Monday, September 24, 2012

கூடலின் நாயகனே



கூடலின் நாயகனே !






கூடலின் நாயகனே – எங்கள்
           குடும்பத்தின் காவலனே !
மதுரவல்லி மணாளனே – மங்கை
           ஆண்டாள் காதலனே !
பாடலின் நாயகனே – யென்றும்
            பக்தர் குறைதீர்ப்பவனே.


அருள்வாயப்பா, பெருமாளப்பா,யிருள் நீக்கி
            யொளி சேர்க்க வருவாயப்பா ;
ஒருநாளில்லை,யிருநாளில்லை,பலநாளாய்ப்
            பதம் பணிந்தோம்,குறைதீரப்பா ;
வருநாளெல்லாம் திருநாளென்றே,நிறைதரு
            முனைப் பணிந்தோம்,நிகர்யாரய்யா ;
திருக்கோலத்தை,யிருகண்களாற் பருகியே
             மனமகிழ்ந்தோ மெழில் நீயப்பா.
                                  (அருளவாயப்பா)


வலம் வந்ததும்,நிலம் வீழ்ந்ததும்,வரங்கேட்டு
             வழிகாட்ட முறையிட்டதும் ;
குலம் வாழவும்,குறைதீரவும் கோபாலா
             யென்றுறக்கக் கூப்பிட்டதும் ;
கலங்காதவோர்,மனம் வேண்டியே கண்ணாயெனக்
              கூவி யுனை யழைத்ததும் ;
உலகளந்தவா,உடன் வந்தெனை,உயர்வான
              ஓரிடத்தை நீ காட்டியே.
                                (அருள்வாயப்பா

Sunday, September 23, 2012

இளமெழில் முருகா



இளமெழில் முருகா 





உளமுருகாதா யிள மெழில் முருகா !
வளம் பெருகாதா  வடிவே லழகா !
                                     
                                ( உளமுருகாதா )


பழம் நீயென்றே , பழனியில் நின்றே ,
தொழுகின்ற பக்தர் குறை தீர்க்க – உன்
                                      
                                     ( உளமுருகாதா )


கோடிக்கோடியாய் யுந்தன் கோவிலிற், 
                 பக்தர் வந்துனைப்பணிந்தும் ,
பாடிப்பாடியே,   பக்தி மேலிட,  
                 நெற்றியிற்   திருநீரணிந்தும் ;
ஆடி ஆடியே , அழகுக்காவடி , 
                 தூக்கி, நன்நடம்  புரிந்தும்>
கூடிக்கூடியே, குமரா யெனுமவர்,
                                     குறைகளுனுக்குத் தெரிந்தும்.
                                        
                                                                           ( உளமுருகாதா )




Saturday, September 22, 2012







வரந்தரும் வடிவேலா !








பரங்குன்றம் வாழும் பரமசிவன் மைந்தா ;
நிரந்தர சுகந்தந்து நிம்மதியும் நீ தா ;
                                     
                                                                                   (பரங்குன்றம்)

வரந்தரும் வடிவேலா  வாழ்வில் வசந்தந்தா – உனை
சிரந்தாழ்த்திப் பணிந்தோமே சிங்கார வேலவா – யென்றும்
மறக்காத மனந்தா  மயிலம ரெழில் மன்னா – துன்பம்
பிறக்காத நிலைதா துணிவுந்தா அணிசேர் திருப்
                                      
                                                                                  (பரங்குன்றம்)

                                       
இருத்தின்றோம் வாழ்வினிலே களிக்கின்றோ மென்றால் – உன்
திருக்கரத்தி னருளன்றி வேறேது அய்யா – அன்பு
பெருக்கெடுத்து ஓட, உன் பக்தர் மனம் பாட – அவ்
உருக்கமான பாடலிலே உந்தன் மயிலாட,மகிழ் திருப்
                                    
                                                                                 (பரங்குன்றம்)


Thursday, September 20, 2012





துணை நீயம்மா !



துணைநீயம்மா ! அருள்வாயம்மா !
உனையன்றி உயர் தெய்வம்,யார்தானம்மா ? 
                                           ( துணை நீயம்மா)

இணையின்றி யெழில் மதுரை யாள்பவளே >
நினைப்போரின் நெஞ்சதனில் வாழ்பவளே ;
அணைக்கின்ற அருட்கரத்தை யுடையவளே >
அன்பாலே உருவான அன்னை நீயே தாயே ;
                                       (துணை நீயம்மா)

மொழிபேசும், கிளிகொஞ்சு முந்தன் கையில்>
முழுமதியா யொளி வீசும்,முக முண்மையில் ;
ஒளிவீசு மிருவிழியி னருளொயில் >
வழிபிறக்க, வாழ்வானாய் யன்னை நீயே ;
                                         (துணை நீயம்மா)

Wednesday, September 19, 2012

எழில் மீனாட்சி



எழில் மீனாட்சி !





vHpyha; epd;wpLth bsq;fs; kPdhl;rp;
mUsha;g; bghHpe;jpLth sd;id kPdhl;rp
epHyha;j; bjhlu;ths;>epk;kjp jUths;.     (vHpyha;)

Jjpg;nghu; Jau;ePf;fpj; Jizah apUg;ghs; -- fuk;
Ftpg;nghu;> FiwePf;fpf; ;fuq;b;fhLg;ghs; -- jpdk;
epidg;nghu; epiyawpe;J mUs;g[upths; -- mtu;
tpidnahl tpHpjpwe;J tHpfhl;L kd;id   (vHpyha;)

fUtpHp jpwe;jhny fUizbahsp gpwf;Fk;>
<upjH; tpupe;jhny ,d;bkhHpna Ruf;Fk;>
ghnuhu;f; fUs;g[upa[k; gu;tjtu;j;jdpiag;
ghu;j;jhw; Jd;gbkyhk; gQ;rha;g; gwf;F     (bkHpyha;)
;

;

Tuesday, September 18, 2012






பூஜித்தேன் அருள்வாயே ராகவேந்திரா !




நித்தமுனை நினைக்கின்றேன் ராகவேந்திரா -– மன
நிம்மதியை   ஈந்திடுவாய்    ராகவேந்திரா ;
புத்தம்புது     மலராலே      ராகவேந்திரா -- நான்
பூஜித்தே      னருள்வாயே   ராகவேந்திரா ;

பக்தியுடன்    பாடுகிறேன்    ராகவேந்திரா -– நற்
சக்திதந்து     நலமஞ்சேர்    ராகவேந்திரா ;
எக்கதியை    யடைந்தாலும்  ராகவேந்திரா -– நீ
பக்கத்துணை  யாயிருப்பாய்  ராகவேந்திரா ;

துயர்நீக்கி,    உயர்வுந்தா    ராகவேந்திரா -– அன்புப்
பயிர்வளர    நீராவாய்      ராகவேந்திரா ;
செயற்கரிய   செய்பவனே   ராகவேந்திரா -– தினஞ்
செயமளித்துச் சிறப்புந்தா    ராகவேந்திரா .




கோவிந்தன் நாமத்தைப் பாடு; !


கோவிந்தன் நாமத்தைப் பாடு;-- எழிற்
கோலத்தைக் கண்ணாறக் காணு ;
பாதத்திற் புதுமலரைத் தூவு ,
பரந்தாம னருள் பெற்று வாழு .


திருக்கூடல்  மாநகரில் அமர்ந்திருக் குந்தேவன் ,
திருமலையி லெழிலுருவாய் நின்றிருக்கும் நாதன் ;
அருள்பெற்று வாழ்ந்திடவே யல்லலேது மில்லை,
இருள்நீக்கி யொளிசேர்ப்பான், இனியேது தொல்லை.
                                           (கோவிந்தன்)
நம்பியவர் குறைநீக்கி நலம்பலவே தருவான் ,
நாடியவர் துயர்போக்க, நாரணனும் வருவான் ;
பாடுபவர் பயம்நீக்கப் பார்த்தனுமே வருவான் ,
தேடுபவர் தினங்காணத் திருவருளுந் தருவான் .
                                           (கோவிந்தன்)