c
புத்திர பாக்கியம்
குழந்தை பேறில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் பலவகையானது. சிக்கலான பிரசவங்கள்> கருத்தரிக்க முடியாத நிலை> கருச்சிதைவு> இறந்தே பிறக்கும் குழந்தை> அற்ப ஆயுளையுடைய குழந்தை> நன்கு வளர்ந்து பின் இறக்கும குழந்தை> மனதளவிலும்> உடல் அளவிலும் ஊனமாகப் பிறத்தல்> வளர்ந்து பெற்றோருக்குத் தொல்லை கொடுக்கும் பிள்ளைகள் இவ்வாறாக்க் குழந்தைகளைப் பற்றிய அனைத்துப் பிரச்சனைகளும் மகிழ்ச்சியற்ற மன நிலையையே தருகிறது. ஜோதிடமானது குழந்தை சம்பந்தமான பிரச்சனைகளால் ஏற்படும் பொதுவான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியற்ற நிலையைப் பற்றிய பலனை மட்டுமே தெரிவிக்குமேயன்றி> மேற்சொன்ன பிரச்சனைகளில் எது நிச்சியமாக்க ஏற்படும் என்று சொல்ல இயலாது எனபதே உண்மை.
இந்தக் கட்டுரையில் குழந்தைப் பிறப்புக்கான சில முக்கியமான ஜாதக இணைவுகளைப் பற்றி மட்டும் அலசப்படுகிறது. திருமணப் பொருத்தம் பார்க்கும் போது> இப் பிரச்சனைகள்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்படல் வேண்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைக்கு உரிய இணைவுகள் இருவரின் ஜாதகத்திலும் இருந்தால்> பின்னர் ஏற்படும் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஜாதகங்களைப் பொருத்துவதையும் தவிர்க்கலாம். பொருத்தம் பார்க்கும் போது> இரு ஜாதகங்களில் ஒன்றில் பிரச்சனை இருந்தால்> மற்றுமொரு பிரச்சனையற்ற ஜாதகத்தோடு பொருத்தலாம் அல்லவா?
குழந்தைப் பிறப்புக்கு மிகவும் முக்கிய இடமாக் 5 ஆம் இடம் கருதப்படுகிறது. அத்துடன் 5 க்கு 5 ஆம் இடமான 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முக்கிய மாகப் பெண்களுக்குக் குழந்தை பேற்றைப் பற்றி அறிய 9 ஆம் வீடு சில ஜோதிடர்களால் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைச் செல்வத்திற்கான பொதுவான காரகர் குரு ஆவார். இக் கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது 5 ஆம் அதிபதி மற்றும்/ அல்லது 9 ஆம் அதிபதி. விரய பாவமான 12 ஆம் வீட்டில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி அலசப்படுகிறது. இந்த இணைவைத் தவிர வேறுபல காரணிகளும் இருக்கலாம். என்றாலும் இது பொதுவான காரணியாகாக் கருதப்படுகிறது.
கணவனின் ஜாதகம் -
மனைவியின் ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி சுக்கிரன் மற்றும் 9 ஆம் அதிபதி சனி ஆகிய இரு கிரகங்களும் விரய பாவமான 12 இல் உள்ளன. இந்த தம்பதிகளுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் மகவு ஒன்றும் பிறக்கவில்லை. அந்த 5 பெண் குழந்தைகளில்> இரண்டு பிறந்த சில வருடங்களிலேயே இறந்தன. மற்று மொன்று> தனது 7 வது வயதில் இறந்தது. தற்போது ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிரோடு இருக்கிறது. இந்த இரண்டு ஜாதகங்களிலும் இலக்னத்தில் குரு உள்ளார். குழந்தைச் செல்வத்திற்குக் காரகரான அவர் அங்கே இருப்பது குழந்தைப் பிறப்புக்கு அனுகூலமான நிலையல்ல மற்றும் குழந்தைப் பிறப்பில் பிரச்சனை தரும் என்பதே அனுபவத்தில் கண்ட உண்மை. இந்த இருவர் ஜாதகத்திலும் இதன் காரணமாகப் பிறந்த பெண் பிள்ளைகள் பல இறந்துவிட்டன. ஒருத்தி மட்டும் திருமணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டாள்..
கேது
|
சூரி
|
புத>சுக்;
சனி
|
லக்;//
குரு
| ||||
சனி
|
கணவன்
|
செவ்
|
சந்
செவ்;;
|
மனைவி
|
இராகு
| ||
சூரி
சுக்
|
கேது
| ||||||
இராகு
|
லக்
குரு
|
சந்;
|
புத
|
இரண்டாவது உதாரண ஜாதகங்கள் - கணவன் - மனைவி
கணவனின் ஜாதகத்தில் சந்திரனில் இருந்தும்> இலக்னத்தில் இருந்தும் 5 ஆம் அதிபதி குரு உச்சமாகி இருந்த போதும் 12 இல் உள்ளார். 5 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இட அச்சில் பாதிப்பு உள்ளது. அதற்குக் காரணம் செவ்வாய் மற்றும் இராகு> சனியால் பார்க்கப்பட்டு 5 ஆம் இடத்திலும்> கேது 11 ஆம் இடத்திலும் இருப்பதே ஆகும்.
மனைவியின் ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி குரு இலக்னத்தில் இருப்பது போல் காட்சியளித்தாலும் பாகை அளவுப்படி பாவகத்தில் 2 ஆம் வீட்டில் உள்ளார்.
;;;;;;
கேது
|
;
|
சந்;
|
கேது
| |||||
;
|
மனைவி
|
;
|
;;
|
கணவன்
|
குரு
| |||
;
|
சுக்
|
லக்;//
சந்
| ||||||
சனி
|
லக்//
குரு;
|
சூரி>செவ்;
புத;
|
இராகு
|
செவ்
இராகு
|
புத>சுக்;
சனி
|
சூரி
|
இரண்டு ஜாதகங்களிலுமே 5 ஆம் அதிபதி 12 இல் இடம் பெற்றுள்ளதால் குழந்தைப் பிறப்பு பிரச்சனையானது. இக்குறையை பொருத்தம் பார்க்கும் போதே எடுத்துக் கூறியும்> கேட்காமல் 1981 நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதுநாள்வரை இந்த தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை.
அடுத்து வருவது ஒரு கணவனின் ஜாதகம் மனைவியின் ஜாதகம் இல்லை. அவள் மகர இராசியில் பிறந்தவள் என்பது மட்டும் தெரியும்.
.கணவனின் ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி சூரியன் 9 ஆம் அதிபதி குருவுடன் இணைந்து 12 ஆம் இடத்தில் உள்ளார். மேலும்> 5 ஆம் இடமானது சந்திர இராசிக்கு 9 ஆம் இடமாகி செவ்வாய் மற்றும் சனியால் பார்க்கப்படுகிறது. இந்த ஜாதகரின் மனைவிக்கு வயது 60 ஆகும். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருந்தன. 1-9-1991 இல் இவர்களின் மகளுக்குப் பிரசவத்தில் பிரச்சனை ஏற்பட்டு> ஒரு மகனைப் பெற்றெடுத்து உடனே இறந்துவிட்டாள். அவர்களின் மகள் இவரின் ஜாதகத்தில் 5 ஆம் அதிபதியான சூரியனின் நாளான ஞாயிற்றுக் கிழமையன்று இறந்தாள். 5 ஆம் அதிபதி சூரியன் 12 இல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரி>குரு
|
லக்//
|
இராகு
| |
புத சுக்>;
|
கணவன்
|
;
| |
செவ்
| |||
சந்
|
சனி
கேது
|
இதன் காரணமாக அந்த முதிய தம்பதியருக்கு மகள் இறந்த கவலையோடு> பேரனையும் பேணவேண்டிய பெரும் பொறுப்பும் சேர்ந்தது. இவர்களின் ஏழரைச் சனிக் காலத்தில் நேர்ந்தது. இரு அசுபர்களான இராகு தசா. செவ்வாய் புத்தியில் நேர்ந்தது. சந்திரனில் இருந்து 5 ஆம் அதிபதி செவ்வாய் மகரத்தில் கோசாரச் சனி இருக்குமிடத்தில் இருந்தார்.
எனவே > 5 ஆம் அதிபதி மற்றும் -- அல்லது 9 ஆம் அதிபதி 12 ஆம் இடத்தில் இருக்க ஆண்வாரிசு அற்ற நிலை மற்றும் குழந்தைப் பிறப்பில் பிரச்சனை என்பதை அறிந்து கொண்டோமல்லவா ?
வல்லமை தாராயோ பராசக்தி - இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.
No comments:
Post a Comment