இளமெழில் முருகா
உளமுருகாதா
யிள மெழில் முருகா !
வளம்
பெருகாதா வடிவே லழகா !
( உளமுருகாதா )
பழம் நீயென்றே
, பழனியில் நின்றே ,
தொழுகின்ற
பக்தர் குறை தீர்க்க – உன்
( உளமுருகாதா )
கோடிக்கோடியாய்
யுந்தன் கோவிலிற்,
பக்தர் வந்துனைப்பணிந்தும் ,
பாடிப்பாடியே,
பக்தி மேலிட,
நெற்றியிற் திருநீரணிந்தும் ;
ஆடி ஆடியே ,
அழகுக்காவடி ,
தூக்கி, நன்நடம் புரிந்தும்>
கூடிக்கூடியே,
குமரா யெனுமவர்,
குறைகளுனுக்குத் தெரிந்தும்.
( உளமுருகாதா )