Thursday, September 27, 2012





பனிநீக்கும் பகலவனே ராகவேந்திரா !


உனைக்காண ஓடிவந்தேன் ராகவேந்திரா  !
உன் னருளைத் தருவாயா ராகவேந்திரா !
                                  (உனைக்காண)
எனக்காக யின்ப விளக்கேற்றி வைப்பாய் – அதில்
அருளான நல்லெண்ணை யூற்றிவைப்பாய் ;
அணையாத விளக்காக ஆக்கி வைப்பாய் – வாழ்விற்
துணையாகி எனை உயரத் தூக்கி வைப்பாய் ;
                                  (உனைக்காண)
பணக்காரனாக வேண்டேன் ராகவேந்திரா – நாளும்
பணிகின்ற பாக்கியம் போதும் ராகவேந்திரா ;
நீளுலகை யாள வேண்டேன் ராகவேந்திரா – என்றும்
நெஞ்சில் நீ மட்டும் இருந்தாற் போதும் ராகவேந்திரா ;
                                  (உனைக்காண)
இனிக்கின்ற வாழ்க்கை வேண்டேன் ராகவேந்திரா – என்றும்
இன்னலிலா வாழ்வு போதும் ராகவேந்திரா ;
பனிநீக்கும் பகலவனே ராகவேந்திரா – நான்
இனியென்று முன்னடிமை ராகவேந்திரா ;
                                   (உனைக்காண)

No comments:

Post a Comment