குன்றதிலே குடியிருக்கும் குமரா !
குன்றதிலே குடியிருக்கும் குமரா –என்
நெஞ்சத்திலே,கொஞ்சம் வந்து அமர்வாய் ;
என்றுமுனைத் தொழுமெந்தன் கரமே
,
என்னுள்ளே நீயிருந்தாற் சுகமே
.
வண்ணமலர் நாடிவரும் வண்டு,
தேனருந்த,பூமியிலும் உண்டு
;
வண்ணமயில் வாகனனைக் கண்டு-அவன்
எழிலருந்த பக்தர் கோடி உண்டு
.
எண்ணயெண்ண யினிக்குதடா நெஞ்சம்
,
இறைவாவுன் மலரடியே தஞ்சம் – உன்
அருளுக்கு யென்றுமிலை பஞ்சம்
,
அரவணைப்பாய் அடியவரைக் கொஞ்சம்
.
No comments:
Post a Comment