ஓ ராகவேந்திரா !
ஒருநாளு முனை மறவேன்,ஓ ராகவேந்திரா !
கருணையிலையோ ? காலமெலாந் தொல்லையோ
?
(ஒரு நாளும்)
திருவடியைத் தொழுதேனே ! தினமும் உன்முன் அழுதேனே !
வருந்துயர் நீக்காது வாளா திருப்ப
தென்ன ?
(ஒரு நாளும்)
கருணைக் கடலென்றே, காலடியில் வீழ்ந்தேனே ,
வருந்துயர் போமென்றே , வண்ண முகங்கண்டேனே
;
இருந்து மென்ன பயன் , யிருகரங் கூப்பியே ,
இறைவா வுன் இணையடியிற் , மலர்தூவி யுனை வணங்கி ,
(ஒரு நாளும்)