Showing posts with label இந்த வார நட்சத்திர பலன். 30/12/2014 --- 6/12/2014-சிம்மம் -- விருச்சிகம்.. Show all posts
Showing posts with label இந்த வார நட்சத்திர பலன். 30/12/2014 --- 6/12/2014-சிம்மம் -- விருச்சிகம்.. Show all posts

Sunday, November 30, 2014

இந்த வார நட்சத்திர பலன். 30/11/2014 --- 6/12/2014.சிம்மம் -- விருச்சிகம்.

இந்த வார நட்சத்திர பலன்.

30/11/2014 --- 6/12/2014


சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்

       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.

பூரம்

       இந்த வாரம் உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

உத்திரம்- 1 பாதம்

      இந்த வாரம் ஆரவாரம் மிக்க வாரம். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். மாணவர்கள் அன்றன்றைக்குத் தங்கள் பாடங்களை அக்கறையுடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

       இந்த வாரம் உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

ஹஸ்தம்

       இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும்.

சித்திரை – 1,2 பாதங்கள்

       இந்த வாரம் ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.

துலாம்

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள்


       இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.

சுவாதி

      இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள்

       இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்

        இந்த வாரம் நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான்  அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும்.   வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.

அனுஷம்

       இந்த வாரம் உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.   வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.

கேட்டை

     இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.