Showing posts with label வாஸ்துவும் வாசலின் அமைப்பும்.. Show all posts
Showing posts with label வாஸ்துவும் வாசலின் அமைப்பும்.. Show all posts

Friday, July 11, 2014

வாஸ்துவும் வாசலின் அமைப்பும்.




ஓம்
;
வாஸ்துவின்படி கதவுகள் அமைப்பதின் முக்கியத்துவம்.

       தற்காலத்தில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்கப்படும் முறைகளில் வெகுவாகப் பல குளறுபடிகள் உள்ளன. அவற்றைப் போக்க பண்டைய நூல்களில் இவ்வமைப்புக்கள் பற்றி நமது முன்னோர்களாகிய முனிவர்கள் என்ன குறிப்பிட்டுள்ளார்கள் ? – என்று பார்ப்போம், வீடு, வியாபார ஸ்தலம், தொழிற்கூடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் எதுவாகினும் கதவுகள் அமைவதைப்பொருத்தே அதில் வசிக்கப் போகிறவர்களின் ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் சந்தோஷம் ஆகியவை நல்ல முறையில் அமைகின்றன.

       சங்கரமண சூத்ரா – { . சூ ) என்ற நூலில் துவாரா, ப்ரவேஸனா மற்றும் நிர்கமணாஎன, வாசல் கதவுகள் பல வகையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓரு கதவானது நடுப்பலகைகள் மற்றும் சட்டங்களுடன் அமைய வேண்டுமென்பது. நாம் அறிந்தே சசூ வில் கதவுக்கான சட்டங்கள் 5 க்கு மேற்பட்டு இருக்கக்கூடாது, என்றும், அந்த ஐந்து சட்டங்களுக்கும் தேவி, நந்தினி, பத்ரா, பிரியானனா மற்றும் சுந்தரி எனப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

           தேவி

             நந்தினி
                                                                             த்ரா               
                            
பிரி           
யான
னா
         

              சுந்தரி

       பிருஹத் சம்ஹிதாவில் (பி. ) கதவின் உயரமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்கு இருக்க வேண்டும்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மய மதாவில் (.) கதவு மூன்று பங்கு அகலமும், 7 பங்கு உயரமுமாக இருக்கவேண்டும் என்றும், அகலத்தின் அளவுக்கு இரண்டு பங்கு அளவாவது இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வீட்டின் நடுமையத்தில் அமைக்கப்படும் வாசல் , குடும்ப அழிவுக்குக் காரணமாகின்றது என்றும் குறிப்பிடுகிறது.
       
     கதவுகளின் தன்மை மற்றும் அதில் ஏற்படும் குறைகளைச் சுட்டிக்காட்டும் குறிப்புக்கள் மம விலும்சசூ விலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கதவுகளில் அடிக்கப்படும் ஆணிகள், போல்டுகள் ஆகியவை கதவுகளின் சட்டங்களில் உரசக்கூடாது. அப்படி உரசினால் குடும்பத்தில் பிரச்சனைகளும், எதிரிகளால் தொல்லைகளும் ஏற்படும். கதவுகளைத் திறக்கும் போதும் , மூடும் போதும் எவ்வித சத்தமும் வரக்கூடாது.










         

















       சங்கரமண சூத்ராமய மாதாமற்றும் பிருஹத் சம்கிதா ஆகிய மூன்று நூல்களிலுமே, தற்காலத் தானியங்கிக் கதவுகள் அமைப்பது தவறானது என்றும் அவ்வாறு தானாகத் திறந்து மூடும் கதவுள்ள இல்லங்களில் அது குடும்ப அழிவைத்தரும் எனவும் குறிப்பிடுகின்றன. மேலும், இவ்வமைப்பு மன அமைதியின்மை மற்றும் மனத் தெளிவின்மையும் அளிக்கிறது. மய மாதாவில் கதவை மூடித்திறக்கும் போது எந்த நிலையில் விடப்படுகிறதோ அந்த நிலையிலேயே இருக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

       மேலும், வாசல், கதவுகளை அமைப்பது  பற்றி நூல்களில் என்ன சொல்லப் பட்டுள்ளது ? – என்று பார்ப்போம். கதவின் சட்டங்கள் சதுரமாகவும், அழகான, நேரான அமைப்பிலும் இருக்கவேண்டும். அவை, மெலிதாகவோ, சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது. மிகப் பெரிய கதவுகள் உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு  அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படும் என்றும், மிகத் தாழ்வான கதவுகள் கஞ்சத்தனத்தையும், திருட்டு பயத்தையும் தரும் என்றும், மிக ஒடுக்கமான கதவுகள்சந்தோஷம் இன்மையையும், மிக அகன்ற கதவுகள் வீட்டில் உள்ளவர்களுக்குப் பசி பட்டினியையும் மற்றும் உணவுப் பஞ்சத்தையும் அளிக்கிறது என்றும் பிருகத் சம்கிதை குறிப்பிடுகிறது. வளைந்து, நெளிந்நு உள்ள அமைப்பு ஏழ்மையை அளிக்கிறது.

       மனசாராஎனும் நூலில், தலைவாசல் கதவு பெரிதாகவும், அழகிய அலங்காரங்களுடன் அமைக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. மய மாதாவில்தலைவாசல் கதவு கனமாகவும், பலம் மிக்கதாகவும் இருப்பதோடு, பலம் மிக்க உலோகப்பட்டிகள் மூலம் பலப்படுத்த வேண்டும். என்றும் சங்கரமண சூத்ராவில்தலைவாசல் கதவில் அழகிய முறையில் தங்கள் குலதெய்வத்தின் பிம்பமானது 18” அளவுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும், தாமரைப்பூவில் அமர்ந்த கஜலட்சுமி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பசுவும் கன்றும் போன்ற உருவங்களை அழகாக அமைக்கலாம்.

       பிருகத் சம்கிதாவில்தலைவாசல் கதவைத் தவிர மற்ற கதவுகள் அதிகமாக அலங்கரிக்கப்பட்டிருக்கக் கூடாது அதுபோல் கவரும் விதமாகவும் இருக்கக்கூடாது.  பல நூல்களில் கதவுகளை இரு பிரிவுகளாக அமைக்கும்படி வலியுறுத்தப்படுகிறது. ஆயினும், கதவை ஒரே பகுதியாக அமைக்கக்கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாம் இரு பகுதியுள்ள கதவுகள் சிறந்ததெனக் கொள்ளலாம். தலைவாசல் கதவுக்கு நேரெதிரே, அந்தக் கதவின் உயரத்திற்கு இரு மடங்கு தூரத்திற்குள் காற்றும், வெளிச்சமும் தடைப்படும் என்பதால் எந்தவொரு மரம் போன்ற தடைகளோ அல்லது மறைப்போ இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட தடைகளுக்குத்வார வேதைஎன்று பெயர்.

       இது பற்றி பிருகத் சம்கிதா மேலும் குறிப்பிடுவதாவது தலைவாசலுக்கு எதிரில் வீதியோ, மரமோ, கிணறோ, குளமோ இருப்பது அனுகூலமற்றது. ஆனால் வாசலின் உயரத்தின் அளவுபோல இருமடங்கு தூரத்துக்கு அப்பால் இவையிருந்தால் குற்றமில்லை என்கிறது. மச்சபுராணத்திலும் இதே கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

       வீடு அல்லது கட்டிடத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஆள்கின்ற தேவதையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மூலையிலிருந்து, சிகின், ப்ரஜன்யா, ஜெயந்தா, இந்திரா, சூர்யா, சத்யா, ப்ரஸா, அந்தரிக்ஷா மற்றும் அனலா, பூசன், விதாதா, ப்ரகத்சதா, யமா, கந்தர்வா, ப்ரங்கராஜா, மர்கா, பித்ரு எனவும் தென்மேற்கு மூலையில் துவங்கி துவாரிகா, சுகிர்வா, குசுமந்தா, வருணா, அசுரா, சோமா, பாபயக்ஷமன், எனவும் வடமேற்குப் பகுதியிலிருந்து, ரோகா, அகி, முக்யா, பாலதா, சோமா, பூஜகா, அதிதி மற்றும் திதி என ஒரு முறையான வரிசையில், மொத்தம் 32 தேவதைகள் உள்ளன.

சிகின்
ப்ரஜன்யா
     O
ஜெயந்தா
   O
இந்திரா
  O
சூர்யா
சத்யா
பர்சா
அந்தரிக்ஷா
அனலா

திதி







பூசன்

அதிதி







விதாதா

பூஜகா






  



பிரகத்சதா
   O

ஸோமா
  O


 பிரம்ம
ஸ்தானம்


யமா

பாலதா
  O




கந்தர்வா

முக்யா
  O








ப்ரங்கராஜா

அகி







மர்க

ரோகா
பாபயக்ஸ்
மான்
சோமா
அசுரா
வருணா
  O
குசுமந்தா
   O
சுக்ரிவா
துவாரிகா
பித்ரு


O – தலைவாசலுக்கான இடங்கள்.

பிருகத் சம்கிதா குறிப்பிடுவதாவது

1.   கிழக்கில் பிரஜன்யா பகுதியில் வாசல் அமைக்கப்பட்டால் பெண்குழந்தைப் பிறப்பும்.

2.   ஜெயந்தா பகுதியில் அமைந்தால் அதிக செல்வங்களும், இந்திராவில் அமைந்தால் இராஜ அனுகூலமும். தெற்கில்பிரகத்ஷதா பகுதியில் அமைந்தால் நிறைவான உணவு மற்றும் குழந்தைகள் ஏற்படும்.

3.   மேற்கில் குசுமந்தா பகுதியில் அமைந்தால் செல்வச் செழிப்பும், மகன்களின் முன்னேற்றமும், வருணா பகுதியில் அமைந்தால், செல்வப் பெருக்கமும் மற்றும்

4.   வடக்குப் பகுதியில்முக்கியா பகுதியில் அமைந்தால் ஆண்வாரிசும், பாலதா பகுதியில் அமைந்தால் திறமை மிக்கத் தொழில் நிலையும், ஸோமா பகுதியில் அமைந்தால் செல்வமும், குழந்தைச் செல்வமும்  ஏற்படும்எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவாசலானது  பிரம்ம ஸ்தானத்திற்கு எதிரே அமையக்கூடாது. அப்படியென்றால் முன்னர் கூறியபடி ப்ரஜன்யா, ஜெயந்தா மற்றும் முக்யா ஆகிய பகுதியைத் தவிர மற்ற இடங்களில் அமைவது தவறா ? – இல்லை. ஆசிரியரின் கூற்றுப்படி மற்றவைகளுக்கு விலக்கு உண்டு.

      மய மாதாவிலும் தலைவாசல் இந்திராவிலும், ப்ரகத் ஷதா, பகுதியிலும் குசுமந்தா மற்றும் பாலதா பகுதியிலும் அமைக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

      மனசாராஒரு வசிப்பிடத்தில் நான்கு கதவுகள் கட்டாயம் அமைக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. கதவின் அகலமும், உயரத்தில் பாதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

நாம் தற்போது கீழ்கண்டபடி ஒரு முடிவுக்கு வரலாம்

1.   கதவின் உயரம், அகலத்துக்கு இரு மடங்கு அல்லது அதற்கு மேலாகவோ இருக்க வேண்டும்.

2.   நல்ல பலகை மற்றும் கட்டைகளை வைத்துக் கதவுகள் அமைக்கவேண்டும்.

3.   ஒரு கதவு அதிகப்படியாக ஐந்து சட்டங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
4.   தானியங்கிக் கதவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

5.   கதவிலுள்ள ஆணி, போல்ட்டுகள் மற்றும் தாழ்ப்பாழ்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

6.   மேலே சொன்னபடி குறிப்பிட்ட தேவதைகளின் இடங்களில் மட்டுமே கதவுகள் அமைக்கப்படவேண்டும்.

7.   கட்டிடத்தின் நடுவில் தலைவாசல் இருக்கக்கூடாது.

8.   தலைவாசல் பலம் மிக்கதாக இருக்க பல உலோகப்பட்டிகளை உபயோகிக்கலாம்.

9.   தலைவாசல் பெரியதாகவும், அலங்கரிக்கப்பட்டு அழகாகவும் இருக்கவேண்டும்.

10.  கதவின் உயரத்துக்கு இருமடங்கு தூரத்திற்குள் துவாரவேதை ( மரம், தடைகள், கிணறு, குளம் ) இருக்கக் கூடாது.

11.  இரண்டு பகுதிகளாக உள்ள கதவே அனுகூலமானது.

       தலைவாசலுக்கு இரு பக்கமும் ஜன்னல்கள் வைப்பது உசிதமாகும். கதவுகளுக்கும், ஜன்னல்களுக்கும் ஒரே வகையான மரங்களைப் பயன்படுத்த  வேண்டும். புதிய கட்டுமானங்களில் பழையமற்றும் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட கதவுகள் மற்றும ஜன்னல்களைப் பயன்படுத்தக் கூடாது. தலைவாசற் கதவு உள் பக்கமாக மற்றும் வலப்புறமாகத் திறக்கும்படி அமைத்திடல் வேண்டும்.

       பொதுவாக 9”  மற்றும் 12” அளவுள்ள ஓம் எனும் ப்ரணவ மந்திர வடிவம் கதவில் அமைக்கப்பட்டால் கண்ணேறுகளிலிருந்து விடுபடலாம். கதவுகளும், ஜன்னல்களும் இரட்டைப்படையில் அமைப்பது நல்லது. ஆனால் 10 என்ற எண்ணிக்கையை மட்டும் தவிர்க்கவேண்டும்.

       நிலை வைக்கும் போது பார்க்க வேண்டிய நல்ல முகூர்த்தம் பற்றி பீ,வி. இராமன் அவர்கள் குறிப்பிடுவதாவதுஇலக்னம் ஸ்திர இலக்னமாக இருக்கவேண்டும் என்றும் ரோகிணி, மிருகசிரீடம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அனுகூலமானது என்றும் குறிப்பிடுகிறார்.

       எனவே, நண்பர்களே ! பழைய வாஸ்து சம்பந்தமான ஜோதிட நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நிலைகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் செல்வம் பெருகும் என்பதில் ஐயமில்லை. வாஸ்துபடி வாசல்கள் அமைந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
            
 ---- ஜோதிட ப்ரவீணா. எஸ் விஜயநரசிம்மன். எம்.எஸ்ஸி,
                            (அப்ளைடு அஸ்ட்ராலஜி)