Thursday, July 12, 2018

நாடி ஜோதிட ஜாதக ஆய்வு



நாடி ஜோதிட ஜாதக ஆய்வு







ஜாதகம் – 30 அ & ஆ



லக்///

செவ்
உ. ஜா. 30.அ
இராசி
இராகு

சந்,கேது
சுக்

குரு
சனி
சூரி,புத

         மற்றுமொரு ஜாதகத்தைப் பார்ப்போம். உச்சம் பெற்ற கர்மகாரகன் சனியால் ஜாதகர் மிக உயரிய பதவியில் இருந்து, சமூகத்தில் கௌரவம், மதிப்பு, மரியாதையுடன் வாழ்பவர் என்பதை அறிகிறோம். சனிக்கு 2 இல் குரு இருப்பது அவர் பார்க்கும் பணியில் மேலும் முன்னேற்றத்தை அளிக்கிறது. கன்னியில் உள்ள சூரியன் + புதன் இணைவுக்கு திரிகோணத்தில் சந்திரனும், கேதுவும் உள்ளனர். இந்த இணைவு ஜாதகர் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடிய, மிகப் பெரிய மேதாவியாக, மறைபொருள் (சந்திரன் + கேது) விஷயங்களையும் அறிந்தவராகவும் இருப்பார் என்பதை உணர்த்துகிறது.



கேது

உ. ஜா. 30. ஆ
கோசாரம்


சனி
குரு(வ)
சூரி, செவ்
ராகு, புத
சுக்




        ஜாதகம் பரிசீலனைக்கு வந்த நேரத்தில் கோசார சனி மகரத்தில் நுழைந்த போது ஜனன ஜாதகத்தில், அங்குள்ள சந்திரன், கேதுவின் மேல் நகர்கிறது. இது சந்திரன், கேது மற்றும் சனியின் இணைவை மகரத்தில் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தாய்வழிச் சொந்தங்கள் இவரோடு சண்டையிடவும், பழி போடுதலும் மற்றும் குற்றம் சுமத்துவதுமாக உள்ளனர்.
         ஜனன ஜாதகத்தில் கீழ்திசை கிரகங்கள் சிம்மத்தில் உள்ள சுக்கிரன், தனுசுவில் உள்ள இராகு ஆகும். இது ஜாதகரின் மனைவி மிகுந்த மனக் கஷ்டத்தில் உள்ளார் என்பதை அறிகிறோம். அவளுக்கு இருக்கும் நோய் மற்றும் வீடு பற்றிய விவகாரங்களில் சண்டை சச்சரவு ஏற்படும்.  

ஜாதகம் – 31 அ & ஆ


சூரி,சுக்
புத




உ. ஜா. 31. அ
இராசி



இராகு
லக்//,குரு(வ)
சனி(வ)








லக்///,கேது

உ. ஜா. 31. ஆ
கோசாரம்


சனி
குரு(வ)
ராகு,
சூரி, செவ்

சுக்,சந்,புத




        ஜாதகம் எண் 31 அ வை பார்ப்போம்.  இந்த ஜாதகத்தில் இலக்னத்தில் கிழக்கு திசை இராசியில் குரு, மற்ற கிழக்கு இராசிகளான மேஷத்தில் சூரியனும், சிம்மத்தில் இராகுவும் உள்ளனர். ஆனால், குருவும், சனியும் வக்கிர நிலையில் உள்ளனர். ஜனன ஜாதகத்தில் குரு + சூரியன் + இராகு இணைவு. ஜாதகத்தில் இராகு உள்ள இடத்தில் கோசாரத்தில் வக்கிர குரு உள்ளார். சூரியனும், குருவும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இதன் காரணமாக ஆண் மகவை குறிகாட்டும் சூரியன், இராகுவினால் பாதிப்பு அடைகிறார். இது ஜாதகருடைய மகன் கடும் இன்னல்களை சந்திப்பதைக் குறிகாட்டுகிறது.
         களத்திர காரகன் சுக்கிரன் கோசாரத்தில் நீச சந்திரனுடன் இருப்பது ஜாதகரின் மனைவியும் கஷ்டங்களை அடைவதையும், அவளுக்கு மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.
         கோசாரத்தில் சூரியனும், இராகுவும் ஒரே பாகையில் உள்ளனர். இதன் காரணமாக ஜாதகரின் மகனுக்கு மரணத்துக்கு இணையான பெரிய ஆபத்து / கண்டத்தைக் குறிகாட்டுகிறது.

ஜாதகம் – 32 அ & ஆ 

கேது,சந்
லக்///



உ. ஜா. 32. அ
இராசி




சனி,புத
சூரி, செவ்

குரு,சுக்


இராகு




லக்///,கேது

உ. ஜா. 32. ஆ
கோசாரம்


சனி,சந்
குரு(வ)
 செவ்,சூரி
புத,ராகு

சுக்




        இந்த ஜாதகத்தில் இராகு தனுசுவில் வந்துள்ளது. ஜனன ஜாதகத்தில் அவ்விடத்தில் தந்தைக் காரகன் சூரியன், சனியுடன் பகை பெற்றுள்ளனர். புதனும், செவ்வாயும் பகை நிலையிலேயே உள்ளனர்.
        கோசாரத்தில் இராகுவுடன் இணைந்து இதே கிரக இணைவுகள் உள்ளன. குருவும், சூரியன் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். ஆனால், குரு வக்ரமாகி உள்ளதால் அவருக்குப் பின்புற பார்வையே உள்ளது. இதன் காரணமாக குருவின் பார்வை கடகத்தில் இருந்து துவங்கி, பணத்தைக் குறிக்கும் சுக்கிரன் இருக்கும் விருச்சிகத்தில் முடிகிறது. இதனால், அவருடைய சகோதரருடன் சண்டை சச்சரவுகள் மற்றும் ஜாதகருக்குப் பணக் கஷ்டங்களும் இருக்கும். வக்ர குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் ஜாதகர் அவரது மகனின் செல்வாக்கால் பெரிய மனிதர்களின் உதவியால் ஜாதகர் இந்த இக்கட்டான சூழ்யிலையில் இருந்து வெளிவருவார்.
         ஜனன ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். இது சுக்கிரனும் அவர் நண்பர் செவ்வாயும் இணைந்துள்ளதற்கு சமம். விருச்சிகம் பூமியைக் குறிகாட்டுகிறது. எனவே, ஜாதகரின் கேள்வி பூமி, சொத்து பற்றியமாகவே இருக்கும். கேள்வி நேரத்தில் கோசார இராகு சுக்கிரனுக்கு அடுத்த இராசியில் உள்ளது. எனவே, அந்த சொத்து மிகவும் பழமையானது என அறிகிறோம்.
         ஜனன ஜாதகத்தில் குரு, செவ்வாய் பரிவர்த்தனையினால், சுக்கிரனும் இவர்களுடன் இணைவு பெறுகிறார். இதனால் இந்த வீடு, சொத்துக்கள் தெய்வீக தன்மையுடையதைக் காட்டுகிறது.
         இந்த ஜாதகரின் தந்தைக்கு இரு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. அந்த பரம்பரைச் சொத்துக்கள் மீது வழக்கு விவகாரங்கள் இருந்தன. கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில்   குரு வக்ரம் காரணமாக கடகத்தில் இருந்து சுக்கிரனைப் பார்ப்பதாகக் கொள்ளலாம். எனவே, குறுகிய காலத்திலேயே ஜாதகருக்கு சாதகமான நிலை உருவாகும் எனலாம்.


No comments:

Post a Comment