திருமணம்
ஜாதகம் – 2
7 ஆம் பாவம் – 7 ஆம் வீடான கும்பத்தில்
வர்கோத்தமமான கேது அமர்ந்துள்ளார். கேதுவை, 7 ஆம் அதிபதி சனி, சுபரான குரு, சுக, பாக்கியாதிபதியும்,
யோக காரகருமான செவ்வாய் ஆகியோரால் பார்க்கப்படுகிறார். 7 ஆம் அதிபதி சனி, 7 ஆம் பாவமான
தனது வீட்டையே பார்ப்பது ஒரு ஸ்திரமான நிலையாகும். குரு, மற்றும் செவ்வாய் தற்காலிக
சுபர்கள் ஆதலால், அவர்களின் பார்வை 7 ஆம் இடத்தை பலப்படுத்துகிறது. கேது, செவ்வாயின்
பலனையோ அல்லது இடம் கொடுத்தவரான சனியின் பலனையோ தரவல்லது. எனவே, 7 ஆம் இடத்தைப் பொருத்தவரை
எந்தவித பாதிப்பும் இல்லை.
7 ஆம் அதிபதி – 7 ஆம் அதிபதி சனி, சுப இராசியான ரிஷபத்தில், தசம கேந்திரத்தில்
சுபகர்த்தாரி யோகத்தில், ஒரு புறம் சந்திரனும், மறுபுறம் குரு, சுக்கிரன் என, நடுவில்
அமர்ந்துள்ளது. எனவே, 7 ஆம் அதிபதியின் நிலையும் சிறப்பு.
களத்திரகாரகன் – நட்பு
இராசியில் சுக்கிரன், குருவுடன் இணைந்து உள்ளார். அவர் சனி மற்றும் சூரியன் இருவருக்கிடையே
பாபகர்த்தாரியில் இருந்தாலும், குருவின் இணைவு சமன் செய்து விடுகிறது. மேலும், சூரியனும்
சனியும், முறையே இலக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகி பாவத்துக்கும், காரகருக்கும் நல்ல
பலனையே அளிக்கிறார்கள்.
7 ஆம் அதிபதி
சுப இராசியில் இடம் பெற்று நன்நிலையில் இருப்பதால் ஜாதகருக்கு அழகிய மனைவி அமைவாள்.
7 ஆம் இடமும் நன்னிலையில் இருப்பதால், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும். 7 இல் கேது
நன்மை செய்தாலும், மனைவியின் நுண்வுணர்வு காரணமாக இருவருக்கும் இடையே சில நேரங்களில்,
சிற்சில எண்ண பேதங்களை உருவாக்கத்தான் செய்யும்.
|
சந்
|
சனி
|
குரு,
சுக்
|
|
|
குரு
சுக்
|
லக்
|
செவ்,
சந்,சனி
|
கேது
|
ஜாதகம் - 2
இராசி
03-8-1942-
காலை 7-23 -13°வ 00’,77° கி 35’
|
சூரி
புத
|
கேது
|
நவாம்சம்
|
|
|||
|
லக்,
செவ்
ராகு
|
|
இராகு
|
|||||
|
|
|
|
சூரி,புத
|
|
|
|
கேது தசா இருப்பு – 2 வ – 0 – 7 மா.
இவருக்குத் திருமணம்
1972 ஆம் வருடம் சந்திர திசை, சந்திர புத்தியில் நடந்தது. 1). 7 ஆம் அதிபதிக்கு இடம்
கொடுத்த இராசி, நவாம்சாதிபதி – சுக்கிரன், புதன்.
2). சுக்கிரன் 3). சந்திரன். 4). 2 ஆம் அதிபதி இடம்பெற்ற இராசி அதிபதி = சந்திரன்
5). கர்மாதிபதி = சுக்கிரன். பாக்கியாதிபதி = செவ்வாய் 7) 7 ஆம் அதிபதி, 7 இல் உள்ள
கிரகம் மற்றும் 7 ஆம் வீட்டைப் பார்வை செய்யும் கிரகங்கள் = சனி, கேது, செவ்வாய், குரு
ஆகிய தசா காலங்கள் திருமணத்தைத் தரவல்லன. புதன் தசை நடக்காது. செவ்வாய். சனி காலங்கள்
மிகவும் தாமதமாகும். சனி 7 ஆம் அதிபதி ஆவதால் திருமணத்தைத் தாமதப்படுத்தமாட்டார். எனவே,
ஜாதகருக்கு சந்திர தசை சுயபுத்தி திருமணத்திற்கு சாதகமானது.
ஜாதகம் – 3
7 ஆம் வீடு – அதன் அதிபதி சுக்கிரன் மற்றும் பாக்கியாதிபதி
சூரியனால் பார்வை பெறுகிறது. 7 இல் எந்த ஒரு கிரமும் இல்லை.
7 ஆம் அதிபதி – 7 ஆம்
அதிபதி சுக்கிரன் இலக்னத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உள்ளார். சூரியன் அசுபரானாலும்,
ஆட்சி வீடான தசம கேந்திராதிபதியாகி தற்காலிக சுபராகிவிடுகிறார்.
களத்திரகாரகன் – இயற்கை
சுபரான சுக்கிரன் பூர்வ புண்யாதிபதி மட்டுமன்றி, களத்திர பாவாதிபதியும் ஆகிறார்.
சந்திர இராசியில் இருந்து பார்க்கும் போது – 7 ஆம்
இடம் மேஷம், 10 ஆம் இடத்து அதிபதி சந்திரனாலும், 9 ஆம் மற்றும் 12 ஆம் அதிபதி புதன்,
யோக காரகன் உச்ச சனி மற்றும் 7 ஆம் அதிபதி செவ்வாயால் பார்க்கப்படுகிறது. களத்திராதிபதி
செவ்வாயின் பார்வை நல்லது என்றாலும் விரய பாவத்துக்கும் அதிபதியாகி சில பாதிப்ப தந்தாலும்,
9 ஆம் அதிபதி மற்றும் உச்ச சனி ஆகியோரின் கூட்டுப் பார்வை சக்தி மிக்கதாகி பாதிப்பினை
சரி செய்துவிடுகிறது.
ஆய்வுக் கருத்து – இந்த ஜாதகர் காமவுணர்வும்,
அர்பணிப்பு உணர்வும் உடைய பெண்ணை மனைவியாகப் பெற்றார். இது 7 ஆம் அதிபதியும், காரகனுமான
சுக்கிரன், தனது பாவத்தைப் பார்வையிடுவதால் உறுதியாகிறது அல்லவா ?
இந்த ஜாதகருக்கு
மே - 1977 இல் திருமணம் நடந்தது. கீழ்கண்ட கிரகங்கள்
திருமணத்துக்கு சாதக நிலைகளை தரக் கூடியவை ஆகும். 1). இராசி மற்றும் நவாம்சத்திலும்
7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவர்கள் = செவ், சூரியன். 2). சுக்கிரன் 3) சந்திரன்
4) 2 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் = புதன் 5). கர்மாதிபதி = சூரியன். 6). பாக்கியாதிபதி
– சந்திரன். 7) 7 ஆம் அதிபதி சுக்கிரன், 7 இல் கிரகம் இல்லை, 7 ஆம் இடத்தைப் பார்க்கும்
கிரகங்கள் = சூரியன்.
|
|
|
குரு
|
|
|
சந்
|
|
புத
|
|
ஜாதகம் -3
இராசி
03-4-12-1953-
காலை 5-17 –
13°வ 00’,77° கி 35’
|
கேது
|
இராகு
|
நவாம்சம்
|
லக்
|
|||
இராகு
|
|
சனி
|
சுக்,
கேது
|
|||||
|
லக்,சுக்
சூரி
|
சனி,சந்
புத
|
செவ்
|
சூரி,
|
|
குரு
|
செவ்
|
குரு தசா இருப்பு – 14 வ – 1 மா – 20 நாட்கள்
மேலே கண்டவற்றில்,
புதன் திசை சரியான காலமாக இருந்தாலும் அது மிகவும் தாமதமாக 33 வது வயதில் வருகிறது.
இந்த ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கான காரணிகள் ஏதுமில்லை. எனவே, புதனுடன் தொடர்புடைய
கிரகங்களான, சந்திரன், சனியை அடுத்ததாக எடுத்துக் கொண்டாலும், சந்திர திசை தாமதமாகவும்,
சனி திசை இளமையிலும் வந்துவிடுகின்றன. எனவே, 7 ஆம் வீட்டு அதிபதி மற்றும் களத்திரகாரகன்,
7 ஆம் இடத்தை பார்வை செய்பவனான சுக்கிர புத்தியில் பழம் பழுக்கலாம். ஆம், ஜாதகருக்கு
சனிதிசை, சுக்கிர புத்தியில் திருமணம் ஆனது.
No comments:
Post a Comment