அன்றும்...............இன்றும்
தந்தை சொல்லைக் கேட்டு ராமன் நடந்தானே யன்று,
தந்தை சொல்லைக் கேட்டு யாரோ நடக்கின்றா ரின்று?
காலம் மாறிப்போச்சு யின்று கோலம் மாறிப்போச்சு.
மூலம் மாறிப்போச்சு யின்று முடிவும் மாறிப்போச்சு.
அன்புதந் தரவணைத்தார் அன்னை தந்தை யன்று,
அதைமறந் தவரைச்சேர்த்தாய் காப்பகத்தி லின்று:
உனைப்பெற்ற தந்தைதாய்க்கு என்னசெய்தா யின்று ?
மனைவிமக்கள் நலத்தைமட்டும் மறக்கவில்லை யென்றும்.!
நீண்டமடலும் நெஞ்சுக்குள்ளே அமைதி தந்த தன்று,
குறுஞ்செய்தியோ வந்ததுபோற் மறைந்து போன தின்று,
கண்முன்னே கடிதம் வரைந்தவர் கனிவு முகந் தெரியும்
கண்ணைவிட்டே
மறைந்துபோவார் குறுஞ்செய்தி யன்பர்.
பண்போடுண்மைக் காதல்செய்தார்,பாங்குடனே யன்று
கண்ணோடுபொய்க் காதல்செய்தார் காளையரு மின்று.
மனமிணைந்து செய்தகாதல் மாலைகண்ட தன்று,
காமத்தாலே கனிந்தகாதல்
கரைந்துபோன தின்று.
கூர்மதியாற், தியாகத்தாலே யின்னுயிர் தந்தா ரின்று,
பாரேபோற்றும் பாரதத்தாயின் விலங்க றுத்தா ரன்று,
ஊரையேய்த்து ஊழல்செய்து, கொள்ளையடித்தா ரின்று
பாரேசிரிக்க பாரதத்தின் பேரைக் கெடுத்தா ரின்று.
அன்றுபோலே யின்று நாமும் அப்பன் பேச்சைக் கேட்போம்,
அன்னைதந்தை யவர்நலனை அக்கறையோடு காப்போம்,
பண்புடனே காதல்செய்து பாசந்தன்னைப் பொழிவோம்,
கண்ணைப்போலே பாரதத்தை கண்ணுங்கருத்தாய்க் காப்போம்.
உனைப்பெற்ற தந்தைதாய்க்கு என்னசெய்தா யின்று ?
ReplyDeleteமனைவிமக்கள் நலத்தைமட்டும் மறக்கவில்லை யென்றும்.!
.
.
.நீண்டமடலும் நெஞ்சுக்குள்ளே அமைதி தந்த தன்று,
குறுஞ்செய்தியோ வந்ததுபோற் மறைந்து போன தின்று,
கண்முன்னே கடிதம் வரைந்தவர் கனிவு முகந் தெரியும்
கண்ணைவிட்டே மறைந்துபோவார் குறுஞ்செய்தி யன்பர்.
.
.
.
பண்புடனே காதல்செய்து பாசந்தன்னைப் பொழிவோம்,
---powerful lines..very well said,Sir:)
ரசனையோடு படித்து பின்னுட்டம் அளித்ததற்கு நன்றி பல .
ReplyDeleteIt is indeed me who has to thank you, for rendering such a lovely poem; it is my prayer that all your songs get published and reach many more people..:)
ReplyDeletethank u for ur prayer
ReplyDelete