உ
ஆட்டிப் படைக்கும் கிரகங்கள்.
உலகில் மனிதனாகப் பிறந்தவர்களில் சிலருக்கு மணவாழ்க்கை என்பது மணம் வீசும் மலர் வனத்தில் பூத்துக்
குலுங்கும் அழகிய மலர் போல் இனியதாக மகிழ்ச்சியுடன் கழிகிறது. ஆனால் மற்றும் சிலருக்கு ஏன் பிறந்தோம் ? -- என்று வேதனைப்படும் அளவுக்கு மண்ணில் மலர்ந்த நாள் முதல் கடைசியில் உதிரும் நாள் வரை துன்பமே வாழ்க்கையானால் எங்ஙனம் வாழ்வர் ? இதற்குக் காரணம் என்ன ? பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்க நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையன்றோ ! இவ்வாறு கஷ்டங்களையே அனுபவித்த ஒரு ஜாதகியின் ஜாதகத்தை ஆய்வு செய்வோமா ?
சந்
|
இராகு
மாந்தி
|
|
|
|
|
|
|
இராகு
சூரி
|
|
இராசி
|
|
|
நவாம்சம்
|
புத,சனி
|
புத,சுக்
செவ்,சூரி
லக்///
|
சனி
|
சுக்
|
லக்/// சந்
|
குரு
|
|
கேது
|
|
கேது
|
குரு
மாந்தி
|
|
செவ்
|
இந்த ஜாதகத்தில் இலக்னத்தில் உச்ச செவ்வாயும், சூரியனும், அஸ்தமனம் அடைந்த வக்கிர புதனும், இராசி சந்தியில் சுக்கிரனும் இருக்கின்றன. சூரியனும், சனியும் பரிவர்த்தனையில் உள்ளனர். சனி 8 ஆம் வீட்டிலும், குரு விரய வீடான தனது சுயவீட்டில் அமர்ந்துள்ளார். குருவுக்குக் கேந்திரத்தில் 3 ஆம் வீட்டில் சந்திரனும், இலக்னத்துக்குச் சதுர்த்த கேந்திரத்தில் இராகு, மாந்தியுடன் அமர்வு.
நவாம்சத்தில் இலக்னத்தில் சந்திரனும், கடகத்தில் புதன், சனி மிதுனத்தில் இராகுவும் சூரியனும், கன்னியில் செவ்வாயும், செவ்வாய் நவாம்சத்தில் குருவும், மாந்தியும் உள்ளனர்.
பாவக மாற்றங்களாக, சுக்கிரன் 12 ஆம் வீட்டிலும், சந்திரன் 2 ஆம் வீட்டிலும், இராகு 4 ஆம் வீட்டிலும், கேது 9 ஆம் வீட்டிலுமாக உள்ளனர்.
இந்த ஜாதகத்தில் இலக்னாதிபன் பரிவர்த்தனை பெற்றாலும், இலக்னாதிபதி 8 ஆம் வீட்டிலும் 8 ஆம் அதிபதி இலக்னத்திலும் இருக்கின்றனர். பஞ்சமாதிபதி சுக்கிரன் இலக்ன பாவத்தில் பலமுடன் இருந்தாலும், புதன் அஸ்தமனமாகி உள்ளார். களத்திர பாவாதிபதி இராசியில் சகோதர பாவத்தில் இருந்தாலும், பாவத்தில் குடும்ப பாவத்தில் இருப்பதால், சனியால் பார்க்கப்படுகிறார். ஒரு ஜாதகத்தில் யோககாரகனும், இலக்னாதிபதியும் பாதிப்படைந்தால் அந்த ஜாதகிக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாது. அதேபோல், சந்திரனும், சனியும் – சுக்கிரனும் சனியும் 6 / 8 ஆக அமைந்தால் அவளுக்கு நல்ல குடும்பம் அமையாது.
மேலும் இலக்னத்தில் செவ்வாய் உச்சத்திலும், சுக்கிரன், புதன் மற்றும் நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில் சனியும் உள்ளதால் இவளுக்குப் புனர்பூ யோகமும், அனுசித விவாக யோகமும் அமைந்தது. நவாம்ச இலக்னத்துக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதாலும், 7 ஆம் அதிபதி சனி அந்த வீட்டுக்கு சஷ்டாஷ்டமத்தில் இருப்பதாலும் சூழ்நிலை காரணமாக இவள் அனுசித விவாகம் புரிவாள் என்பதைக் காட்டுகிறது. மேலும், பண்டைய நூல்களில் மகரத்தில் உள்ள கிரகங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்த ஜாதகிக்குப் பொருந்தி வருவதைக் காணலாம்.
மகர ராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் குடும்பத்தில் குழப்பங்கள் இருந்து கோண்டே இருக்கும். எந்தக் காரியத்திலும் அவர்களுக்குப் அதிக உற்சாகம் இருக்காது. எதிலும், எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது. குடும்பப் பற்று அதிகம் இருக்காது. பெயரும், புகழும் உண்டாகாது.
மகரம் இலக்னமாகிப் பிறந்தவர்கள் கிடைத்ததைக் கொண்டு சந்தோஷப்படுபவனாகவும், கெட்டிக்காரத்தனம் உடையவனாகவும், பயந்த குணம் உடையவனாகவும், எப்போதும் துணிந்து பல பாவ காரியங்களைச் செய்பவனாகவும், வாதம், கபம் இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவனாகவும் இருப்பான்.
மகரத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள், எப்போதும் தன் இஷ்டப்படி நடக்கக் கூடியவர்களாக இருப்பர். உறவுகளின் மீது அன்பில்லாதவர்களாகவும், உறவுகளால் அவமதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர். வழக்குகளில் எதிர்பாராத வெற்றியை அடைபவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், எல்லாவித சுகங்களையும், எந்த விதத்திலாவது அனுபவிப்பவர்களாகவும். பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவராகவும் இருப்பார்கள்.
மகரத்தில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் கெட்ட பழக்கங்கள் உடையவர்களாகவும், எப்போதும் மனதில் துக்கம், சந்தேகம், அவநம்பிக்கை உள்ளவர்களாகவும், குசும்பான மற்றும் எதிர்மறையான புத்தி உள்ளவர்களாகவும், எதிரிகளிடம் இருந்து அதிக இன்னல்களை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
மகரத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் வயதான பெண்மணிகளை மணக்க விரும்ப மாட்டார்கள். கெட்ட வாழ்க்கை வாழ விரும்புவார்கள், வீணாகப் பணத்தைச் செலவு செய்வார்கள், அதிகக் கடன் வாங்குவார்கள். கவிதை, காவியங்களில் ஆர்வமுடையவர்கள். உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படும்
இந்த கிரக நிலைகள் காரணமாக வாழ்க்கையில் இவள் பட்ட கஷ்டங்களைக் காண்போமா ?
இவளது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்தவர்கள். தந்தை இந்து, தாய் கிருத்துவர் ஆவர். வளமான குடும்பத்தில் பிறந்த இந்த வனிதை, ஒரு பேரழகி. நன்கு படித்துப் பட்டம் பெற்றாள். கல்லூரியில் இவள் அழகில் மயங்கிய மாணவன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அவள் சம்மதிக்காது போகவே சுற்றுலா சென்ற இடத்தில், இவள் அறைக்கு வந்தவன் பலாத்காரம் செய்தான். மான் புலியின் கையில் மாட்டி சீரழிந்தது. கற்பமானதால் வேறுவழியின்றி அவனையே மணந்தாள். ஒர் ஆண் மகவும் பிறந்தது. கணவனின் கொடுமை தாங்காது தற்கொலைக்கு முயன்று தப்பித்தாள்.
பின்னர் ‘ஹரே கிருஷணா’ இயக்கத்தில் மனஅமைதிக்காக சேர்ந்த பொது, அந்த இயக்கத்தில் இருந்த வயது குறைவான இளைஞன் மீது மையல் கொண்டு, கணவன் மறுத்தாலும், அவனையே திருமணம் செய்து கொள்ள நினைத்தாள். இதை அறிந்த கணவன் வீட்டைவிட்டு அவளை வெளியேற்றினான். அவளும் தான் பெற்ற மகனையும் விட்டுவிட்டு அந்த ஆடவனுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாள்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா ? கிரகங்களால் ஆட்டிப் படைக்கப்படும் மனிதர்களின் ஜாதகத்தில், கிரகங்கள் நடத்தும் விளையாட்டை இந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்தோமல்லவா ?