Sunday, June 24, 2018

மூன்று கிரக இணைவுகள்.







மூன்று கிரக இணைவுகள்.


         சூரியன் + செவ்வாய் + புதன் = ஜாதகரின் சகோதரர்களுடன் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஜாதகர் அதிகாரம் மிக்க மற்றும் பலம் மிக்க முக்கியஸ்தர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்.
         ஜனன ஜாதகத்தில் செவ்வாய், புதன் இணைவு இருந்து அதன் மேல் கோசார சனி வரும்போதும் ஜாதகருக்கு மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.
         நீச சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரின் இணைவு இருக்க ஜாதகர் கீழ்தரமான மக்களாலும், மற்றும் இரு எதிரிகளாலும் தொல்லைகளை அனுபவிப்பார். நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில்புரிபவர்களுக்குள்ளும் இதேபோல் தொல்லைகள் காரணமாக கூட்டு உடைந்துவிடும்.
         மேஷத்தில் உச்ச சூரியன், செவ்வாய், புதன் இணைவு உள்ள ஜாதகத்தில் கூட்டு வியாபாரம், தொழில் செய்யும் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவர்களில் அதிக பலம்மிக்க கூட்டாளிகளில் ஒருவரின் குறுக்கீடும், உறுதித் தன்மையாலும் தொழில் கூட்டில் முறிவு ஏற்பட்டுவிடாது.
         ஜாதகத்தில் சனி, புதன், கேது ஆகியவற்றின் இணைவு வியாபாரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், பூமி விஷயங்களிலும் பிரச்சனைகள் ஏற்படும்.  நெருங்கிய நண்பர்கள் கூட ஜாதகருக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்வர்.
        ஜனன ஜாதகத்தில் புதன் மற்றும் சந்திரன் இணைந்து கேது இவர்கள் இருவருக்கும் நடுவில் இடம்பெற  ஜாதகருக்கு நில விஷயங்களில் பிரச்சனைகள், வழக்குகள், இவருக்கும் இரு பெண்களுக்கு இடையே சண்டைகள் மற்றும் ஏமாற்றப்படுதல், வஞ்சிக்கப்படுதல் ஆகியவையும் நிகழும்.
        ஜனன ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவுக்கு இடையே கேது இடம்பெற தந்தை மகனுக்கு இடையே சண்டை சச்சரவுகள் இருக்கும். மேலும், இராஜ சபையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஜாதகருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
        ஜனன ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் சனி மீது கோசார கேது வரும் காலத்தில் உடன் பிறப்புக்களிடையே உப்புப் பெறாத விஷயங்களுக்கு எல்லாம் சண்டைகள் நடக்கும். மேலும், பணியிடத்தில் எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பார்.
        ஜனன ஜாதகத்தில் இருக்கும் சூரியன் மற்றும் செவ்வாய்க்கு இடையே கேது இருக்க ஜாதகர் தன் இரத்த உறவுகளால் பிரச்சனைகளையும், சண்டை சச்சரவுகளையும் அனுபவிப்பார்.
       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது + சுக்கிரன் இணைவு ஜாதகருக்கு பரம்பரைச் சொத்து மற்றும் பண விவகாரங்களில் வழக்கு விகாரங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.
       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது + சனி இணைவு ஜாதகருக்கும் அவரது தந்தைக்கும் இடையே சண்டை சச்சரவுகளை, வழக்கு விவகாரங்களை ஏற்படுத்தும். மேலும், தொழில் மற்றும் வேலைகளில் தடைகள் ஏற்படுத்துவதோடு, பலம் மிக்க, அதிகார தோரணை மிக்க மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படும்.
       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது  இணைவு, இராகுவின் பார்வை பெற ஜாதகரின் தந்தை பல கஷ்டங்களை சந்திப்பார். அவை அவராலேயே அவருக்கு ஏற்படுத்திக் கொண்டதாக இருக்கும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + செவ்வாய் இணைவு ஜாதகருக்கு அவர் விஷயங்களில் குடும்பப் பெரியவர்கள் மற்றும் மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள் ஆகியோரின் தலையீடு காரணமாக மனப் படபடப்பு, மன உளைச்சல், மன அமைதியின்மை ஆகியவை ஏற்படும்.  
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + குரு இணைவு ஜாதகருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. சூரியன், குரு ஆகியோரின் கோசார நிலையில் ஜனன ஜாதக சந்திரனைத் தொடும் போது ஜாதகருக்கோ அல்லது அவர் மகனுக்கோ வேறு வெளி இடத்தில் கௌரவம், மரியாதை கிடைக்கும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + சுக்கிரன் இணைவு குடுப்பத்தில் பொருளாதார கஷ்டங்களுக்குக் காரணமாகிறது. தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பத்தின் செல்வநிலை அதிக அளவு விரயமாகும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + சனி இணைவு ஜாதகரின் பெற்றோர்கள் மற்றும் இரந்த உறவுகள் அவரின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கு குறுக்கே வருவதன் காரணமாக அவர் விருப்பத்துக்கு செயல்பட முடியாத நிலை ஏற்படும். சொந்த பந்தங்களே அவரின் முன்னேற்றங்களுக்குத் தடையாகும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + இராகு இணைவு ஜாதகரின் தந்தைக்கு மிகப் பெரிய கஷ்டங்களைக் கொடுக்கும். அந்த கஷ்டங்கள் சரியாக சுமார் 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம். இவை செயற்கையான வழிமுறைகளில் அவருக்கு அவரின் நண்பர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் ஏற்படுத்தும் கஷடங்கள் ஆகும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + கேது ஆகியோரின் இணைவு ஜாதகரின் குடும்பத்தாருக்கு விரக்தியான மனநிலையையும், பெரிய கஷ்டங்களையும் தரும். அதன் காரணமாக அவர்கள் தெய்வீக சிந்தனையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவர். ஆனால், இந்த வேண்டுதல்களினால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களில் இருந்து உடனடியாக விடுதலை கிடைக்காது. 
கோசார கிரகத்தின் மூலமாக நிகழ்வுகளின் பலன் காண கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்.
1.   தினமும் கோசார கிரக நிலைகளை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பாகை/கலைகளில் வருமாறு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2.   பலன் காண வருகின்ற ஜாதகரின் ஜாதகம் பஞ்சாங்க கணிதப்படி சரியாக கணிக்கப்பட்டுள்ளதா ? என உறுதி செய்து கொள்ளவேண்டும்.
3.   ஜாதகத்திலும், கோசாரத்திலும் வக்கிர கிரகங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
4.   ஜாதகத்திலும், கோசாரத்திலும் கிரகங்கள் பரிவர்த்தனை பெற்ற நிலைகளைக் கண்டு கொள்வதும் அவசியமாகிறது.
5.   ஒவ்வொரு கிரகங்களின்  காரகத்துவங்களை தனித் தனியாக மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
6.   ஜாதகத்திலுள்ள கிரகங்களின் பாகை அளவு நிலைகள் மற்றும் அந்த நிலைக்கு வர அவை எடுத்துக் கொள்ளும் கால அளவுகளையும் அறிந்து கொள்ளவேண்டும். மேலும், ஒரு இராசிக்கு பகை கிரகங்கள் வரும்/இருக்கும் கால அளவுகள் (நாள்/மாதம்/வருடம்) ஆகியவற்றையும் அறிய வேண்டும்.
         உதாரணமாக – ஜாதகத்தில் மகரம் 15° யில் செவ்வாய் இருக்க, கோசார சனி அந்த இராசிக்குள் நுழைந்து செவ்வாய் இருக்கும் 15° யைத்தொட 15 மாத கால அவகாசம் எடுக்கும். எனவே, இந்த 15 மாத காலத்தில் ஜாதகருக்கு வேலைகளில் பல தொந்திரவுகள், கஷ்டங்கள் ஏற்படும். அதுவே, சனி ஒரு சுப கிரகத்தைக் கடக்க நேர்ந்தால் ஜாதகருக்கு நல்ல பலன்களே நடக்கும் என பலன் காணவேண்டும்.
         மற்றுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஜாதகத்தில் சந்திரன் அஸ்வினி முதல் பாதத்தில் இருக்கும் போது, கோசார இராகு அதே பாதத்தைக் கடக்கும் போது, ஜாதகருக்கு மனக் குழப்பங்கள், மனோபயங்கள், மனதில் ஒரு துக்கம் ஆகியவை அந்தக் காலத்தில் ஏற்படும் என பலன் கூறவேண்டும். கோசார இராகு என்று அஸ்வினி நட்சத்திரத்தை தாண்டுகிறதோ அன்று முதல் ஜாதகருக்கு மனவலிமை, மனஅமைதி போன்ற அனுகூலமான பலன்கள் நடக்கும்.
7.        இதே போன்று இரு கோசார அசுபக் கிரகங்கள் பரஸ்பர பரிவர்த்தனை ஆகி ஒரு குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் போது, அதற்கு 7 ஆம் இடத்தில் கோசார சுக்கிரன், குரு ஆகிய சுபர்கள் கடக்கும் போது, அந்த அசுப கிரகங்களால் ஆபத்துக்கள் ஏற்படும்.
     உதாரணமாக – ஜனன ஜாதகத்தில் ஒர் இராசியில் செவ்வாய், சூரியன் இணைவு இருந்து,  கோசார இராகு  அதன் மேல் வர, கோசார குரு இந்த இராசிக்கு 7 ஆம் இடத்தைக் கடக்கும் போது ஜாதகருக்கு கடவுளின் அருளாலோ அல்லது நண்பர்களின் உதவியாலோ இதுநாள் வரை ஏற்பட்டிருந்த கவலைகளும், கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கிவிடும்.  
8.        இதே போன்று இரு ஒருவருக்கொருவர் பகையான கிரகங்கள் ஓர் இராசியில் இணைந்து அதில் ஒரு கிரகம் மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை ஆகி இருந்தால் அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்.


No comments:

Post a Comment