ஜெயமுண்டு பயமில்லை !
ஸ்ரீராம ஜெயராம எனப்பாடு மனமே !
ஜெயமுண்டு பயமில்லை நம் வாழ்வில் தினமே ,
( ஸ்ரீராம )
அருளுண்டு,அன்புண்டு, அவன் நாமங் கூறும் ,
அடியார்க்குப் பொருளுண்டு, புகழ்வந்து சேரும் ;
இருளில்லை, யொளியுண்டு யினி வாழ்வு மாறும் ,
முடியாத செயல்யாவும் முடிந் தின்பஞ் சேரும் ;
( ஸ்ரீராம )
துயரில்லை,துணையுண்டு,அவன் பேரைப் பாடி
துதிப்போர்க்கு, நலம்யாவும் நாடி வரும் தேடி ;
இணையில்லை யீடில்லை,யெம் தேவன் கருணை
நிதியாக நிற்கின்றான் நீ யென்று மவனை ;
( ஸ்ரீராம )
எட்டையபுரத்தின் காற்றும், நீரும் வெகு விசேஷமானது போல; நாளொன்றுக்கு ஒரு paadal பிறக்கிறதே..!! அருமை..:)
ReplyDeleteஆம் ! ஆரம்பத்தில் பதிவு பெற்ற கவிதைகளே,புதியன,பக்திக் கவிதைகள் அனைத்தும் 80 களில் எழுதியவையாகும்.நன்றி.மேலும்
ReplyDeleteபக்கத்துவீட்டு பாரதியின் தாக்கம்,எனது தந்தையின் தாக்கமும் இருக்குமல்லவா ?