Showing posts with label கேப்டன் டோனி. Show all posts
Showing posts with label கேப்டன் டோனி. Show all posts

Thursday, July 16, 2015

கேப்டன் டோனி


கேப்டன் டோனி

       இராசி மண்டலத்தில் ஒரு நாட்டின் தலைநகருக்கான இராசியே, அந்த நாட்டின் அனைத்து விஷயங்களுக்கும், தனது தாக்கத்தைத் தருகிறது. அரசியல் மாற்றங்கள், தலைவர்களின் நிலை, பொருளாதாரம் என அனைத்தும்.அந்த இராசியைப் பொறுத்தே அமையும். இராசி மண்டலத்தில் உள்ள  பிரதேசங்களில் எவை சுப அல்லது அசுப எல்லைகளில் இருக்கின்றன என்பதை அது இருக்கும் இராசியின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
       சுபத்துவம் பெற்ற பகுதிகளில் பிறந்தவர்கள் நாட்டுக்கு நல்லது செய்பவர்களாக விளங்குகின்றனர். விளையாட்டுகளில் கூட, அதன் தலைவனின் இராசியின் தாக்கமும், நாட்டின் இராசியைப் பொருத்தே அமைகிறது.
       நாம் தற்போது வெற்றிகரமான கிரிக்கெட் அணித்தலைவர்களைப் பற்றி பார்ப்போம்.
இந்தியா
       மஹேந்திர சிங் தோனி  - ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன் ஆவார். உலகத்தின் முதல் 10 கேப்டன் வரிசையில் தோனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது பிறந்த தேதிஜூலை, 7- 1981 , நேரம் காலை மணி 11 – 15, பிறந்த இடம் ராஞ்சி ஆகும். ( 85 – 19 – 48 கி. – 23 – 21 – 36 ). இவரது சந்திரா லக்னம் கன்னி, நவாம்சத்தில் சந்திரன் மகர நவாம்சம் பெற்றுள்ளார். இந்தியாவின் இராசியான மகரத்துக்கு, கன்னி  திரிகோண இராசியாகும். அவரது நட்சத்திரம் உத்திரம் ஆகும். அது நமது நாட்டின் நட்சத்திரமான திருவோணத்தில் இருந்து தாரா பலம் பெறுகிறது. மேலும், அவரின் ஜாதக நவாம்சத்தில் சந்திரன் மகரத்தில் இருப்பதும் நல்ல நிலையே ஆகும். அவரது இராசியான கன்னியும் இந்திய ஜாதகத்திற்கு, உற்ற துணையாக / ஆதரவாக  அமைகிறது. கேப்டன் அல்லது விளையாடுபவர்களின் இராசி, போட்டிகளில் நாட்டின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது எனலாம்.
       சௌரவ் கங்கூலி இவரும் ஒரு வெறிறிகரமான கேப்டனாகத் திகழ்ந்தார். ஜூலை, 8 ஆம் நாள், 1972 ஆம் வருடம் ( காலை 8 – 30 அல்லத் பகல் 1 மணி என்ற குழப்பம் நிலவுகிறது) கொல்கட்டாவில் பிறந்தார். சந்திர இராசியை மட்டுமே, நாம் பார்ப்பதால், பிறந்த நேரத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.
       இவர் ரிஷப இராசிக்காரர். ரோகிணி நட்சத்திரம், இராசி மற்றும் நட்சத்திரம் இரண்டுமே இந்திய நாட்டிற்குத் ஆதரவாய் உள்ளன.
       மொகமட் அஸாருதின் இவருடைய தலைமையும் இந்திய அணிக்கு, மகத்தானதாக அமைந்தது. பிப்ரவரி – 8, 1963 இல் ஹைத்ராபாத்தில், இரவு 10 – 25 க்குப் பிறந்த இவரது இராசி கடகம். நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். இரண்டுமே இந்திய நிலைகளுக்கு உகந்தது ஆகும்.
       சச்சின் டெண்டூல்கர் வெற்றிகரமான விளையாட்டு வீர்ராகத் திகழ்ந்தாரேயன்றி, வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கவில்லை. இவர் ஏப்ரல்- 24, 1973 இல் பிறந்தவர். தனுசு இராசி, பூராட நட்சத்திரம். இந்திய இராசிக்கு இரண்டுமே சுமாராகவே ஆதரவு அளிக்கிறது.
       விராட் கோலிசிறந்த ஆட்டக்காரர், எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்பு உண்டு. நவம்பர் – 5, 1988 – காலைமணி 10 – 28 க்கு டெல்லியில் பிறந்தார். இவரும் டோனியைப் போல் கன்னி இராசி, உத்திர நட்சத்திரக்காரர். இரண்டுமே இந்திய நாட்டிற்கு ஆதரவானவை ஆகும்.
ஆஸ்திரேலியா
       ஸ்டீவ் வாக். உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர். ஜூன் – 2, 1965 இல் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் மிதுனத்தில் பிறந்தார். மிதுனமானது, அந்த நாட்டின் இராசியான சிம்மத்திற்கு இலாப பாவம் ஆகும். அவரின் நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அது ஆஸ்திரேலியாவின் உத்திரத்திற்கு ஆதரவானது.
      ரிக்கி பாயிண்டிங் இவரும் ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான தளபதி ஆவார். டிசம்பர் – 19, 1974 இல் பிறந்த இவரது இராசியான கும்பம், அந்த நாட்டின் இராசியான சிம்மத்திற்கு 7 ஆம் இடமாவதும், அவரின் நட்சத்திரம் அவிட்டம் நாட்டின் நட்சத்திரத்திற்கு ஆதரவானது ஆகிறது. (நன்றி- இராகவேந்திர கரே, ஈஎஸ்டி).

--- ஜோதிட ப்ரவீணா - எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.                           (அப்ளைடு அஸ்ட்ராலஜி)