Wednesday, June 29, 2016

நந்தி நாடி




நந்தி நாடி
எந்தெந்த ஆண்டுகளில் ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் என்ன முக்கிய நிகழ்வுகள் ஏற்படும்.
         ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளைக் கணக்கிட ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்தை வைத்து வெவ்வேறு வழிகளில் ஆராயவேண்டும். இதில் இராகு முக்கியப் பங்கு வகிக்கிறார் எனலாம். ஜாதகரின் பிறப்பில் இருந்து முதல் 12 வருடங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. வாழ்க்கையின் மீதமுள்ள ஆண்டுகள்  12 வருடங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
1.       ஜனன ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்தில் இருந்து முதல் 4 இராசிக்குள், இராகு இருந்தால், 12  முதல் 24 வரையான வயதுகளில் அவரின் வாழ்க்கை இனிமையானதாக இருக்காதுதனது வாழ்க்கையில் ஓர் அடிமைத்தனமான  வாழ்க்கையாக இருக்கும். உத்தியோகம், தொழிலிலும் அதே நிலை இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது. இராகு நல்ல நிலையில் இருந்தால், இந்த பாதிப்புக்கள் குறையும்.
2.        சனிக்கு 11 ஆம் வீட்டில் இடம்பெறும் கிரகம்  அடுத்த பிரிவான 24 முதல் 36 வயதுவரையான காலத்தை கட்டுப்படுத்துகிறது. சனிக்கு 11 ஆம் வீட்டில் இருகிரகங்கள் நன்னிலையில் இருப்பின், அவை ஜாதகரின் வாழ்க்கையின் 24 முதல் 48 வயதுவரையான காலத்துக்கு கருணை காட்டுகிறது.  இவற்றில் குறைந்த பாகை அளவைக் கொண்ட கிரகம் 24 முதல் 36 வயதுவரை தனது தாக்கத்தை ஜாதகர் மேல் செலுத்துகிறது.
3.        சனிக்கு 7 ஆம் வீட்டில் இடம் பெறும் கிரகம்  அடுத்த பிரிவான 48 முதல் 60 வயது வரையான காலத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.  சனிக்குப் பகை கிரகங்களான சந்திரன், கேது அல்லது செவ்வாய், சனிக்கு 7 ஆம் இடத்தில் இடம் பெற்றால் இந்த 12 வருடங்களுக்கு, தடைகளும், குறைந்த அல்லது முழுவதுமான வருமானம் இன்மையும் ஏற்படும்.
4.  அடுத்த 12 வருடங்கள் சனிக்கு 4 ஆம் இடத்தில் உள்ள கிரகத்தால் கட்டுப்படுத்தப்படும்.
5.  உதாரண ஜாதகம்.
12
1
2 சூரி
3 புத
  சுக்
11 சந்
  கேது

4
10
5 சனி
  இராகு
9 குரு
8 செவ்
7
6

       இந்த ஜாதகர் தனது 12 முதல் 24 வயது வரையான காலத்தில் சனியுடன், இராகு இருப்பதனால் அனுகூலமற்ற பலன்களை அடைந்தார். (முதல் விதி சனியினின்று 4 கட்டத்துக்குள்).
       அடுத்த 12 வருடங்களில் – 24 முதல் 36 வரைபுதனால் மிகவும் நல்ல காலமாக அமைந்ததுஅடுத்த 12 வருடங்களில் – 36 முதல் 48 வரைசுக்கிரனின் நன்நிலையால் சிறப்பாக அமைந்தது.
        48 முதல் 60 வயது வரையிலான காலத்தில் 7 இல் உள்ள சந்திரனால் கட்டுக்கு அடங்காத செலவுகளும், பண இழப்புகளும் ஏற்பட்டது.
        அடுத்து உள்ள கேதுவால் 60 – 72 வயது வரை உள்ள காலங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுஜாதகர் தனது 73 வது வயதில் சிவலோக பதவி அடைந்தார்.


No comments:

Post a Comment