Saturday, September 15, 2012






          சாந்தி நிலவ வேண்டும்...!



சாந்தி நிலவ வேண்டும் எங்கும்
சாந்தி நிலவ வேண்டும்
                          ( சாந்தி நிலவ )
காந்தி மகாத்மா கட்டளை யதுவே
கருணை யொற்றுமை கதிரொளி பரவி,
                          ( சாந்தி நிலவ )
கொடுமைசெய் தீயோர் மனமது திருந்த
        நற்குண மது புகட்டிடுவோம்
மடமை யச்சம் அறுப்போம் மக்களின்
        மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்.
                          ( சாந்தி நிலவ )
திருடம் தரும் அஹிம்சா யோகி நம் தந்தை
        ஆத்மா னந்தம் பெறவே
கடமை மறவோம்,அவர் கடன் தீர்ப்போம்
        களங்கமில் அறம் வளர்ப்போம்.
      (எங்கும் சாந்திநிலவ வேணடும் )
எங்கும் சாந்தி ! எங்கும் சாந்தி ! எங்கும் சாந்தி..........


 கர்நாடக தமிழிசை மேடைகளில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக இசைக்கப்பட்டு வரும் இப்பாடலை எழுதியவர் எனது
தந்தை திரு. எட்டயபுரம் எஸ். சேதுமாதவ ராவ் ஆவார்.
ஆதி தாளம் திலங் ராகத்தில் அமைந்த இப் பாடல்
இன்றைய மேடைகளிலும் புகழுடன் திகழுகிறது. ஒவ்வொரு
காந்தி ஜெயந்தியன்றும் ஒலி,ஒளி பரப்பாகும் இப் பாடல்.
                                        இளசை விஜயன்

2 comments:

  1. காலத்தை வென்ற பாடல், சந்தேகமில்லாமல் ; உங்கள் தந்தை தனது தாய்நாட்டுக்கு மட்டுமின்றி தலைமுறைக்கே பெருமை சேர்த்துள்ளார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி....புவனா குருராஜ்.

      Delete