அருள்வாளோ அன்னை மீனாட்சி !
அவனி யெலா மிங்கு அவளாட்சி ;
ஆவலாய்க் காணவந்தோம் அருட்காட்சி !
நல்லெழிற் காட்சி !
அவளே நமக்
கென்றும் வழிகாட்டி – துணை
(அருள்வாளோ)
பவனிவரும் தங்கத் தேரினிலே,
குவளைவிழி கொண்டு நேரினிலே;
உவகையுடன் கண்டு பாரினிலே,
அவலநிலை மாறிச் சீருறவே !
(அருளவாளோ)
நீதியில்லை,நாட்டில் நேர்மையில்லை,
வேதத்திலே யெவர்க்கு மார்வமில்லை;
சாதியின் பேர்சொல்லிப் பார்வையிலே,
வேதியரை வெறுக்கும் நிலைமாற !
(அருள்வாளோ)
போதிய உணவின்றி,உடையுமின்றி,
நாதியின்றி கேட்க யாருமின்றி,
வீதியிலே மக்கள் சாகின்றார் ;
மேதினியி லிந்த நிலைமாற !
(அருள்வாளோ)
தங்கள் ஆதங்கம் படிக்கும் எங்களையும் மிகவும் பாதித்துப் பிரார்த்தனையில் பங்கு கொள்ளத்தூண்டுகிறது; கருத்துள்ள பாடல் :)
ReplyDeleteஊக்குவித்தற்கும்,கருத்துக்கும், நன்றி.
ReplyDelete