கோவிந்தன் வருவான் !
கோவிந்தன் நாமத்தைப் பாடு – எழிற்
கோலத்தைக் கண்ணாற காணு
;
பாதத்திற் பனிமலரைத் தூவு,
பரந்தாம னருள்பெற்று வாழு.
திருக்கூடல் மாநகரில் அமர்ந்திருக்குந் தேவன் ,
திருலையி லெழிலுருவாய் நின்றிருக்கும் நாதன் ;
அருள்பெற்று வாழவோர்க்கு அல்லேதுமில்லை ,
இருள்நீங்கி யொளிசேரும் இனியேது தொல்லை .
(கோவிந்தன்)
நம்பியவர் குறை நீக்கி நலமெலாந் தருவான் .
நாடியவர் துயர் நீக்க நாரணனும் வருவான் ;
பாடுபவர் பயம் நீக்கப் பரந்தாமன் வருவான் ,
தேடுபவர் தினங்காணத் திருவருளுந் தருவான்.
(கோவிந்தன்)