Showing posts with label நாடி முறை. Show all posts
Showing posts with label நாடி முறை. Show all posts

Tuesday, June 26, 2018

நாடி முறை





நாடி முறை





கோசார கிரகத்தின் மூலமாக நிகழ்வுகளின் பலன் காண கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்.


ஜாதகம் – 23

சூரி, செவ்
சுக்




உ. ஜா. 23





சனி,குரு


         இந்த உதாரண ஜாதகத்தில், செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டுமே ஆண் மற்றும் நெருப்பு கிரகங்கள் ஆகும். இரண்டுமே ஒளி மிக்க கிரகங்கள் ஆகும். இவர்களுடன் சுக்கிரனும் மீனத்தில் இணைந்துள்ளது. சுக்கிரன் ஒரு பெண்கிரகம் ஆதலால் சூரியன், செவ்வாயுடன் முழுவதுமாக பலத்தை இழக்கிறது. இதன் காரணமாக ஜாதகருக்கு குழந்தைப் பிறப்பில் பிரச்சனை, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஆகியவை ஏற்படுவதோடு, இவரிடமுள்ள பணம் அனைத்தும் அரசாங்கத்தால் கைப்பற்றப்படும். இந்த கிரக நிலைகளை மட்டும் வைத்து சுக்கிரனின், குருவின் பரிவர்த்தனை தொடர்பை சம்பத்தப்படுத்தி பார்க்காமல் எந்த ஜோதிடராவது ஜாதகத்தைப் பார்த்தவுடன் துரிதமாக பலன் சொல்ல முடியுமா?. ஆனால், இந்த பரிவர்த்தனையை கருத்தில் கொண்டால் சரியான பலன் கீழ்க்கண்டவாறு அமையும்.  ஜாதகனின் பணம் எதிரகளின் கைகளிலோ அல்லது முட்டாள் அரசியல்வாதிகள் கைகளிலோ அல்லது அரசாங்கத்திலோ மாட்டிக்கொண்டாலும், மரியாதைக்குரிய, மதிப்புமிக்க மனிதர்களின் உதவியால் பணம் மீண்டும் அவர் கைக்கு வந்து சேரும். இந்த விதி ஜனன ஜாதக கிரக இணைவு மற்றும்  இதே போன்ற கோசார கிரக இணைவுகளுக்கும் பொருந்தும்.    
1.   அஸ்தமன கிரக தாக்கங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
2.   ஒரு குறிப்பிட்ட இராசியில் 3 அல்லது 4 கிரகங்கள் இருக்கும் போது அவற்றின் பாகைகளின் வரிசைப்படி கணக்கிட்டு அதன்படி அவைகளின் தாக்கங்களைக் கண்டறிய வேண்டும்.
        ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் இவை தவிர மேற்கொண்டும் உள்ள பல விதிகளின் மூலமாக ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படப் போகிற பலன்களைக் காணுகின்ற வழிமுறைகளை  அடுத்துவரும் பத்திகளில் காணலாம்.
ஜாதகம் – 24
        நாடி காரணிகள் – கீழ்க்கண்ட ஜனன ஜாதகத்தில் கர்ம காரகன் எனப்படுகிற சனி, நீசமாகி, தன் பகைவன் கேதுவுடன் இணைந்துள்ளார்.
குரு
சனி,கேது

சுக்

உ. ஜா. 24
சூரி,சந்
லக்//, புத
செவ்



இராகு


         இந்த நீச சனி தன் பகைவன் கேது எனும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார்.
         அடுத்து, மேஷத்திலுள்ள நீச சனி. மகரத்தில் உள்ள உச்ச செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எனவே, கிரக இணைவுகளானது சனி + கேது + செவ்வாய் ஆகும் இதற்கு பலன் காணும்போது, ஜாதகர் வேலைகள் நிரந்தம் இல்லாமல் தடைப்பட்டு, விட்டு விட்டு பணிகளைச் செய்வார்.  குருவுக்கு இரண்டாம் இடத்தில் இந்த இணைவு இருப்பதால் தொழில், வேலைகளில் சிறிது முன்னேற்றங்கள் இருக்கும். ஆனால், அது நிரந்தர பலன் தராது எனலாம்.
         மேற்கு திசையைக் குறிக்கும் மிதுனத்தில் மனைவியைக் குறிகாட்டும் சுக்கிரன் உள்ளார். மற்றுமொரு மேற்கு திசை இராசிநான துலாத்தில் இராகு உள்ளார். இது அந்த ஜாதகரின் திருமணம் பாழானதைக் குறிகாட்டுகிறது.  மேலும் செவ்வாய் தனது பகைக் கிரகம் புதனுடன் 7 ஆம் வீடான கடகத்தில், அங்கே  சந்திரனும் சூரியனும் உள்ளனர். இந்த புதன் மற்றும் செவ்வாயின் பகையான இணைவு ஜாதகரின் வாழ்க்கையின் சந்தோஷம் மற்றும் அமைதிக்கு முள்ளாக இருப்பதாக அர்த்தம் தருகிறது.
         கைரேகை விஞ்ஞான ஜோதிடப்படி இந்த ஜாதகரின் உள்ளங்கையில் புதன் மேட்டில் கேதுவின் காரணிகள் தென்படும். செவ்வாய், சனி கிரக பரிவர்த்தனையால் அவர்களுடன் கேதுவும் இணைவதாகக் கொள்ளாலம்.
         எனவே, புதன் ரேகை உடைந்து உள்ளங்கையின் கீழாக இருக்கும். இந்த சனி, செவ்வாய் பரிவர்த்தனை குருவுக்கு 2 ஆம் இடத்தில் ஏற்படுவதால், குருவின் தாக்கம் ஜாதகரை வாழ்க்கையில் துறவு நிலைக்குக் கொண்டு செல்லும். அதன் இறுதி முடிவானது ஜாதகருக்கு ஏற்படும் பணி, தொழில் களில் தடைகள், மன அமைதியின்மை, உறவுகளுடன் (பெற்றோரோடு பிறந்தவர்கள்) சண்டை சச்சரவுகள், திருமண முன்னேற்றத்தில் தடைகள் ஆகியவையாகவே இருக்கும். செவ்வாய்க்கு 2 – 12 இல் கிரகங்கள் இல்லை. மகரத்தைப் போன்ற தென் திசை இராசிகளிலும் கிரகங்கள் இல்லை. செவ்வாய், சனிக்கு 5 ஆம் மற்றும் 9 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை. இந்த நிலைகளின் காரணமாக ஜாதகர்க்கு வாழ்க்கையில் எள்ளவும் அமைதியும், சந்தோஷமும் இல்லாமல் போயிற்று எனலாம்.   
ஜாதகம் – 25


குரு, லக்//



உ. ஜா. 25
 புத,கேது
இராகு
சூரி,சந்
சுக்

செவ்

சனி

        இந்த பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் தனது ஆட்சி வீடான சிம்மத்தில் உள்ளார். பெண் ஜாதகத்தில் சுக்கிரனே ஜீவன் ஆதலால் பலன்களை சுக்கிரனை வைத்தே பார்க்க வேண்டும். சந்திரனுடன், சுக்கிரன் இணைந்துள்ளதால் ஜாதகி குற்றம் சொல்வதற்கு தகுதியானவள் ஆகிறாள். கணவன் காரகன் செவ்வாய் வட திசையான விருச்சிகதில் உள்ளார். இதே வடதிசை இராசியான கடகத்தில் புதன் கேது இணைவு உள்ளது.  இது அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையேயான சண்டை சச்சரவுகளை குறிகாட்டுகிறது. மேலும் இவளின் கணவன் (செவ்வாய்) மற்றுமோர் பெண்ணுடன் (புதன்) காதலில் விழுந்துள்ளதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் செவ்வாய், புதன், கேது ஆகியோரின் வடதிசை இராசிகளில் உள்ள தொடர்பே ஆகும்.  
         குருவுக்கு 5 இல் சூரியன் இருப்பது ஜாதகிக்கு மதிப்பு மிக்க, புகழ் பெற்ற புத்திரன் இருப்பதை குறிகாட்டுகிறது. சந்திரன், சுக்கிரன் இணைவு சூரியன், குரு பார்வையைப் பெற்றதால் இவளுக்கு பெண் குழந்தை இல்லை. மேலும் பெண் குழந்தை பிறந்தாலும், அக்குழந்தைகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஜாதகி பிறந்ததில் இருந்து இரண்டாவது முறையாக கோசார கேது விருச்சிகத்தைத் தொடும் போது, இவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிவினையில் முடியும் என்று கூறலாம்.  பிறகு, ஜாதகி பிறந்த நாளில் இருந்து கோசார குரு மூன்றாவது முறையாக, சுமார் 40 அல்லது 41 வது வயதில் கன்னியிலுள்ள சனியைத் தொடும் போது கணவன், மனைவிக்குள் மீண்டும் சமாதானமாகி, ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்வர்.
         இதைப் போலவே, கோசார கேது கடகத்தில் உள்ள புதன் மேல் வரும் போது ஜாதகி தனது சகோதரர்களுடன் அடிக்கடி சண்டையிட்டும், வழக்கு விவகாரங்களில் ஈடுபடவும் செய்வாள். அதேபோல் கோசார இராகு தனுசு இராசியைத் தொடும்போதும் மேற்சொன்ன பலனையே ஜாதகி அனுபவிப்பாள். இரண்டாவது முறையாக கோசார இராகு வரும்போது அதன் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
ஜாதகம் – 26
         இந்த ஜாதகத்தில் கிரகங்கள் நாடி விதிப்படி, ஒரு திசைக் கிரகங்கள் வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன. வடக்கு – இராகு – மீனத்தில் உள்ளார். கிழக்கு – சூரியன், சந்திரன், புதன் தனுசுவிலும், சனி – சிம்மத்திலும், தெற்கு திசை இராசிகளான கன்னி மற்றும் மகரத்தில் கேது, செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் உள்ளனர்.

இராகு




உ. ஜா. 26
இராசி

சுக், குரு
சனி
சூரி,சந்
லக்//,புத


கேது,செவ்

         கோசார சனி மகரத்தில் வந்த போது ஜாதகர் ஜோதிடரிடம் ஆலோசனைக்கு வந்தார். ஜனன ஜாதகத்தில் அங்கே சுக்கிரனும், குருவும் உள்ளனர்.
         தென் திசை கிரகங்களான கேது, செவ்வாய், குரு, சுக்கிரன் உள்ளனர். குருவுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் கேதுவும் செவ்வாயும் உள்ளதால் ஜாதகருக்கும், அவர் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. சுக்கிரன் (மனைவி) செவ்வாய் (கணவன்) கேது (வழக்கு விவகாரங்கள், சண்டை சச்சரவுகள்) குரு (நீதிபதி) ஆகியவற்றைக் குறிகாட்டுவதால் ஜாதகத்தில் கோசார சனியின் நகர்வின் போது ஏற்பட்ட நிலையை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
         இதன் காரணமாக இருவரும் கோர்ட்டுக்குப் போனார்கள். கோசார குரு கன்னிக்கு வந்தபோது தீர்ப்பு வெளியானது. மகரம் கணவன் காரகன் செவ்வாயின் உச்ச வீடு ஆனதாலும், அங்கே குரு இருந்ததாலும் கணவனுக்கு சாதகமாகவே நன்மையான தீர்ப்பு வந்தது.

         மகரத்தில் கோசார சனி வந்த போது கோசார இராகு தனுசு இராசியில் வர மனோகாரகன் சந்திரன், புத்திக்கு காரகன் புதன் ஆகியோர் இராகுவின் தீய தாக்கத்தால் ஜாதகரின் பெற்றோர்க்கும், சகோதரர்களுக்கும் பல இன்னல்களை ஏற்படுத்துவார். இந்த நிலை இராகு விருச்சிகத்தை அடையும்வரை நீடிக்கும்.