Monday, October 15, 2012



ஓ ராகவேந்திரா !





ஒருநாளு முனை மறவேன்,ஓ ராகவேந்திரா !
கருணையிலையோ ? காலமெலாந் தொல்லையோ ?
                                        (ஒரு நாளும்)
திருவடியைத் தொழுதேனே ! தினமும் உன்முன் அழுதேனே !
வருந்துயர்  நீக்காது  வாளா  திருப்ப  தென்ன ?
                                        (ஒரு நாளும்)
கருணைக் கடலென்றே, காலடியில் வீழ்ந்தேனே ,
வருந்துயர் போமென்றே , வண்ண முகங்கண்டேனே  ;
இருந்து மென்ன பயன் , யிருகரங் கூப்பியே ,
இறைவா வுன் இணையடியிற் , மலர்தூவி யுனை வணங்கி ,
                                        (ஒரு நாளும்)




Saturday, October 13, 2012



காலைப் பிடித்தோ மம்மா !



காலைப் பிடித்தோமம்மா,காத்தருள வாராய் தாயே ,
வேலைப்பிடித் தோனம்மா வேதனயைப் போக்கு நீயே ;

மாலையானாலும் மயங்கிக் கிடப்போமே, தோளில்
மழலை பேசுங் கிளியானால், மகிழ்வோமே கையிற்
சோலை மலரானாலோ, துயில்வோமே உன் பதத்திற்
பாழும் மனிதப் பிறப்பில் , ஏது கண்டோ மம்மா ?
                                       (காலைப்பிடி)
காலை விழித்தெழுந்து,கனிவுதரு மெழில் முகமும்
நீல வானிற் தவழும் , நிலவா யொளிர்ந்திருக்க ,
வேலை துவங்கு முன்னர்,அன்னையுன் அருள்பெற்றால் ;
நாளும் நலம்பிறக்கும் , நல்லதே காண்போ மம்மா  !

                                                                                     (காலைப்பிடி)





கோவிந்தன் வருவான் !



கோவிந்தன் நாமத்தைப் பாடு – எழிற்
கோலத்தைக் கண்ணாற காணு ;
பாதத்திற் பனிமலரைத் தூவு,
பரந்தாம னருள்பெற்று வாழு.

திருக்கூடல் மாநகரில் அமர்ந்திருக்குந் தேவன் ,
திருலையி லெழிலுருவாய் நின்றிருக்கும் நாதன் ;
அருள்பெற்று வாழவோர்க்கு அல்லேதுமில்லை ,
இருள்நீங்கி யொளிசேரும் இனியேது தொல்லை .
                
                                      (கோவிந்தன்)

நம்பியவர் குறை நீக்கி நலமெலாந் தருவான் .
நாடியவர் துயர் நீக்க நாரணனும் வருவான் ;
பாடுபவர் பயம் நீக்கப் பரந்தாமன் வருவான் ,
தேடுபவர் தினங்காணத் திருவருளுந் தருவான்.

                              (கோவிந்தன்)

Tuesday, October 9, 2012

ஜெயமுண்டு பயமில்லை !





ஜெயமுண்டு பயமில்லை !



ஸ்ரீராம ஜெயராம எனப்பாடு மனமே  !                                   ஜெயமுண்டு பயமில்லை நம் வாழ்வில் தினமே ,

                                    ( ஸ்ரீராம )

அருளுண்டு,அன்புண்டு, அவன் நாமங் கூறும் ,
அடியார்க்குப் பொருளுண்டு, புகழ்வந்து சேரும் ;
இருளில்லை, யொளியுண்டு யினி வாழ்வு மாறும் ,
முடியாத செயல்யாவும் முடிந் தின்பஞ் சேரும் ;

                                    ( ஸ்ரீராம )

துயரில்லை,துணையுண்டு,அவன் பேரைப் பாடி
துதிப்போர்க்கு, நலம்யாவும் நாடி வரும் தேடி ;
இணையில்லை யீடில்லை,யெம் தேவன் கருணை
நிதியாக நிற்கின்றான் நீ யென்று மவனை ;
  
                                    ( ஸ்ரீராம )

குற்றமென்ன செய்தேன் குமரா ?







குற்றமென்ன செய்தேன் குமரா ?


குற்றமென்ன செய்தேன் குமர குருபரா ?
உற்றகுறை தீர்க்க உனக்கு மனமில்லையா ?

                             ( குற்றமென்ன )

வெற்றிவேலைப் பற்றி நிற்கும் வீரத்திருக் கரமெங்கே ?
சுற்றிவரும் பகை தீர்க்கத் துள்ளிவரும் வேலெங்கே ?
மற்றிரெண்டு,மங்கையர்கள் மலரன்ன முகமெங்கே ?
பற்றிட நின் திரு பதமலர் தா னெங்கே  ?

                              ( குற்றமென்ன )

கந்தனெனும் பேர் சொல்லக் கவலை தீருமே – முருகா
உந்தன் புகழ் பாட நெஞ்சிற் வுவகை சேருமே ;
எந்தன் குறை தீர்க்க யெந்தன் யெம்பெருமான் – நீ
வந்தெனக்கு அருள்புரிய வா வா வடிவேலா.

                              ( குற்றமென்ன )   

Thursday, October 4, 2012


காட்சி தந்தால் அழகு !




கருணை மழை பொழிந்து,
         கவலை யெலா மழித்து,
                  காட்சி தந்தா லழகு !
அருளை வேண்டி வரும்,
          அன்பர் னைவருக்கும்,
                      அருளை யள்ளி வழங்கு --- தாயே
                      அருளை யள்ளி வழங்கு.

பொருளை வேண்டவில்லை,
           பொன்னைத் தேடவில்லை,
                        புகழில் நாட்டமில்லையே.
இருளை நீக்கு மந்த,
            இனிய யெழில் விழியின்
                       ஒளியை மட்டுங் கூட்டு --- தாயே
                       ஒளியை மட்டுங் கூட்டு.

பொறுமை கொண்டு வுனைப்
            போற்றுகின்ற நெஞ்சிற்,
                       புகுதல் இனிய வொன்று,
சிறுமை நீங்கி யவர்
              சிறந்த வாழ்வு பெற,
                       செல்லும் வழியைக்காட்டு --- தாயே
                       செல்லும் வழியைக்காட்டு.

பெருமை யோடு நின்,
              பேர் சொல்லும் வேளையிற்
                            பிணி களேது யிங்கு,
கருமை கொண்ட விழி,
               காட்டும் நல்ல வழி,
                       காணக் கையை நீட்டு ---  தாயே
                       காணக் கையை நீட்டு.     

Tuesday, October 2, 2012





           கோவில் மணியோசையிலே !




கோவில் மணியோசையிலே மீனாட்சி ;
        கொஞ்சு மொழி கேட்குதம்மா மீனாட்சி !
கொஞ்சுங் கிளிப் பேச்சொலியும் மீனாட்சி ;
        குழல்போலே யொலிக்குதம்மா மீனாட்சி !
                                          ( கோவில்மணி )
காலமெலாம் காலடியிற் மீனாட்சி ;
        கருணைக்கே காத்திருந்தோம் மீனாட்சி !
பாவமெலாம் போக்கிடுவாய் மீனாட்சி ;
        பதம் பணிந்தோ மருள்வாயே மீனாட்சி !
ஞாலமெலாம் உன்புகழை மீனாட்சி ;
        யாம் பரப்ப,தயைபுரிவாய் மீனாட்சி !
நாலும் வரும் வாழ்க்கையிலே மீனாட்சி ;
        நல்லதையே நடத்திடுவாய் மீனாட்சி !
                                          ( கோவில்மணி )
அருளன்பு அத்தனையும் மீனாட்சி ;
        அளிப்பவளே,அம்மையே மீனாட்சி !
இருள் நீக்கும் மதிமுகமே மீனாட்சி ;
        இணையிலா,உன்முகமே மீனாட்சி !
பொருள்மிக்க,சுவைமிக்க மீனாட்சி ;
        புதுக்கவிதை யெழுதிடவே மீனாட்சி !
அருள்தந்து,கரங்கொண்டு மீனாட்சி ;
        ஆட்கொண்டு,அன்பு செய்க மீனாட்சி !
                                         ( கோவில்மணி )