Saturday, April 4, 2020






மாறியது உலகம், மரணக் கிணறாக !

எதிர்பாராதவிதமாக, ஓர் உலகில் துயின்று,
மற்றோர் உலகில் விழித்தெழுகிறோம்.
டிஸ்னி லாண்டில் ஒரு மேஜிக்கும் இல்லை,
பாரீஸ் இனியோர் காதல் தேசமும் இல்லை,
திடீரேன, நியூயார்க்கில் பலரும் தூங்குகின்றனர்.
சீனாவின் பெருஞ்சுவர் இனியொருபோதும் நினைவுக் கோட்டையல்ல,
திடீரென, அணைப்பும், முத்தங்களும் ஆயுதங்களாக மாறிவிட்டன,
காதலியைக் கைப்பிடித்து, பூங்காவில் நடப்பதும், சட்டவிரோதமானது,
திடீரென, வயதான பெற்றோர்களைப் பார்ப்பதும்,
தாத்தா பாட்டிகளைப் பேணுவதும், நடிப்பானது,
திடீரென, நமது நாட்டில் துப்பாக்கிகளும், குண்டுகளும்,
அணு ஆயுதங்களும், பீரங்கிகளும் தூசுதட்டும்படியானது,
ஊரடங்கு அனைவரையும் வீட்டுச்சிறையில் வைத்தது,
உயிர் முன், பணமும் வெறும் காகிதமானது,
அது கொண்டு, காதருந்த ஊசியும் வாங்க இயலாது,
எவருக்கு, எவரால், எப்போது மரணம் என்பது,
கொரோனா எனும் கொடிய நோய் தந்த பரிசானது,
அவன் மட்டுமே அனைத்து சக்திகளையும் உடையவன்,
எல்லாம் அவன் செயல் என்பதை, உணரவைத்தானே, இறைவன்.
அவன் ஒருவன் மட்டுமே, அனைத்தும் அறிந்தவன்.
அவனருளாலே, அனைத்து இன்னல்களும், மின்னல் போல் மறைவதாக.


No comments:

Post a Comment