யோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள்.
இந்தியாவின் பாரம்பரிய பக்தி மார்க்க வழிமுறைகளையும், அதன் மதிப்பையும் மேலைநாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற, வங்கம் தந்த சிங்கம் நரேந்திரராக இருந்த சுவாமி விவேகானந்தா மற்றும் முகுந்த லால் கோஷாக இருந்த சுவாமி யோகானந்தா ஆகியோர் ஆகும். 1893 ஆண்டு செப்டம்பர் திங்கள், சிகாகோவில் பேசிய விவேகானந்தர் பார்வையாளர்களின் ஆன்மாவை உலுக்கும் படியாகவும், பேச்சைக் கேட்டவர்கள் வாய்களில் வார்த்தைகள் வராவண்ணமும் அற்புதமாக இந்துமத தத்துவங்களை எடுத்து உரைத்தார்.
இது நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு 1920 அக்டோபர் திங்கள் போஸ்டன் காங்கிரஸின் மதச் சொற்பொழிவுப் பேரவையில் தனது கன்னிப் பேச்சைத் துவக்கிய யோகானந்தா, 1925 வரை அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் தனது மதப் பிரச்சார சொற்பொழிவுகளை நிகழ்த்தி, லாஸ் ஏஞ்சல்ஸில், கடவுளை உணரும் விஞ்ஞான முறையிலான கிரியா யோகாவுக்கான தலைமையகத்தை நிறுவினார்.
உலக துன்பங்களில் இருந்து விடுபட்டு எப்போதும் மக்கள் சந்தோஷத்தை அனுபவிக்கும் வண்ணம், இந்து மதத்தின் நற்போதனைகளை,பக்தி மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்காக கடவுளால் படைக்கப்பட்ட இவ்விரு புண்ணிய ஆத்மாக்கள், எங்ஙனம் தங்களுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட கடமைகளை முடிக்க கிரகங்களால் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை அவர்களின் ஜாதகங்களின் மூலமாக அலசுவோமா?
சுவாமி விவேகானந்தர் 12 – 01 – 1863 அன்று காலை 6 – 33 க்கு கொல்கட்டாவில் பிறந்தார்.
செவ்
|
கேது
|
சுக்
|
புத
|
சனி
செவ்
|
சந்
| |||
இராசி
|
இராகு
|
நவாம்சம்
| ||||||
புத
சுக்
|
கேது
| |||||||
சூரி
லக்//
|
இராகு
|
குரு
|
சனி
சந்
|
சூரி
|
குரு
லக்//
|
தசா இருப்பு – சந்திர தசா -04 வ 04 மா 29 நாட்கள்.
தர்ம வீடும், நெருப்புத் தத்துவ இராசியும். காலபுருஷனுக்கு தெய்வீக வீடும், இராசி மண்டலத்தில் இருந்து, மதிப்பும், கௌரவும் கொடுக்கக் கூடிய பாக்கிய பாவத்துக்கு அதிபதியான, வர்கோத்தமம் ஆன சூரியன் இணைந்துள்ள,தனுசு இராசியை இலக்னமாகக் கொண்டு சுவாமி விவேகானந்தர் பிறந்தார். தர்ம திரிகோணத்தின் அதிபதிகளான குரு, அவரின் பார்வை பெறும் செவ்வாய், 9 ஆம் அதிபதி சூரியன் ஆகியோரின் தாக்கத்தால் அனைவரையும் கவரக்கூடிய அவரது உடல் அமைப்பு மற்றும் பக்தி, ஞானம் மிக்க தன்மை ஆகியவை அமையப்பெற்றார்.
அதேபோல் சந்திரா இலக்னத்தைப் பொருத்தவரை, திரிகொணாதிபதிகள் - 5 ஆம் அதிபதி சனியும், புதனும் பரிவர்த்தனை ஆகி, 9 ஆம் அதிபதி சுக்கிரனும்5 இல் இணைந்துள்ளார். இதன் காரணமாகவும் அவரால் பக்திமார்க்கத்தில் மிளிர முடிந்தது. பாவத்தைப் பொருத்தவரை குரு கர்ம பாவத்தில் அமர்ந்து, சக்தி தரும் செவ்வாயால் பாரக்கப்படுவதால் சிதறாத தெய்வீக மனதோடு பக்தி மார்க்கத்தை இடைவிடாத தனது பிரசங்கங்கள் மூலமாக உலகெங்கும் பரப்பும் வல்லமை பெற்றார் எனலாம். 1893 மே மாதத்தில் நடந்த குரு தசா குரு புக்தியில் அவர் தனது ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டது நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. சந்திரா இலக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்தில் குரு இருக்கவும், இலக்னத்துக்கு வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்ந்து, அதன் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை பெறுவது அவரை ஓர் ஈடுஇணையற்ற கம்பீரமான குரல் வளமுடைய ஆன்மிக சொற்பொழிவாளர் ஆக்கியது. குரு புக்தியில் சிகாகோ மற்றும் அமெரிக்காவின் பல்வேறு இடங்கள், இலண்டன் என இந்திய வேதாந்த தத்துவங்களையும், பக்தி மார்க்கத்தைப் பற்றிய சித்தாந்தங்களையும் சொற்பொழிவாற்றி 1987 இல் தாய்நாட்டுக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கதாகும். மீண்டும் ஜூன்1899 முதல் டிசம்பர் 1900 வரை அதே குரு தசா கேது, சுக்கிர புக்திகளில் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது தெய்வீக பரப்புரைகளை அம் மக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொண்டார் என்றால் அது மிகையாகாது. 12 ஆம் அதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் கேது இருப்பதும், பாக்கியாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மிக குருவும் வழிகாட்டியுமான ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜாதகத்தோடு எங்ஙனம் குரு – சிஷ்ய பரம்பரையாக ஒத்துவருகிறது என்பதை ஆராய்வோம். குருவின் இலக்னம் கும்பமாகி, 5 ஆம் இடமான மிதுனத்தில் குரு அமர்ந்து, சிஷ்யரின் ஜாதகத்தில் அதற்குத் திரிகோண ஸ்தானமான துலாத்தில் குரு அமர்ந்துள்ளது, குரு- சிஷ்ய இணைவுக்கான காரணமாயிற்று. மேலும், மறைபொருள் தத்துவங்களுக்கு உரிய காரகரான இராகுவானவர் இருவர் ஜாதகத்திலும் விருச்சிகத்தில் இருந்தது அவர்களின் தெய்வீக தொடர்புடைய இணைவுக்குக் காரணமானது.
தனது மதிப்பு மிக்க குருவை சந்திக்க விவேகானந்தருக்கு 1881 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த இராகு தசா, சனி புக்தி உந்துதல் அளித்தது. ஆனால்,தொடர்ந்து குருவுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், 1886 ஆம் ஆண்டு சிஷ்யரின் இராகு தசா, சுக்கிர புக்தியில் அவரது குரு தனது தெய்வீகப் பணிகளை ஆற்றிட சென்று விட்டார் என்பதேயாம். இவரும் இந்தியாவின் பக்திமிக்க பாரம்பரியத்தை மேலும் அறிந்து கொள்ள சந்திர புக்தியில் இந்தியா முழுக்க தனது ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார்.ஞானகாரகன் குரு இலக்னத்துக்கு 3 ஆம் இடத்தைப் பார்க்கவும், அதன் அதிபதியான கர்மகாரகன், தத்துவங்களுக்கும் காரகனான சனி தசம கேந்திரத்தில் அமர்ந்ததால் அவரால் தனது ஆன்மிக தத்துவங்களை ஞான யோகா, பக்தி யோகா, கர்ம யோகா மற்றும் இராஜ யோகா என நான்கு பகுதிகளாக வெளிக் கொணர முடிந்தது. நல்லவர்களை இறைவன் நீண்ட காலம் வாழ விடுவதில்லை. குரு மகாதிசை, சுக்கிர புக்தியில், 7 ஆம் அதிபதி புதனுடன் இணைந்து சுக்கிரன் 2 ஆம் இடத்தில் அமர்ந்ததாலும், சந்திர இலக்னத்துக்கு 7ஆம் அதிபதி குரு 2 இல் மாரகராக மாறியதன் காரணமாகவும், இத்தகைய பெருமைகள் பல பெற்ற சுவாமி விவேகானந்தரின் ஆயுள் 39 வது வயதிலேயே முடிவடைந்தது.
இனி சுவாமி பரமஹம்ச யோகானந்தரின் ஜாதகத்தைப் பார்ப்போம்.இவர் 05 – 01 – 1893 அன்று காலை 08 – 38 க்கு உத்திரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில் பிறந்தார்.
குரு,
செவ்
|
இராகு
|
புத
|
சந்
|
லக்//
| ||||
இராசி
|
குரு
சுக்
|
நவாம்சம்
|
சனி
இராகு
| |||||
சந்
லக்//
|
கேது
| |||||||
சூரி
புத
|
சுக்
|
கேது
|
சனி
|
செவ்
|
சூரி
|
தசா இருப்பு – கேது – 5 வ – 2 மா – 28 நாட்கள்
சுவாமி பரமஹம்ச யோகானந்தர் நெருப்பு இராசியான சிம்மத்தை இலக்னமாகக் கொண்டு, அதன் அதிபதியான சூரியன் மற்றொரு நெருப்பு இராசியும், திரிகோணமுமான தனுசுவில் இருப்பது, இவர் உலக மக்களிடையே யோகா மற்றும் தெய்வீகச் செய்திகளைக் கொண்டு செல்லப் பிறந்தவர் என்பதை உறுதி செய்கிறது. தர்ம திரிகோணங்களின் அதிபதிகளான சூரியன்,குரு, செவ்வாய் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் இருப்பது இவரை மிகவும் சிரத்தையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பக்தி மார்க்கத்தில் செல்லத் தூண்டுதலாக இருந்தது . 10 ஆம் அதிபதியான சுக்கிரன் 4 ஆம் இடத்தில் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதால் தெய்வீகத் தன்மையுடன் கூடிய பக்தி மார்க்கத்தை மக்கள் கற்பதற்கான பெரிய மையங்களை அமைக்கும் சீரிய பணிகளில் ஈடுபடவைத்தது. மக்களைக் கவர்ந்திழுக்கும் சொற்பொழிவுத்திறன் 2ஆம் இடத்தைப் பார்க்கும் குரு மற்றும் செவ்வாயின் அருளாலும், 2 ஆம் அதிபதி புதன் 5 இல் இருப்பதாலும் சிறப்பாக அமைந்தது.
சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் சொற்பொழிவாற்றச் சென்றபோது, அதே வருடமே யோகானந்தா பிறந்தார் என்பதும். அவரைப் போலவே இவரும் 1920 இல் அமெரிக்காவிலுள்ள போஸ்டனில் சொற்பொழிவாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னே ஒற்றுமை ? சூரிய தசை, குரு புக்தியில் அவருக்கு இந்த ஆன்மிகப் பயணங்கள் ஏற்பட்டது. சந்திர திசையில் பாக்கிய பாவத்திலுள்ள இராகு புக்தியில்தான் 1925 இல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில், யோகா மற்றும் ஆன்மிகத் தலைமையகத்தை நிறுவினார். 1925 முதல் 1935 வரை உலகின் பல பாகங்களுக்குச் சென்று, தியானம் மற்றும் க்ரியா யோகம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1935 இல் செவ்வாய் திசையில் ஐரோப்பா மற்றும் இந்தியாவுக்கு வந்தார்.
யோகானந்தா தனது ஆன்மிக குருவான சுவாமி யுக்தேஷ்வர் கிரி அவர்களை 1910 ஆம் ஆண்டு தனது சுக்கிர திசை , குரு புக்தியில் ஆசீர்வதிக்கப்பட்டு ஶ்ரீராம்பூர் என்ற இடத்தில் சந்திக்கும் பேறு பெற்றார். குரு –சிஷ்யர் இருவருக்கும் உண்டான பந்தத்தை இருவர் ஜாதகத்திலும் இடம் பெற்ற மேஷம் – துலாத்திலுள்ள நிழல் கிரகங்களின் அச்சும், சூரியன் திரிகோணமாக நெருப்பு இராசிகளில் அமர்ந்ததும் உணர்த்துகிறது. ‘முகுந்த் லால் கோஷாக’இருந்த இவரை இவரது குருவே யோகானந்தாவாக பெயர் சூட்டினார். 1936 இல் சுவாமி யுக்தேஷ்வர் முக்தியடையும் முன் இந்தியாவின் மிக உயரிய ஆன்மிகப் பட்டமான ‘பரமஹம்ச’ எனும் பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்.
பாக்கிய பாவத்திலுள்ள இராகு மேல்நாட்டில் பல இடங்களில் விஞ்ஞான முறையினாலான தியானம் மற்றும் பக்தி மார்க்கத்துக்கான மையங்களை அமைக்கத் தூண்டுதலானது. பாக்கியாதிபதி செவ்வாய் தனது திசையில்,அட்டமாதிபதி குருவுடன் இணைந்து, சனியின் பார்வை பெற்றதால் யோகி மீண்டும் இங்கிலாந்து, அமெரிக்கா என தனது பிரசாரத்தைத் துவக்கினார். 1946இல் தனது சுயசரிதையை எழுதியதின் மூலமாக தனது தெய்வீக அனுபவங்களை உலகறியச் செய்தார். 1952 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள்,மறைபொருளை உணர்த்துகிற இராகு – கேது தசா புக்திகளில், லாஸ் ஏஞ்சல்ஸில், மகாசமாதி அடைந்தார்.
இவ்விரு புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகங்களில் கிரகங்கள் ஏற்படுத்திய தெய்வீகத் தன்மைகளை உணர்ந்தோம். நமது பாரதத்தின் தெய்வீகத் தன்மைகளை உலகறியச் செய்த தேவதூதர்களாகிய யோகிகளை எப்போதும் நம் நினைவிற்கொள்வோம்.
No comments:
Post a Comment