Saturday, October 20, 2012



கோலமயில் வாகனனே !

 ( மங்கையரில் மஹராணி -மெட்டு )


கோலமயில் வாகனனே கொஞ்சுமொழி மோகனனே !
இன்பத்தமிழ் நாயகனே யென்னுயிரே வேலவனே !
                                    (கோலமயில்)
ஓராறு  முகமும், ஈராறு கண்ணும்,
கையோடு வேலும் , யெனைக் காக்க வேண்டும் ;
வேலா உன் ஆடல்,நீ யாடப் பார்த்து ,
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு ;
வெள்ளி ரதத்திற் துள்ளி யெழுந்து,வேலா நீ வாராய் ,
உன் னன்புக் கைதன்னால், நீயும் அருள்தாராய் !
                                   ( கோலமயில் )
மாணிக்கத் தேரில் , மன்னவ னுன்னை ,
மங்கையரோடு, நான் காண வேண்டும் ;
தீராத துன்பம் கோடானுகோடி ,
போராடுகின்றேன்,வேலாதிவேலா !
துன்பந் தீர்த்துத் துணையாய் நிற்கத் தலைவா நீ வாராய் !
இன்பத்தை யெந்நாளு மெந்தன் யிறைவா நீ தாராய் !
                                                                                  ( கோலமயில்)






குருவென்று கூறாத நாளெல்லாம் பாழே !


திருநாமம் சொல்லாத வொருநாளும் வீணே ,
குருவென்று கூறாத நாளெல்லாம் பாழே !
                                  (திருநாமம் )
நெருங்காது துயர் நம்மை , நினைத்தென்றும் வாழ்ந்தால் ,
ஒரு நாளும் மறவாது , தியானத்தில் ஆழ்ந்தால் ,
                                  ( திருநாமம் )
கரும்பாக யினிக்கின்ற அவன் பேரைச் சொன்னால் ,
அரும்பான நம் வாழ்வு , அழகாக மலரும் ;
கருகாது யென்றென்று மெழிலாகத் திகழும் ,
சருகாக மாறாது , மணமென்றுங் கமழும் .
                                  ( திருநாமம் )



Tuesday, October 16, 2012




நினைக்க நினைக்க இனிக்குதடா !


நினைக்க நினைக்க இனிக்குதடா உந்தன் நெஞ்சம்,
நின் னடியில் நாங்களுமே யென்றுமே தஞ்சம்.

கோலமயில் மீதமர்ந்து வாராய் கொஞ்சம் – ஒரு
கோவிலாகும்,ஆண்டவனே யெங்கள் நெஞ்சம்.
                                         ( நினைக்க )
அஞ்சுகின்ற போதினிலே,வேல் முன் தோன்றும் – துயர்
மிஞ்சுகின்ற போதினிலே, உன் கால் தோன்றும்.
                                          ( நினைக்க )
துதிப்போர்க்கு யென்றுமினித் துயரம் யில்லை – உனை
மதிப்போரே, உன் மடியிற் வளரும் பிள்ளை.
                                         ( நினைக்க )

Monday, October 15, 2012



ஓ ராகவேந்திரா !





ஒருநாளு முனை மறவேன்,ஓ ராகவேந்திரா !
கருணையிலையோ ? காலமெலாந் தொல்லையோ ?
                                        (ஒரு நாளும்)
திருவடியைத் தொழுதேனே ! தினமும் உன்முன் அழுதேனே !
வருந்துயர்  நீக்காது  வாளா  திருப்ப  தென்ன ?
                                        (ஒரு நாளும்)
கருணைக் கடலென்றே, காலடியில் வீழ்ந்தேனே ,
வருந்துயர் போமென்றே , வண்ண முகங்கண்டேனே  ;
இருந்து மென்ன பயன் , யிருகரங் கூப்பியே ,
இறைவா வுன் இணையடியிற் , மலர்தூவி யுனை வணங்கி ,
                                        (ஒரு நாளும்)




Saturday, October 13, 2012



காலைப் பிடித்தோ மம்மா !



காலைப் பிடித்தோமம்மா,காத்தருள வாராய் தாயே ,
வேலைப்பிடித் தோனம்மா வேதனயைப் போக்கு நீயே ;

மாலையானாலும் மயங்கிக் கிடப்போமே, தோளில்
மழலை பேசுங் கிளியானால், மகிழ்வோமே கையிற்
சோலை மலரானாலோ, துயில்வோமே உன் பதத்திற்
பாழும் மனிதப் பிறப்பில் , ஏது கண்டோ மம்மா ?
                                       (காலைப்பிடி)
காலை விழித்தெழுந்து,கனிவுதரு மெழில் முகமும்
நீல வானிற் தவழும் , நிலவா யொளிர்ந்திருக்க ,
வேலை துவங்கு முன்னர்,அன்னையுன் அருள்பெற்றால் ;
நாளும் நலம்பிறக்கும் , நல்லதே காண்போ மம்மா  !

                                                                                     (காலைப்பிடி)





கோவிந்தன் வருவான் !



கோவிந்தன் நாமத்தைப் பாடு – எழிற்
கோலத்தைக் கண்ணாற காணு ;
பாதத்திற் பனிமலரைத் தூவு,
பரந்தாம னருள்பெற்று வாழு.

திருக்கூடல் மாநகரில் அமர்ந்திருக்குந் தேவன் ,
திருலையி லெழிலுருவாய் நின்றிருக்கும் நாதன் ;
அருள்பெற்று வாழவோர்க்கு அல்லேதுமில்லை ,
இருள்நீங்கி யொளிசேரும் இனியேது தொல்லை .
                
                                      (கோவிந்தன்)

நம்பியவர் குறை நீக்கி நலமெலாந் தருவான் .
நாடியவர் துயர் நீக்க நாரணனும் வருவான் ;
பாடுபவர் பயம் நீக்கப் பரந்தாமன் வருவான் ,
தேடுபவர் தினங்காணத் திருவருளுந் தருவான்.

                              (கோவிந்தன்)

Tuesday, October 9, 2012

ஜெயமுண்டு பயமில்லை !





ஜெயமுண்டு பயமில்லை !



ஸ்ரீராம ஜெயராம எனப்பாடு மனமே  !                                   ஜெயமுண்டு பயமில்லை நம் வாழ்வில் தினமே ,

                                    ( ஸ்ரீராம )

அருளுண்டு,அன்புண்டு, அவன் நாமங் கூறும் ,
அடியார்க்குப் பொருளுண்டு, புகழ்வந்து சேரும் ;
இருளில்லை, யொளியுண்டு யினி வாழ்வு மாறும் ,
முடியாத செயல்யாவும் முடிந் தின்பஞ் சேரும் ;

                                    ( ஸ்ரீராம )

துயரில்லை,துணையுண்டு,அவன் பேரைப் பாடி
துதிப்போர்க்கு, நலம்யாவும் நாடி வரும் தேடி ;
இணையில்லை யீடில்லை,யெம் தேவன் கருணை
நிதியாக நிற்கின்றான் நீ யென்று மவனை ;
  
                                    ( ஸ்ரீராம )