Saturday, June 18, 2016

குருவின் கருணையால் காதல் கனிந்து மணம் முடித்தல்.




குருவின் கருணையால் காதல் கனிந்து மணம் முடித்தல்.

        நவீன உலகில் தற்கால இளைஞர்களும்யுவதிகளும் இளமையிலேயே காதலெனும் மாயையில் சிக்கித் தவிக்கின்றனர்ஆனால் சிலர் மட்டுமே தங்களின் பெற்றோரின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்ளுகின்றனர்.அப்படிப்பட்டவர்களின் ஜாதகங்களில் குறிப்பிட்ட பாவங்களின் மூலமாக குருவின் அருள் அமையும் போது அத்தகைய உயரிய குணம் அமைகிறது.அத்தகைய கிரக நிலை இக் காதல் குயில்கள் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணத்தை செய்து கொள்ள உதவுகிறது.
    காதல் ஜோடிகளின் ஜாதகம் – 1



குரு





இராகு
ஜாதகி -இராசி
01 செப் 1989
9 – 25
பெங்களூரு



நவாம்சம்


கேது,சூரி சந்,செவ்


சனி()

லக்///
புத,சுக்




தசா இருப்பு – சுக்கிரன் – 2  – 0 மா – 10 நாள்
       இந்த ஜாதகிக்கு 11 செப்டம்பர் 2007 முதல் 11 செப்டம்பர் 2014 வரை செவ்வாய் திசை நடந்ததுஅதில்சந்திர புக்தி 1 பிப்ரவரி 2014 முதல் 11செப்டம்பர் 2014 வரையாகும்செவ்வாய்திருமணத்திற்குத் தொடர்புடைய பாவகங்களானதனகளத்திர பாவங்களுக்கு அதிபதியாகிஇலாபத்தில் அமர்ந்திருப்பதுஇந்த ஜாதகிக்கு செவ்வாய் (11 செப்டம்பர் 2014) திசைக்குள்,திருமணம் உறுதியாகிவிடும் என்பதைக் குறிகாட்டுகிறதுவக்கிர நிலையிலுள்ளஆம் அதிபதி சனிமுந்தைய பாவத்திலிருந்து களத்திர ஸ்தானாதிபதி செவ்வாயை பார்ப்பதுதிருமணத்திற்கு முன்னரே இப்பெண் காதலில் விழுவாள் என்பதைக் காட்டுகிறதுதிருமணம் முடிவாகும் போது இந்த ஜாதகிக்கு செவ்வாய்தசாசந்திர புக்தி நடப்பில் இருந்ததுசந்திரன்சுக்கிரனின் ( காதல்,காமத்திற்கு உரிய இயற்கை காரகன் ) சாரத்தில் இருந்து அவனும் இலாப பாவத்தில் இருக்கிறான்சுக்கிரன்உச்ச புதனுடன் இணைந்து வியபாவத்தில் இருப்பது நீசபங்கமாகிறது.
       தேவகுரு பாக்கிய பாவம் அமர்ந்து நல்ல நிலையில்தனுசவில் உள்ளஆம் அதிபதி சனியைப் பாரக்கிறார்சந்திரா இலக்னத்தில் இருந்து பார்க்கும் போதுகுரு 5 ஆம் அதிபதியாகிகோசாரத்தில் 11 ஆம் இடத்தில் இருந்து, 7ஆம் அதிபதி சனியைப் பார்க்கிறார்இந்த குருவின் உந்துதல் காரணமாக காதல் விவகாரம் இந்தப் பெண்ணுக்கு உண்டு என்பதும்அவள் நிச்சியமாக பெற்றோர்களின் சம்மத்த்தைக் கோருவாள் என்பதும்  உறுதியாகிறது.
       குறிப்பிட்ட பாவங்களோடு எங்ஙனம் இவள் காதலனின் ஜாதகத்தில் குருவின் தாக்கம் இருக்கிறது என்பதை மேலோட்டமாக ஆராய்வோம்.
சூரிகுரு
இராகு
செவ்


புத
ஆணின் ஜாதகம்இராசி
19 மார்ச் 1987
19 – 40
மங்களூர்

சுக்


சனி
சந்
லக்///
கேது

       களத்திராதிபதி சுயவீட்டில் அமர்ந்துவிருச்சிகத்திலுள்ள 5 ஆம் அதிபதி சனியைப் பார்ப்பதும்சந்திரா இலக்னத்தில் இருந்து 7 ஆம் அதிபதி செவ்வாய், 5 ஆம் அதிபதி சனியைப் பார்ப்பதும் காதல் வாழ்க்கையை நிச்சியப்படுத்துகிறது.
காதல் ஜோடிகளின் ஜாதகம் – 2
       கீழ் கண்ட ஜாதகத்துக்கு உரிய பெண் 1997 வாக்கில் இராகு தசாசுக்கிர புக்தியில் ஓர் இளைஞனோடு காதல் கடலில் மூழ்கினாள்.  சுக்கிர புக்தி ஆகஸ்டு 2000 வரை நடந்தது.  இராகுதனுசிலுள்ள சுக்கிரனுக்கு சிறப்பான திரிகோணத்தில் 5 ஆம் அதிபதியான சனியோடு இணைந்து உள்ளதுபாக்கிய,சுப பாவத்துக்கு அதிபதியான சுக்கிரன் தனது சுய சாரத்தில் அமர்ந்திருப்பது,காதல் கடலில் நீந்தியதற்கு சரியான காரணம் என்றால் மிகையாகாது.







லக்///
கேது

சூரி,புத
கேது
பெண் ஜாதகம்
16 பிப்ரவரி1979
   08-36 இரவு
கல்கத்தா
குரு


நவாம்சம்
சந்
செவ்
சனி
இராகு


சுக்


லக்///
சந்

புத
சூரி,
இராகு

செவ்,சுக்
குரு,சனி

       இதை மேலும் உறுதி செய்யும்படியாகநவாம்ச நிலைகளைப் பார்க்கும் போதுஇலக்னத்துக்கு (இராசியில்) 7 ஆம் அதிபதியான குரு மற்றும் 5 ஆம்(இராசியில்)  அதிபதியான சனி ஆகியோர் நவாம்ச இலக்னமான ரிஷபத்துக்கு 5இல் இணைந்து இருக்கிறார்கள்பிப்ரவரி 2001 இல் இப்பெண்ணின் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு திருமணம் நடந்ததுஇராசியில் உச்ச குரு கடகத்தில் இருந்து 5 மற்றும் 7 ஆம் இடங்களைப் பார்வை இடுவதன் மூலமாகக் கருணை பொழிகிறார்குருவின் தாக்கத்தால்பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல்பெற்றோர்களின் சம்மதத்தோடு காதல் தம்பதிகளின் திருமணம் நடந்தேறியதற்கான மற்றுமொரு உதாரண ஜாதகம் இது எனலாம்
ஆணின் ஜாதகம் –
சந்
லக்///
சனி()

செவ்
ஆண் ஜாதகம்
இராசி
கேது
இராகு


குரு,சுக்
சூரி,புத


சந்திர இராசியில் இருந்து பாக்கியஸ்தானத்தில் உள்ள குரு,  5 ஆம் வீடு மற்றும் 5 ஆம் அதிபதியான சந்திரனைப் பார்க்கிறார்இலக்னத்துக்கு 11 ஆம் அதிபதி சனி 2 இல் இருந்துகுருசுக்கிரனைப் பார்வையிடுகிறார்இவர் ஜாதகத்திலும் தேவகுருவின் கருணை தென்படுவதைக் காணலாம்.
காதலனின் ஜாதகம் – 3.
       இந்த ஜாதகர் தன் அத்தையின் மகளைக் காதலித்தார்இவரது ஜாதகத்தில் 1/7 அச்சில் சந்திர மங்கள யோகம் அமையப்பெற்றுள்ளது.செவ்வாய் உச்சம் பெற்று இலக்னத்திலும், 7 ஆம் வீட்டில் சந்திரன் தன் ஆட்சி வீட்டில் உள்ளார். 5 மற்றும் 10 க்கு அதிபதியான உச்ச சுக்கிரன்குருவால் பார்க்கப்படுகிறார்.
       நவாம்ச இலக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 5 ஆம் அதிபதி,சந்திரனால் பார்க்கப்படுகிறார்இது காதல் விவகாரத்தை உறுதிப்படுத்துகிறது.சந்திரமங்கள யோகம் ஏற்படும் இடத்துடைய காரகத்துவத்தை அதிகரிக்கிறது.அதன் காரணமாக ஜாதகர் பாரம்பரிய கோட்பாடுகளை உடைத்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு அதிக காதல் வயப்பட்டிருந்தார்.       செவ்வாய் பாதகாதிபதியாகி 7 ஆம் அதிபதி சந்திரனைப் பார்க்கிறார்இதுவும் உணர்ச்சிகளைத் தூண்டி காதலை அதிகரித்தது.
          
சுக்


சனி,ராகு


லக்//சுக்

செவ்,ராகு

சூரி,புத

இராசி
ஜாதகம்-3-ஆண்
24 –பிப்-1945.     05-45 - அதிகாலை
பெங்களூரு
சந்

நவாம்சம்

லக்//செவ்

சனி()
குரு()
சூரி

கேது


குரு
புத
கேது

சந்
      சனி தசா இருப்பு – 12  11 மா – 11 நாள்.
       இராசியில்பாக்கிய ஸ்தானத்தில் இருந்து குரு, 5 ஆம் அதிபதி சுக்கிரனையும்உச்சமடைந்து இலக்னத்தில் அமர்ந்துள்ள 11 ஆம் அதிபதி செவ்வாயையும் பார்க்கிறார்நவாம்சத்தில் 5 ஆம் இடத்தையும், 7 ஆம் இடத்தில் இருக்கும் 5 ஆம் அதிபதியையும் பார்க்கிறார்இவரின் காதலுக்கு சிறிது எதிர்ப்பு இருந்ததுகேது மகா தசா / சுக்கிர புக்தியில் இருவரின் தந்தையைத் தவிர மற்ற குடும்பப் பெரியோர்களின் அனுமதியோடு திருமணம் நடந்தேறியது.

       முடிவாககுருவின் முழு ஒத்துழைப்பால் மட்டுமே காதலர்கள் தங்கள் பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை மேற்கண்ட ஜாதகங்கள் மூலமாக அறிந்தோம் அல்லவா ? அதன் தாக்கத்தின் மூலமாகவே காதல் பாரம்ரியத் திருமணமாக உருவெடுக்கிறது எனலாம்.

No comments:

Post a Comment