Thursday, November 27, 2014

திருமணப் பிரசன்னம்.

  1. திருமணப் பிரசன்னம்.

           பிரசன்ன இலக்னத்திற்கு 3, 5, 7, 10, 11 இல் இருக்கும் சந்திரனைகுரு பார்க்க அந்த மணமக்களாகப் போகிறவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
           திருமணத்திற்குப் பெண் கிடைக்குமா ?
           இதற்கான பிரசன்ன நேரத்தில் – ரிஷபம்கடகம்துலாம் இவைகள் இலக்னமாகிஅதில் சுக்கிரனும்சந்திரனும் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் பெண் கிடைக்கும்.
           கிருஷ்ணபட்சத்தில் பிரசன்னம் பார்க்கும் போது – இலக்னத்துக்கு இரட்டையான இராசியில் சந்திரன் இருந்தாலும் அல்லது 8 இல் சந்திரன் இருக்கவும்அதை அசுபர் பார்க்கவும் திருமணம் நடக்காது.
           திருமணப் பிரசன்னத்தின் போதுஇலக்னத்திற்கு 5, 6, 8 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்து விவாகம் நடந்தால்திருமணம் நடந்த 8 வருடத்திற்குள் துணைக்கு (கணவன்/மனைவிமரணம் நிகழும் எனக் கூற வேண்டும்.
           பிரசன்ன இலக்னத்தில் செவ்வாயும், 7 ஆம் இடத்தில் சுபக்கிரகமும் இருந்து திருமணம் நடக்குமானால்அந்தப் பெண் கெட்ட நடத்தையொடு கூடுவாள் அல்லது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இறந்து போகும்கணவனும் எட்டு வருஷத்தில் இறந்து போவான்.
           பிரசன்ன இலக்னத்தில் சந்திரனும், 7 அம் இடத்தில் செவ்வாயும் இருக்க 8 வருடத்திற்குப் பிறகு கணவன் இறப்பான்.
    பிரசன்ன இலக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அசுபர் நீசமாகிபகைக்கிரகங்கள் பார்க்கஅப் பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தைகள் இறக்கும் அல்லது அவள் நடத்தை கேள்விக்கு உரியதாய் இருக்கும்.

     வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம்  பயனுற வாழ்வதற்கே.

     





No comments:

Post a Comment