பூஜித்தேன் அருள்வாயே
ராகவேந்திரா !
நித்தமுனை நினைக்கின்றேன் ராகவேந்திரா -– மன
நிம்மதியை ஈந்திடுவாய் ராகவேந்திரா ;
புத்தம்புது மலராலே ராகவேந்திரா -- நான்
பூஜித்தே னருள்வாயே ராகவேந்திரா ;
பக்தியுடன் பாடுகிறேன் ராகவேந்திரா -– நற்
சக்திதந்து நலமஞ்சேர் ராகவேந்திரா ;
எக்கதியை யடைந்தாலும் ராகவேந்திரா -– நீ
பக்கத்துணை யாயிருப்பாய் ராகவேந்திரா ;
துயர்நீக்கி, உயர்வுந்தா ராகவேந்திரா -– அன்புப்
பயிர்வளர நீராவாய் ராகவேந்திரா ;
செயற்கரிய செய்பவனே
ராகவேந்திரா -– தினஞ்
செயமளித்துச் சிறப்புந்தா ராகவேந்திரா .