Showing posts with label சனியின் நகர்வும். Show all posts
Showing posts with label சனியின் நகர்வும். Show all posts

Wednesday, October 8, 2014

சனியின் நகர்வும், பலன்களும்.

சனியின் நகர்வும், பலன்களும்.

      சனி  30 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 இராசிகளையும் நிதானமாகக் கடக்கிறார். இதில் அவர் 3, 6, 11 ஆகிய இராசிகளில் தான் சுப பலன் தருகிறார். மற்ற 9 இராசிகளில் அசுப பலன்களே ஏற்படுகின்றது. 5, 9, 10 ஆகிய இராசிகளில் சாதாரண அசுப பலன் தருகிறது.

       4 இல் உள்ள சனி அர்த்தாஷ்டமச் சனி என்று அசுப பலனும், 7 இல் சனி  கண்டச் சனி என்று மேலும் சிறிது அசுப பலனும், 8 இல் உள்ள சனி அட்டமச் சனி என்று அதைவிட அதிக அசுப பலனும், இராசி மற்றும் இராசிக்கு இரு புறமும் ( 12 ஆம் இடம், 1 ஆம் மற்றும் 2 ஆம் இடம் ) ஆகியவற்றில் இருக்க ஏழரைச் சனி என்று கொடிய பலனும். ஜென்மத்தில் அதிகக் கொடிய பலனையும் தருகிறார்இந்த இரண்டரை வருடம் மட்டுமே மிக அதிக அசுப பலன் தருகிறார்.

       முதல் முறையாக வரும் சனியை மங்கு சனி என்றும், இரண்டாம் சுற்று பொங்கு சனி என்றும், மூன்றாம் சுற்று குங்கு சனி என்றும், 4 ஆம் சுற்று மரணச் சனி என்றும் அழைக்கிறோம்.

       மங்கு சனிஅரசால் கஷ்டம், படிப்பில் தடை, சோதனைகள், ஆரோக்கியக் குறைவு மற்றும் துயரமே மிஞ்சும்.

       பொங்கு சனிதிருமணம் மற்றும் மங்கள காரியங்கள், கடைசிப் பகுதியில், முற்பகுதியின் இழப்பைச் சரிக்கட்டும். பெற்றோருக்கு மாரகம் ஏற்படலாம்,

       குங்கு சனி ( குமுங்கு சனி ) – மன சஞ்சலம், கவலை, துயரம் மிகும். ஆயுர்தாயம் முடியுமென்றால், ஜாதகருக்கே மாரகம் ஏற்படலாம்.

       மரணச் சனிஎதற்கும் பயனில்லை. வயதுக்கு முற்றுப் புள்ளி வைக்க மரணமே வரும்,
       புலிப்பாணிச் சித்தர் சர இராசிக்கு அதிகக் கெடுதியும், அதைவிடக் குறைவாகவும், உபய இராசிக்கு மிகவும் குறைவாகவும் அசுப பலன் தருவதாகக் குறிப்பிடுகிறார்.  
 
மூர்த்தி நிர்ணயம்
 
       சனியின் கோசார பலன்களை நிர்ணயம் செய்ய பாரம்பரிய ஜோதிடர்கள், “மூர்த்தி நிர்ணயம்என்ற முறையைக் கடைப்பிடித்தனர். சனி ஒரு இராசியிலிருந்து பெயர்ச்சி ஆகும் போது, எந்த நட்சத்திரத்தில்இராசியில் இருப்பாரோ, அது ஒருவரின் ஜென்ம இராசிக்கு எத்தனையாவதாக வருகிறதோ, அந்தக் கணக்குப்படி  சனி சுவர்ணம், (தங்கம்), ரஜதம் (வெள்ளி), தாமிரம் (செம்பு) மற்றும் உலோகம் (இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார். இதையே மூர்த்தி நிர்ணயம் என்கிறோம்.

       இந்த வரிசைப்படி ஒரு கிரகம் அதிக சுப பலன்சாதாரண சுப பலன், சுப பலன், அசுப பலன்  எனத் தரவல்லது. இதை எங்ஙனம் நிர்ணயம் செய்வது ?

1.   ஒரு கிரகத்தின் பெயர்ச்சியன்று சந்திரன் ஒருவரின் ஜென்ம இராசிக்கு 1, 6, 11 ஆவது இராசிகளில் இருந்தால் அவர் சுவர்ண மூர்த்தியாகிறார்.

2.   அதேபோல் 2, 5, 9 ஆம் இராசிகளில் இருக் ரஜத மூர்த்தி என்றும்,

3.   3, 7, 10 இல் இருக்க தாரிர மூர்த்தி என்றும்,

4.   4, 8, 12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் பெயர்பெற்று மேலே சொன்னபடி பலன் அளிக்கிறார்.

சுபர்களான வளர்பிறைச் சந்திரன், குரு, செக்கிரன் மற்றும் சுபத்துவம் பெற்ற புதன் ஆகியோர் தரும் பலத்தின் அளவும், அசுபக்கிரகங்களான சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன் அசுபத்துவ புதன், இராகு, கேது  இவர்களின் அளவும் கொடுக்கப் பட்டுள்ளது. இதன் படி அனைத்து இராசிகளுக்கும் மூர்த்தி பேதப்படி பலன்கள் மாறுபடும்.

மூர்த்தி
சுபருக்கான அளவு
சுபருக்கான அளவு
சுவர்ண
முழு சுபம்
கால் சுபம்
ரஜத
முக்கால் சுபம்
முழு சுபம்
தாமிர
அரை சுபம்
முக்கால் சுபம்
உலோக
கால் சுபம்
அரை சுபம்

இந்த முறைச் சிறப்பு விதியாகவும், சனி பொதுவாக கொசாரத்தில் சுப பலன் தரும் 3, 6, 11 ஆம் இடங்களில் தரும் பலனைப் பொதுவிதி எனக் கருதி இரண்டையும் கூட்டி வரும் நல்ல, தீய பலன்களைக் கணக்கிட்டு பலன் காண்பதே சரியான முறையாகும்.

சனிக்குச் சிறந்த பரிகாரத் தலம்.
             சாதாரண மனிதன் கொள்ளும் ஆசையின் மூலமாக  நமது நல்ல தசா, புத்திக் காலத்தில் பல பெரிய தவறுகளைச் செய்ய வைத்துப் பின்னர்  ஏழரைச்சனிக் காலத்தில் சேர்த்து வைத்து அந்தத் தவறுகளுக்கு உரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார். எனவே, சனி தரும் துன்பங்களெல்லாம் நம் போன்ற  சராசரி மனிதர்களை மட்டுமே பாதிக்கும்.
                   வாதநோயால் வருந்திய சனியின் நிலை அறிந்து, அவரின் அன்னை சாயாதேவி  ஶ்ரீ காலபைரவரை தீவிரமாக வழிபாடக் கூறினார். சனியும் தவமிருந்து வழிபட்டார். சனியின் பக்தியை மெச்சிய பைரவர் மிருகண்ட முனிவரின் சாபத்தைப் போக்கினார். தனால் அகமகிழ்ந்த சனி,  ஸ்ரீகாலபைரவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு மீண்டும் சனி நவக்கிரகப் பதவிபெற்றார். மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில் / வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகால பைரவப் பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;
          எனவே, எவர் ஒருவர் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்கிறரோ, அவரை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன் என்று பைரவரிடம் சனீஸ்வர் வாக்களித்தார்.
                       உயிர்களைத் தண்டிக்க வேண்டியிருப்பதை விரும்பாத சனீஸ்வரர், வசிஷ்ட மகரிஷியை சந்தித்து அவரின் ஆலோசனைப்படி,  திருக்கொள்ளிக்காடு வந்தடைந்தார்; அங்கே இருக்கும் அக்னீஸ்வரரை நினைத்து கடும் தவம் புரிந்தார்சிவ வழிபாடு செய்தமையால் பைரவப் பெருமானே நேரடியாக வந்து அவரை பொங்கு சனியாக மாற்றி அருள் புரிந்தார்;
           இங்கே  சனியானவர், சுப பலனை மட்டுமே தரும் பொங்கு சனீஸ்வரராக அருள் பாலித்து வருகிறார்.  சனிக்கிழமை சனி ஓரையில் அல்லது ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு பொங்கு சனீஸ்வரரின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.
                  சனிக்கிழமைகளில் இவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் நிரப்பி அதை தானம் செய்யலாம். கருப்பு ஆடையை பொங்கு சனீஸ்வரருக்கு அணிவிக்கலாம். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் சாதம் தானம் செய்யலாம். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து பரிகாரம் பெறலாம்.
           சனிக்கிழமையன்று திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரை தரிசித்து வந்தால், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம், திருக்கொள்ளிக்காடு சென்று  பொங்கு சனீஸ்வரை வழிபட்டு விட்டு, நேராக அவரவர் வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த ஸ்தலத்தைத் தவிர திருநள்ளாறு, குச்சனூர், திரப்பரங்குன்றம் ஆகிய தலங்கள் சென்று வழிபட்டும் பலன் அடையலாம்.