாரம் - வெற்றி - தோட்டம் - குளம் - கிணறு வெட்டுதல் - தாய்வழி உறவு - தூய்மையான அறிவு - தந்தையின் ஆயுள் - மனைவியின் தொழில் - சேமிப்பு - மாளிகை - கலை - வீட்டின் முன்வாசல் - முடிவுக்கு வருதல் - நிலையின்மை - தந்தை வழிச் சொத்து - தேவதைகளுக்குப் படைக்கும் உணவு - களவு போன பொருட்களைக் கண்டறிந்து கூறும் திறமை - எறும்புப் புற்று - வேதம் - புனித நூல்களைப் புதுப்பித்தலு - பசுக்கள் - எருமைகள் - யானைகள் - நன்செய் நிலத்தில் விளைந்த தானியங்கள் - பழத்தோட்டங்கள் - சுரங்கங்கள் - கட்டிடங்கள் முன்னோர்கள் சொத்து - பொக்கிஷம் - பந்துக்கள் - தொண்டர்கள் - ஆதரவாளர்கள் - போக்குவரத்து - குடும்ப அமைதி - விலா எலும்பு - இதயம் - மார்பகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். 

நான்காம் இடமானது 3 ஆம் இடத்துக்கு 2 ஆம் இடமாக இருப்பதால் இறந்தவர்களின் சொத்தையும் - - 12 க்கு 5 ஆம் இடமாதலால் - குழந்தைகளின் எதிரிகளையும் - இளைய சகோதரிகளின் வங்கி இருப்பையும் - தந்தைக்கு ஆபத்தையும் - அண்ணனின் எதிரிகள் - இரகசிய எதிரிகள் - - 11 ஆம் இடத்துக்கு 6 ஆம் இடமாதலால் நண்ர்களின் ஆரோக்கியம் இன்மையும் - நண்பர்களின்  ஆரோக்கியமின்மை - இவர்களின் வேலைக்காரர்களின் அதிர்ஷ்டத்தையும் - 10 ஆம் இடத்துக்கு 7 ஆம் இடமாதலால் அரசனின் எதிரிகளையும் மற்றும் அவர்களின் வியாபாரத்தையும் - அதனால் ஏற்படும் இலாபங்கள் - தாய்மாமன் - கூட்டாளியின் தொழிலையும் 9 ஆம் இடத்துக்கு 8 ஆம் இடமாவதால் மத்த்தலைவர்களின் இறப்பையும் குறிக்கும்.

   

ஐந்தாம் பாவ காரகங்கள்

    அறிவு கூர்மை - உணர்ச்சிகள் - உள்ளுணர்வு - ஞாபகசக்தி - மனத்திறன் - உருவாகின்ற அறிவுத்திறன் - புத்திகூர்மை - காமத்தால் சந்தோஷம் - காதல் - காதல் கிளர்ச்சி - சேமிப்பில் இருந்து வரும் இலாபங்கள் - வெற்றி - புத்திரம் - எதையும் ஏற்று நடத்தும் திறன் - கருவுறுதல் - பாண்டித்யம் - உயர் கல்வி - பயிற்சி - பதவி இழப்பு - சமூக வாழ்க்கை - ஏற்ற இறக்கங்கள் - பக்தியால் பிறரைக் கவருதல் - சீடர்கள் - மாணக்கர்கள் - குலதெய்வம் - மந்திரங்கள் - யந்திரங்கள் - பூஜை - தகுதி - திறமை - எதிர்காலம் - செரிமானம் - தந்தையால் செய்யப்படும் புண்ணிய காரியங்கள் - அரசர் - அமைச்சர் - நல்லொழுக்கம் - இயந்திரக் கலை - குடை - நீதிக் கதைகள் - நற்செய்திகள் - நற்பத்திரங்கள் - ஆடைகள் - விருப்பத்துடன் செயலாற்றுதல் - மூதாதையர் சொத்து - விபசாரிகள் உறவு - உறுதியான எண்ணம் - கமுக்கம் - கண்ணியம் - செய்திகளை எழுதுதல் - இலக்கியங்களைப் படைத்தல் - ஆரோக்கியம் - நட்பு - மந்திர வழியாக வேண்டுதல் - குபேரச் செல்வம் - அன்னதானம் - பாவபுண்ணியம் பார்த்தல் - மிருதங்கம்  போன்ற தாளக் கருவிகள் பயன்படுத்தும் விழாக்கள் - பண்டிகைகள் - ஆழ்ந்த புலமை - மனத்திருப்தி - முதல் கர்ப்பம் - கருச்சிதைவு  ஆகியவற்றைக் குறிக்கும்.
       7 ஆம் வீடு 2 ஆவது குழந்தையையும் - 9 ஆம் வீடு 3 வது குழந்தையையும் - குறிக்கும். சமூக முன்னேற்றம் - கலைத்திறன் - மகிழ்ச்சியான வீடு - காதல் களிப்பு - விளையாட்டு - கேளிக்கை - இசை - நாடகம் - நடனம் - பூங்கொத்து - பொழுதுபோக்குக்கான இடங்கள் - ஸிபெகுலேஷன் - போட்டி பந்தயங்கள் - இலாட்டரி - சூதாட்டம் - பந்தயம் கட்டுதல் - பங்குச்சந்தை - காதல் விவகாரங்கள் - இலக்கை அடையும் ஆர்வம் - கடத்தல் - பாலியல் பலாத்காரம் - காம்ம் - திருமசத்திற்கு முன்னும் - பின்னும் ஏற்படுகின்ற காமக்களிப்பு - நல்ல மற்றும் தவறான எண்ணங்கள் - மத ஈடுபாடு - ஆழமான அறிவான கற்றல் - புனிதப் பயணங்கள் - குழந்தைகளின் ஆரோக்கியம்- தவறான உறவுகள் ஆகியவற்றையும் குறிக்கும்.

 5 ஆம் வீடு  3 ஆம் வீட்டுக்கு 3 ஆம் வீடாவதால் சகோதரரையும் - 12 ஆம் வீட்டுக்கு 6 ஆம் வீடாவதால் - எதிரிகளின் ஆரோக்கியம் இன்மையும் - 4 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடாவதால் தாயின் வங்கி இருப்பையும் - 11 க்கு 7 ஆம் வீடாவதால் நண்பர்களின் எதிரியையும் - 10 க்கு 8 ஆம் வீடாவதால் அரசனின் மரணத்தையும் - 9 க்கு 9 ஆம் வீடாவதால் புனித யாத்திரைகளையும் - 6 க்கு 12 ஆம் வீடாவதால் வேலைக்காரர்களின் எதிரிகளையும்- மற்றும் தந்தையின் இலாபத்தையும் - எதிராளியின் இலாபத்தையும் - தந்தையின் நீண்ட பயணத்தையும் - உயர் கல்வியையும் - வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் அன்னியர்களின் பழக்கத்தையும் - அண்ணன் மற்றும் அக்காளின் திருமணத்தையும் - தாய் மாமனின் மாறிய நிலையையும் - நஷ்டங்களையும் - மூத்த சகோதரரின் வியாபாரக் கூட்டாளியையும்  குறிக்கும்.
       தொப்பை - கல்லீரல் - பித்த நீர்ப்பை - கணையம் - இரப்பை - பெருங்குடல் - முதுகுத்தண்டு - தண்டுவடம் - உதரவிதானம் ஆகிந உடற்பாகங்களையும் குறிக்கும். 5 ஆம் இடம் - அதன் அதிபதி பாதிப்பு அடைய சர்க்கரை நோய்- அல்சர் - வயிற்றுவலி - பித்தப்பையில் கற்கள் - தண்டுவடக் கோளாறுகள் - வயிற்றுப் போக்கு - அஜீரணம் - நெஞ்செரிச்சல் - இதயக் கோளாறு ஆகியவை ஏற்படும்.

   

 ;
   ஆறாம் பாவ காரகங்கள்

சத்ரு பாவமெனும் 6 ஆம் பாவகாரகங்களைப்பற்றி பார்ப்போம் -  
எதிரிகள் - வழக்கு விவகாரங்கள் -  நோய்கள் - காயங்கள் - கடன்கள் - எதிர்தரப்பினர் - திருடர்கள் - பயங்கள் - போட்டியாளர்கள் - சந்தேகங்கள் - கவலைகள் -  தொல்லைகள் - பலமின்மை - மிகுந்த செல்வ நிலை - தாய் மாமன் - சேவை - தொழிலாளர்கள் - நல்ல உடல்நிலை -திருட்டுக்கு எதிரன பாதுகாப்பு - ஏமாறுதல் - சரியாகப் புரிந்து கொள்ளாமை - போர் - தீ - இடையூறுகள் - கபம் - உடலில் ஏற்படும் வீக்கம் - கொடுஞ்செயல் - மனநோய் - பகை -   கட்டி - கருமித்தனம் - நோயுடன் இருத்தல்  - பால்வினை நோயால் ஏற்படும் புண் - வெப்பம் - சமைக்கப்பட்ட சோறு - களைப்படைதல் - பழிச்சொல் - பகைவரின் மகிழ்ச்சி - எலும்புருக்கி நோய் -மனக்கவலை - கடுமையான வேதனைகள் - பலருடன் பகைத்தல் - தொடர்ச்சியான கண் நோய் தொந்திரவு - பிச்சை எடுத்தல் - நேரம் தவறி உணவு அருந்துதல் - படகில் இருந்து இடரி விழுதல் - பங்களாகளால் தொல்லைகளும் - அச்சமும் - இலாபம் - சோர்வுநிலை -  நஞ்சு - கடும் வயிற்றுவலி - விலகிடுதல் - சுயமரியாதை காப்பாற்றுதல் - சிறுநீரகக் கோளாறு - அறுசுவைகள் -  கண்டனம் - ஆபத்து - சிறைச்சாலை - உடன் பிறப்புடனும் - மற்றவர்களுடனுமான கருத்து வேறுபாடு - குழந்தைப் பருவம் - நோயால் ஆபத்து - மற்றவர்களுக்கு சேவை செய்வதால் கிடைக்கும் வருமானம் - குடியிருப்பு வட்டார சேவையில் வெற்றி பெறுதல் - பக்தி மயம் மற்றும் உள்ளுணர்வு சக்தி - வேலையாட்களால் இலாபம் -  சிறு மிருகங்களுடன் வெற்றி - இந்த பாவத்தில் சந்திரனின் தாக்கத்தினை சிறப்பாகக் கண்ணுறுதல் அவசியமாகிறது - உடன் இருப்பவர்கள் - வேலக்காரர்கள் மற்றும் பணியாளர்களுடனான பொதுவான வெற்றி நிலை - சேவை அல்லது பணியின் நிலை இந்த பவத்தால் அறியப்படுகிறது. பாதிப்படையும் பொதுவான உடல்நிலை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவற்றையும் குறிக்கிறது. ஸ்திர இராசியாகி 6 இல் சந்திரன் பாதிப்படையும் போது - மார்புச் சளியும் - சிறுநீரகக் கல்லும் ஏற்படுகிறது. சர இராசியானால் - நரம்புக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன - நுரையீரலில் ஆபத்து மற்றும் தீராத வியாதிகளை 6 ஆம் வீடு உபய இராசியாகும் போது அளிக்கிறது. சூரியன் - யுரேனஸ் - இராகு - கேது - நெப்டியூன் ஆகியவற்றின் பாதிப்பு வீரியக் குறைவு - அஜீரணம் மற்றும் உடல் நிலையில் பாதிப்புகளைத் தருகின்றன. பாதிக்கப்பட்ட செவ்வாய் மிகுந்த ஆத்திரமடையும் நிலையையும் அளிக்கிறது. குருவின் பாதிப்பு - கல்லீரல் மற்றும் இரத்தப் பிரச்சனைகளையும் - புதன் ஜீரணக் கோளாறு- பல் வலிகளையும் - சுக்கிரன் தோல் வியாதியையும் தருகின்றனர்.
  

 ஏழாம் பாவ காரகங்கள்

       துணை மற்றும் கூட்டாளிகள் - திருமணம் - பிற பாலினத்தால் விரும்ப்ப்படும் அளவுக்கு அழகு உடையவர். பெண்களால் நேசிக்கப்படுவர் - மாறிவிடும் இயற்கை குணம் மற்றும் மாறிவிடும் அன்பு - மாற்றங்களையும் பயணங்களையும் விரும்புகிற குணம் - ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மேற்படி குணமுள்ள - அமைப்புள்ள நபருடனான தொடர்பு மற்றும் சுதந்திரமான எண்ணத்தைக் குறிக்கிறது. 
       
       நல்ல நிலையில் இருக்கும் 7 ஆம் பாவம் சீக்கிர திருமணத்தையும் - மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையையும் அளிக்கிறது.    சமூகத்தில் புகழையும் - சமூக வெற்றிகளையும் தருகிறது. திருமணம் - கூட்டாளிகள் மற்றும் பொதுமக்களால் அனுகூலத்தையும் அளிக்கிறது. செவ்வாய் - இராகு - கேது ஆகியவர்கள் தரும் பாதிப்பு மனைவி - கூட்டாளிகள் மற்றும் சமூகத்தில் இருந்து பிரிவினையையும் - எதிர்ப்பையும் அளிக்கிறது. மேலும் - மணவாழ்க்கையில் திருப்தியின்மை- ஒதுக்கப்படுதல் - பகை - மூர்க்கமான - மனதைப் புண்படுத்தும் விதமான பேச்சு - செய்கைகள் ஆகியவற்றையும் தருகிறது. சனியின் பாதிப்பு கூட்டால் ஏமாற்றத்தையும் - நஷ்டங்களையும் - கஷ்டங்களையும் - புதன் திருமண மற்றும் வியாபாரக் கவலைகளையும் தருகின்றார். 
         
      கட்டுப்பாடற்ற உறவு - காதலில் வெற்றி - ஒழுக்கமற்ற பெண்ணுடன் பகை - முறையற்ற காமம் - காதல் - இசை - மலர்கள் - சுவையான - காரமான உணவுகள்  பானங்கள் - தாபூலம் தரித்தல் - தயிர் - பயணத்தில் தடங்கல் - ஞாபகமறதி - துணிமணிகள் ஆகியவற்றை வாங்குதல் - விந்து - கணவனின் கற்பு நிலை - இரு மனைவிகள் - மர்ம உறிப்புகள் - சிறுநீர் - குதம் - வணிகம் - குழம்பு - நெய் - போன்றவற்றின் சுவையறிதல் - அன்பளிப்பு - செயல் திறன் அறிதல் - பகைவரை அழித்தல் - பதுக்கப்பட்ட பணம் - வாக்குவாதம் - உடலுறவு - தத்துப் பிள்ளை - நெய்யினால் தாயாரிக்கப்பட்ட பொருட்களின் சுவையறிதல் - உடலுறவால் ஏற்படும் கமுக்கமான இன்பங்கள் - களவு - நீண்ட கால பந்தங்கள் - சட்ட பூர்வமான இணைவுகள் - வாழ்க்கை - விளைச்சல் - ஒழுக்கமான குணங்கள் - வெளியே சுற்றும் தன்மை - பிற பெண்டிரைப் புணர்தல் - வெளிநாட்டு வியாபாரம் - மற்றும் வாழ்க்கை - வியாபார மற்றும் வணிக விரிவாக்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.

     உடலின் பாகங்கள் - சிறுநீரகம் - பெருங்குடல் கீழ்பகுதி - லும்பர் பகுதி - கருப்பை - கர்முட்டை - சிறுநீர்ப்பை - விதைப்பை - ஆகியவையாகும். வீட்டின் அதிபதியின் பாதிப்பு இந்த பாகங்களில் உபாதைகளையும் - முடக்குவாதம் - கீல்வாதம் - மூட்டு வலி - சிறுநீரக நோய்கள் - பாலியல் நோய்கள் - ஆண்மையிழப்பு - மலட்டுத் தன்மை ஆகியவற்றைத் தருகின்றன. பலம் மிக்க சுக்கிரன் அந்த நிலைகளில் இருந்து நம்மைக் காக்கிறார். 

    
எட்டாம் பாவ காரகங்கள் 

ஆயுள். ஆராய்ச்சி, ஆன்மீக விஞ்ஞானத்தில் ஆர்வம், மந்திரசக்தி, வெளி மாற்றங்கள், கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்ச்சிகள், இறப்பு, உயில், ஆயுள் காப்பீடு, சுலபமான இலாபங்கள், மணவாழ்வு பந்தம், மரபுரிமை, காயம் ஏற்படக் கூடிய நிலை, பயம், விபத்து, தடைகள், வழக்குகள், திருட்டு, நஷ்டங்கள், துரதிர்ஷ்டம், அவமானம், திவாலாகுதல், ஏமாற்றங்கள் ஆகியவையும் வாள், துப்பாக்கி முதலியவற்றால் ஏற்படும் காயம், போர், சண்டை, மலை, பல மாடிக் கட்டிடங்கள் போன்ற உயரமான இடங்களில் இருந்து விழுந்து அல்லது குதித்து உயிர் துறத்தல், தீராத வியாதிகள், வருத்தம், நீங்காத பலவகைக் கஷ்டங்கள், துன்பங்கள், ஒருவரின் ஆயுள் அளவு, நீங்காத அல்லது தீராத பகை, வீணான தேவையற்ற அலைச்சல், பாவம், அஞ்ஞானம், திடீர் சாவு, தோல்வி, சிறைப்படல், தற்கொலை, தூக்கு, கொலை, கொள்ளை, கைமைநிலை, மனவுளைச்சல், மரியாதைக் குறைவு, 7 க்கு 2 ஆம் இடமாதலால் வரசட்சிணை மற்றும் மனைவியின் மூலம் வருமானம், எதிரியின் வலிமை, நண்பர்கள், வெற்றி, கூட்டாளியின் சொத்து, போனஸ், கிராஜூவிடி, சாவின் வகை, கசாப்புக் கடைக்காரர், சர்ஜன், மருத்துவ அதிகாரி, லஞ்சம், நதியைக் கடத்தல், பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.
                 8 ஆம் வீடு 6 ஆம் வீட்டுக்கு 3 ஆம் வீடாகையால் சகோதரரின் வேலைக்காரர்களையும், 5 க்கு 4 ஆம் வீடாவதால் குழந்தைகளின் தாயைப் பற்றியும், 3 க்கு 6 ஆம் வீடாவதால் உடன் பிறப்புக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும், 10 க்கு 11 ஆம் வீடாவதால் நண்பர்களின் கௌரவம், மரியாதை ஆகியவற்றைப் பற்றியும் குறிக்கிறதுமேலும் அங்க்கீனம், தண்டனை பெறுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.
              8 ஆம் வீட்டுடன் யுரேனஸின் தொடர்பு, வித்தியாசமான மற்றும் தீடீர் இறப்பையும், வெடி விபத்து, கொள்ளை நோய்களாலும் ஏற்படும் இறப்பையும் குறிக்கும். என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமலே தவறான மருத்துவ முறையால் ஜாதகர் இறக்க நேரிடலாம். இடி மின்னல் தாக்கி, மின்சாரம் தாக்கி இறக்கலாம். நெஃப்டியூன் தொடர்பு, கோமா மற்றும் மயக்க நிலைக்குக் கொண்டு செல்ல்லாம் அல்லது அலர்ஜி, மருந்து ஓவர் டோஸ் ஆகலாம். கேஸ்
நீரில் மூழ்குதல், விஷம் ஆகியவற்றால் மரணம் நிகழலாம்.  8 ஆம் வீடு நீர் இராசியாக, நீரால் கண்டம் ஏற்படலாம். 8 ஆம் வீட்டின் உடற்பாகங்கள் குதம், இனவிருத்திக்கான உறுப்புகள், அசுத்தங்களை வெளியேற்றும் உறுப்புகள், இடுப்பு எலும்பு ஆகியவை ஆகும். 8 ஆம் பாவம் பாதிப்பு அடைய விரை வீக்கம், வெடிப்பு, வீக்கம், ஆண்மையின்மை, மூலம், சிறுநீரக நோய், கட்டிகள், தீராத வியாதிகள் ஆகியவை ஏற்படுகின்றன. பலம் வாய்ந்த ஆயுள்காரகன் சனி இவற்றில் இருந்து நம்மைக் காக்க உதவுகிறான்.


 ஒன்பதாம் பாவ காரகங்கள் 
   
   தந்தை- அவரைப்பற்றிய செய்திகள்- பரம்பரைச் சொத்துக்கள்- ஆசிரியர்-ஆசான்-குரு-ஆன்மீக அறிவு- ஆன்மீக ஏற்ற இறக்கம்- உள்ளுணர்வு- மடம்- சர்ச்-போன்றவற்றின் மேலாதிக்கம் பெறல்-கோவில்- தண்ணீர் பந்தல் வைத்தல்- தருமக் கிணறு வெட்டல்- குளம் வெட்டல்- தர்ம ஸ்தாபனம்- கடமை - நல்லொழுக்கம்-வேதம்-உபநிடதம்-இதிகாசம் போன்றவற்றில் பயிற்சி பெறுதல்-ஞானப்பெருக்கம் - உபதேசம்- குருவுக்கு சேவை செய்தல்-தெய்வ சிந்தனை- பக்தி- பெரியோர்- ஞானிகள் தரிசனம் - கடல் வழி வெளிநாட்டுப் பயணம் - பட்டாபிஷேகம்- தற்காலத்தில் மந்திரி பதவி- பிரதமர் பதவியேற்பு விழாக்கள் -சகோதர சுக துக்கங்கள்- முற்பிறவியில் செய்த வினைகளின் காரணமாக ஏற்படும்- விதி - சந்தோஷ முடிவுகள்- ஆத்ம சக்தி யோகா- வெளிநாட்டுப் பயணம்- குறுகிய இடைவெளியில் நீண்ட பயணம்- வெளிநாட்டு வசம்- வெளிநாட்டில் கல்வி கற்றல்- சொத்து -குகை மற்றும் காட்டில் வசித்தல்- மூதாதையர்- புகழ்- தொடை- முற்பிறவி- போன்- உயர்அதிகாரி-கடவுளின் கருணை- அதிர்ஷ்டம்- பொதுவான யோகங்கள்-திடீர் மற்றும் எதிர்பாராத இலாபங்கள்- மதம்- புனித பயணங்கள் அல்லது தீர்த்த யாத்திரைகள்- தத்துவார்த்தம்- சட்டம்- தீட்சை- மருத்துவம்- முற்காலம்- பரிகாரங்கள் -சேவை- விசுவாசம் சாமர்த்தியம்- விஞ்ஞானம்- கற்றல்- புத்தகங்கள்- எழுதுதல்- கனவுகள்-நம்பிக்கை-ஆகியவையும்- கல்லூரி மற்றும் உயர் கல்வி- 7 ஆம் வீட்டுக்கு 3 ஆம் வீடு ஆவதால் மனைவியின் அல்லது சகோதரனின் எதிரிகளையும்- 6 க்கு 4 ஆம் இடமாதலால் நிலம் மற்றும் தந்தையின் வேலையாட்கள்- 5 க்கு 5 ஆம் வீடாவதால் குழந்தைகளின்- குழந்தைகளுக்கான சந்தோஷம் மற்றும் ஆதாயங்களையும்- 4 க்கு 6 ஆம் வீடாவதால் தாயின் நோயையும்- 11 க்கு 11 ஆம் வீடாவதால் நண்பர்களுக்கு நண்பர்களையும்- 7 க்கு 7 ஆம் வீடாவதால் தம்பியின் மனைவியையும் - தங்கையின் கணவனையும் அல்லது அவர்களின் போட்டியாளர்களையும் - எதிரிகளையும்- 9 க்கு 11 ஆம் வீடாவதால் அண்ணனின் நண்பர்களையும்- காரிய வெற்றியையும் குறிக்கிறது. 10 க்கு 12 ஆம் இடமாதலால் அரசுக்கு எதிரான நபர்களையும் குறிக்கிறது.

     உடலின் பாகங்களான தொடைகள்- இடது கால் - தொடை எலும்புகள் - எலும்பு மஞ்சை- இடுப்பு- இடுப்பு எலும்புகள் - ரத்த நாளங்கள்- ஆகியவைக்கும் காரகங்களாகிறது. பலமற்ற  9 ஆம் வீடு மற்றும் அதிபதி - ரத்தமின்மை அல்லது ரத்தக்குறைவு- அனீமியா - டாலாஸ்மியா- லுகோமியா-(ரத்தத்தில் வெள்ளையணுக்கள் குறைவால் ஏற்படும் தீவிர நோய்) அதிகமான காய்ச்சல் -சர்க்கரை நோய் - தொடை மற்றும் இடுப்பில் ஏற்படும் நோய்கள்- ருமைடிஸம்- எலும்பு இணைப்புகளில் ஏற்படும் வலிகள் - யோக்காரகன் குரு மற்றும் சூரியன் பலம் மிக்கவர்களாக இருக்க இந்த இடர்களில் இருந்து காப்பர்.
  
   பத்தாம் பாவ காரகங்கள்
ஒருவன் செய்யும் அல்லது ஒருவனுக்கு வாய்க்கும் தொழில் அல்லது உத்தியோகம்- வேலைவாய்ப்பு-பதவி உயர்வு - சம்பாத்தியம்- சக்தி-புகழ்-மக்கள் ஆதரவு - பதவி- உயர்நிலை- வெகுமதி- அரசாட்சி-எம். எல் ஏ- எம்.பி மந்திரி போன்ற அரசு பதவிகள் - நாடு - நகரம் அமைத்தல் - அருள் - பூஜை அறை- சிரார்த்தம் - தெய்வ வழிபாடு- படை பலம் - மரியாதை - கர்மம் - குணம் - அதிகாரம்- அரசு - வேலை தருபவர்- வெளிநாட்டு வாசம்- விருப்பம்- ஆசைகள் நிறைவேறுதல்- மறுபிறவி- ஆண் வாரிசால் ஏற்படும் சந்தோஷம் - கடன்கள் - தன்மானம் - காயகற்பம்- அணியும் ஆடைவகை- மழை தூரதேச சமாசாரம்- தன் முக்கிய ஜீவனம்- தன் ஆட்சி அதிகாரம்- (ஆளுமை) பொருளாதாரம்- மற்றும் வணிகம்-  ஆகாயம்- உயர் அதிகாரி - கடமை உணர்வு - மெச்சத்தக்க செயல்கள் செய்தல் - தேவையான பொருட்கள் - தியாகம்- குதிரையேற்றம்- போட்டி விளையாட்டுக்கள்- தத்துப் புத்திரன்- மந்திர சக்தி- ஆபரணங்கள் - சன்யாசம் - நீதிபதிகள் - நீதி ஆகியவற்றை குறிகாட்டுகின்றன. 
    
) 9 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடாவதால் சுயசம்பாத்தியம் - நீதி- நீதிபதி - திருடர்களால் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள்- மதத் தலைவர்களின் பொருட்கள் - மற்றும் செல்வங்கள் ஆகியவற்றையும் - 8 ஆம் வீட்டுக்கு 3 ஆம் வீடாவதால் தாய் தந்தையருக்கான மாரக வீடு- இளைய உடன்பிறப்புகளுக்கு ஆபத்து- அவர்களின் எதிரிகளின் வேலைக்காரர்கள் ஆகியவற்றையும்- 7 க்கு 4 ஆம் வீடாவதால் நிரந்தரத் தொழில் - வியாபாரத்துக்கான வாகனம்- மனைவி ஆகியவற்றையும் - 6 க்கு 5 ஆம் வீடாவதால் வேலைக்காரர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் மகிழ்ச்சி-ஸ்பெகுலேஷன் வெற்றிகளையும்- 4 ஆம் வீட்டுக்கு 7 ஆம் வீடாவதால் தாய்க்கு வேண்டாதவர்கள்- பொது எதிரிகள்- வழக்கு விவகாரங்கள் - தேர்தல் ஆகியவற்றையும்- 3 ஆம் வீட்டுக்கு 8 ஆம் வீடாவதால் இளைய உடன் பிறப்புகளின் இறப்பு அவர்களுக்குரிய பரம்பரைச் சொத்து ஆகியவற்றையும்- 2 ஆம் வீட்டுக்கு 9 ஆம் வீடாவதால்  ஜாதகரின் வேலைக்காரர்களின் மதம் பற்றியும்- 11க்கு 12 ஆம் வீடாவதால் எதிரிகளின் நண்பர்களையும் - 12 ஆம் வீட்டிற்கு 11 ஆம் வீடாவதால் எதிரிகளின் நண்பர்களையும்- அண்ணன் அல்லது அன்பு நண்பர்களின் நஷ்டத்தையும்- ரகசிய எதிரிகளின் நடவடிக்கைகளையும் மற்றும் அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவதையும் குறிக்கிறது.
    

பதினோறாம் பாவ காரகங்கள்.

மூத்த சகோதரம்- சேவை செய்பவர்கள்-இளைய மனைவி- (மூத்ததாரம் இருக்கும் போதே) நண்பர்கள்- துணை- உறவுகள்- ரசவாதத்தால்- குதிரை- ஆதாயம் கிடைத்தல்- பல்லக்கு-     யானை- முதலிய உயர்ரக வாகனங்கள்- பயிர்த் தொழிலால் ஆதாயம்-தெளிந்த சாத்திர அறிவு- மனக்கவலை- கிலேசம்- நிவர்த்தி- பொன்னாடை- சால்வை முதலியன போர்த்தப்படுதல்- காரியங்கள்- விருப்பங்கள் நிறைவேறுதல்- இலாபம் உண்டாகுதல்- முயற்சிகள்- செய்தொழிலில் ஏற்படும் இலாபங்கள்- நஷ்டங்கள்- இனி வராது என நினைத்த தனக்கு வரவேண்டிய தனம் வருதல்- சத்தியம்- அசத்தியம்- அன்பு- தாய்மேல் பாசம்- பல பெண்களுடன் சுகம் காணால்- பெண்ணால் அனுகூலம்- அனைத்து வசதிகளும் பெறல்-அனைவரிடத்தும் வணக்கம் (சல்யூட்) பெறுதல்- மதிப்பு - கௌரவம் கிடைத்தல்- அரசு மரியாதைகள்- மிக முக்கிய இடங்களில் உள்ள முக்கியஸ்தர்களின் உதவியால் ஆதாயம் பெறல்- புதையல்- சித்தி பெறல் - இடது காது - மகிழ்ச்சிகரமான செய்திகளைக் கேட்டல் - பிரபஞ்ச சகோதரத்துவம்- அமைதி- கற்றறிந்த - செல்வம் நிறைந்த - கருணையுள்ள- பாண்டித்யம் உள்ள- பிரபுத்துவம்- நல்ல சமூகத் தொடர்புகள்- சமூக வெற்றிகள் - நண்பர்களால் மகிழ்ச்சி - 11 ஆம் பாவம் பாதிப்பு அடையும் போது பொறாமை குணம் ஏற்படும்- சனியின் தொடர்பு நண்பர்கள் மற்றும் பெண்களால் நஷ்டத்தையும்- ஏமாற்றத்தையும்- நம்பிக்கை மற்றும் விருப்பங்களை அடைவதில் தாமதங்களையும் தரும். செவ்வாயால் பாதிப்பு அடைய நண்பர்களுடன் மித மிஞ்சிய மகிழ்ச்சிப் பெருக்கால் துன்பங்கள் ஏற்படும். இவையே 11 ஆம் பாவ காரகங்களாகும்.
   
  

பன்னிரெண்டாம் பாவ காரகங்கள்

   காம விருப்பம் - சாதனை புரிதல்- பிறருடனான படுக்கை சுகம்- விரயம்- பணம் செலவழித்து அதனால் ஏற்படும் சுகங்கள்- மறைபொருள் மற்றும் அசாதரணப் பொருட்களைக் கண்டறியும் மனநிலைக்கு அடிமையாதல் - ரகசிய காதல் விவகாரங்கள் அல்லது பெண்களிடம் பகை ஏற்படும் அளவுக்கு சதி திட்டங்கள் தீட்டல்- செலவுகள் - மோசமான செய்கைகள் -வெகுதூரப் பயணங்கள் - வழக்கு விவகாரங்கள் - குற்றசாட்டுக்கள் - சிறைப்படுதல்- தண்டனை பெறுதல் - மோட்சம்- ஆத்ம விடுதலை-  சொர்க்கம் - நரகம்- புண்ணியம்- தியாகம்- துறவு- தந்தைக்கு ஏற்படுகின்ற கவலைகள் - கஷ்டங்கள்- குலமேன்மை- யாகம் போன்ற சுபகாரியங்கள்- பாவ காரியச் செலவுகள்- வெளிநாட்டில் தொழில் அமைதல்- பாதம் - இடதுகண் - இரகசிய எதிரி - மருத்துவ மனை - தற்கொலை - திருமணத்திற்குப் பின் பிறர்மேல் ஏற்படுகிற ஆசை- பாசம்- சொத்துக்கள்- பிரகாசமான - 12 ஆம் இடம் - கடகம்- விருச்சிகம்- அல்லது மகரமாகி அதில் சுக்கிரனிருக்க பிறருடன்- உடல் மற்றும் உணர்ச்சி பூர்வமான இன்பம் தூய்க்க தீவிரமான ஆசைகள் ஏற்படும்- இதில் அதிதீவிர ஈடுபாடு மனிதனைச் சீரழிக்கும்- பெண்களாயின் சமூகத்தைச் சீரழிக்கும் புல்லருவிகளாவர்- ஆண்களாயின் விபசாரவிடுதிகளை நடத்துபவர்களாய் இருப்பர் அல்லது பல பெண்களுடன் முறையில்லாத உறவு வைத்திருப்பவர்கள்.

சனியால் பாதிப்பு ஏற்பட பிரிவினை- விவாகரத்து- எதிர்பாலினரால் ஏற்படும் ஏமாற்றங்கள் - ஜாதகருக்கு மனக்கட்டுப்பாடும் - நல்ல ஆலோசனைகளும் அவசியமாகிறது- செவ்வாய் இரகசிய காதல்களையும்- மணவாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள்- சலசலப்புகள் - பொறாமைகள் மற்றும் கண்மூடித்தனமான காம விருப்புங்களையும் குறிகாட்டுகின்றன.

   







;;