Saturday, July 27, 2013
Friday, December 7, 2012
அருளன்றி நாடுவது வேறேதம்மா ?
அருளன்றி நாடுவது வேறேதம்மா ?
அழகை ரசிக்க ஓராயிரங் கண் போதாதம்மா ! – உன்
அருளையன்றி நாடுவது வேறேதம்மா ? -- அம்மா
(அழகை ரசிக்க)
காதலனாம் சொக்கனோடு ஆட்சி செய்தாயே ,
மதுரையை ஆட்சி செய்தாயே
:
கருணையுளங் கொண்டு காட்சி தந்தாயே .
(அழகை ரசிக்க)
தினந்தொழும் பக்தருள்ளம் நீ
நின்றாயே - அவர்
மனமுருகும் நிலை கண்டு உளம் நெகிழ்தாயே – அம்மா
(அழகை ரசிக்க)
கிளி கொஞ்சும் கரங் கொஞ்சம் வழி காட்டுமா ? – நல்ல
வழிகாட்டி, வாழ்வுக்கு ஒளி கூட்டுமா ?
களிப்பினில் மனமெழிற் கவி
பாடும் போது – அக்
கவி கேட்டுக் களி நடம் புரிவாயம்மா – தாயே
(அழகை ரசிக்க)
Monday, December 3, 2012
மதுரையாள்கின்ற நாயகியே !
வாழ்கின்ற நாளெல்லாம் வணங்குதல் வேண்டும் – மதுரை
ஆள்கின்ற நாயகி நீ, வரந்தர வர வேண்டும்.
(வாழ்கின்ற)
நீள் கின்ற வாழ்க்கையிலே நிம்மதி வர வேண்டும் ;
ஏழ் பிறப்பும் உள்ளத்தி லுன் நினைவொன்றே போதும்,
(வாழ்கின்ற)
சேர்கின்ற இன்னலெலாம் சென்று மறைய வேண்டும் ,
நேர்கின்ற இன்பம் மட்டும் நிலைத்திருந்தாற் போதும்;
சோர்வு வரும் நேரமெலாம் சுந்தர முகங் காட்டு,
வேர்விட்டு, நெஞ்சிலெழும் இனிமைமிகு பாட்டு.
(வாழ்கின்ற)
Sunday, November 18, 2012
காதில் விழாதோ ?
காதில் விழாதோ ?
காதில் விழாதோ ? கத்துங்குரலே,
கந்தா ! கந்தாயென்றே – உந்தன்
காதில் விழாதோ ?
காதல் கொண்டுன் மேற்,
கனிந்து மனமுருகும் ;
மாதென் மனமறியா , யெழில்
மன்னவனே உந்தன்
(காதில்
விழாதோ ?)
நாதியா ருனைவிட்டால்
சோதித்தல் முறையோ ? ஐயா !
சுந்தர முகங்காட்டு,
சுகங்கள் பலவும் கூட்டு,
மந்திர வேத மோத,
மணவினைக் கோலங்காண
வந்திடு ஐயா,பேதை
வழி சென்றாள்,காதற்பாதை-இன்னுங்
(காதில் விழாதோ ?) Sunday, November 11, 2012
மனமும் இறங்காதோ !
காலடியில் விழுந்து,காலமெலாம் தொழுதாற் கருணை பிறக்காதோ ? – குமரா
மலரடியை வணங்கி,மனமுருகிப்பாட மனமும் இரங்காதோ ?
கோலமயிலேறுங் குமரனைக் கும்பிடக் குறைகள்,குறையுமென்றே,
வேலுடை வேந்தனாம்,வேலனை வேண்டிட வேதனை திருமென்றே;
காலமெலஞ் சொன்ன கதைகளைக் கேட்டு,கந்தா யுனை வணங்கும்,
வேலை தனையன்றி,வேறு தொழிலறியா,யேழை யென்று முந்தன்.
(காலடியிற்)
பூவைச்சுமக்குந் தோளையுடையவா,துன்பம் போதுமையா – யென்
பாவச் சுமைகளை, உன் பதம் வைக்கப் பழுவுங் குறையுமையா ;
தெய்வானை வள்ளி,யுனையுஞ் சேர்த்து,மயிலும் சுமக்குதய்யா ,
கையேந்தி நின்றோம்,கவலையனைத்தையும்,கரத்தினில் நீ சுமக்க
(காலடியிற்)
குரு வாழ்க!
குருவே துணை !
மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு
அமரர்.பி.எஸ்.ஐயர்.18 ம்ஆண்டு நினைவு விழா
நாள்: நந்தன வருடம் மார்கழி மாதம்
7 மற்றும்
8 ம் தேதி.
22 -12 - 2012, 23 - 12 - 2012 சனி மற்றும் ஞாயிறு. காலை 8 மணிமுதல் .
சிறப்பாக நடைபெற உள்ளது.
இடம்:ஸ்ரீ சொக்கநாதர் கல்யாணமண்டபம்,வடக்கு
மாசி வீதி.மதுரை - 1
சிறப்புப் பேச்சாளர்கள்.
“கலைமாமணி.வெண்ணிற ஆடை. மூர்த்தி.”
மற்றும்
ஸ்ரீலஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகள் ,
ஏ.வி.எஸ். சுந்தரம் ,லயன்.வி.நாராயணன்,
நவமணி சண்முகவேலு, கோட்டையூர்.சிவசுப்ரமணியன்,
கடகம்.இராமசாமி.இரா.அருள்வேல்,
செந்திலடிமை தினகரன், (ஆசிரியர், ஜோதிட அரசு) ஜெயந்திநாதன், (ஆசிரியர்,ஜோதிட பூமி) அதிர்ஷ்டம் பாலசுப்ரமணியன்,(ஆசிரியர்,பால ஜோதிடம்.) வாசியோகி.பி.ஏ.பொன்னையா, ஏ.அமிர்தலிங்கம், சின்னாளபட்டி தங்கவேல். மீனம்.பச்சமுத்து, கலைப்பிரியன் மற்றும் பலர் .
அனைவரும் வருக !
அன்னதான நன்கொடைகள் ஏற்றுக்
கொள்ளப்படும்.
( Amarar P.S.Iyer
Ninaivu Jothida Araichi Maiyam - A/C-No – 1011101049504 – Canara Bank. North veli St. Branch. Madurai – 1.)
இவண்,
நிர்வாகக்குழு.
அமரர் பி.எஸ். ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மையம். மதுரை. . தொடர்பு எண் : 99948 11158, 97891 01742, 75981 59981.
|
Sunday, November 4, 2012
அன்னையின் புகழ்பாடு !
அன்னை யென்னை யரவணைத்து,
அன்புதர மனம் நினைத்து ;
துன்பந்தீரத் துணைக்கு வந்து
,
இன்பங்காண அருளும், தாயை
என்றென்றும் இவ்வுலகில்
;
பண்பாடு,போற்றி கொண்டாடு,
எந்நாளும் தாயின் புகழ்பாடு.
வண்ணப் பச்சை நிறங்கொண்ட,
சின்னச் சின்ன கிளியொன்று
;
அன்னை அவள் கரம் நின்று
,
உனைப்பற்றி,அவள் காதிற்
;
சொன்ன வொரு மொழி கேட்டுச்
சுகந் தந்த அன்னையவள் ; பண்பாடு,போற்றிக்
கொண்டாடு.
சின்னச் சின்ன மீன் போன்ற,
வண்ணயெழில் விழி கொண்டு
,
மின்னலென வொளி கூட்ட
;
இன்ன லிருள் தனை யோட்ட
,
ஏற்ற தொரு வழி காட்டும்,
அன்னையவள் புகழ்பாடு,
ஆனந்தக் கூத்தாடு.
Subscribe to:
Posts (Atom)