Tuesday, September 18, 2012





கோவிந்தன் நாமத்தைப் பாடு; !


கோவிந்தன் நாமத்தைப் பாடு;-- எழிற்
கோலத்தைக் கண்ணாறக் காணு ;
பாதத்திற் புதுமலரைத் தூவு ,
பரந்தாம னருள் பெற்று வாழு .


திருக்கூடல்  மாநகரில் அமர்ந்திருக் குந்தேவன் ,
திருமலையி லெழிலுருவாய் நின்றிருக்கும் நாதன் ;
அருள்பெற்று வாழ்ந்திடவே யல்லலேது மில்லை,
இருள்நீக்கி யொளிசேர்ப்பான், இனியேது தொல்லை.
                                           (கோவிந்தன்)
நம்பியவர் குறைநீக்கி நலம்பலவே தருவான் ,
நாடியவர் துயர்போக்க, நாரணனும் வருவான் ;
பாடுபவர் பயம்நீக்கப் பார்த்தனுமே வருவான் ,
தேடுபவர் தினங்காணத் திருவருளுந் தருவான் .
                                           (கோவிந்தன்)



2 comments:

  1. good lyrics; I think u can approach a good music composer and reach devotees beyond just blogging..please consider.Mr svijayanarasimhan Let this be widespread, GOOD LUCK!

    ReplyDelete
  2. குரு பிரசாத் தனது மாஸ்டர் மூலமாக முயற்சித்து வருகிறான்.
    கடவுளின் கருணையிருந்தால் நல்லதே நடக்கும். ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete