நாடியில் செல்வ நிலை
1. ஜனன ஜாதகத்தில் கீழ்கண்ட கிரக நிலைகள் காணப்பட்டால் ஜாதகர் நிகரற்ற
செல்வ நிலை அடைவார்.
அ. சூரியன் நல்ல பாவத்தில் உச்சம் பெற்று குரு பார்க்க.
அ.1 இலக்னாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து, தன அல்லது இலாப
பாவத்தில் நிற்கவும்.
ஆ. இலாபாதிபதியும், குருவும் இலக்னத்தில் இருந்து களத்திர பாவத்தில்
சந்திரன் இருக்கவும்.
ஆ.1. சுக்கிரன் முழு சக்தியுடன் களத்திர பாவாதிபதியைப் பார்க்கவும்.
இ. பூர்வ புண்யாதிபதியும்,
பாக்கியாதிபதியும் இணைந்து சுக பாவத்தில் இருந்து,
பாதிக்கப்படாத சூரியன் பார்க்கவும்.
இ. 1. பாதிப்பு அடையாத களத்திர பாவாதிபதியும், பாக்கியாதிபதியும்
இணைந்து 7 இல் இருந்து 11 ஆம் பாவாதிபதி பார்க்கவும்.
ஈ. பாக்கியாதிபதியும்,
சுக ஸ்தானாதிபதியும், சந்திரனோடு இணைந்து பாக்கிய
பாவத்தில் இருந்து குருவின் பார்வை பெறவும்.
ஈ. 1. சூரியனும், புதனும் இணைந்து பாக்யத்தில் இருந்து குருவின்
பார்வை பெறவும்.
உ. குரு
9 ஆம் இடத்திலும், 4 ஆம் அதிபதி இலக்னத்திலும், 10 மற்றும் 11 ஆம் பாவாதிபதிகள்
இணைந்து இருக்கவும்.
ஊ.
செவ்வாயும் குருவும் 4 இல் இருக்கவும், இடம் கொடுத்தவன் தனபாவத்தில் இருக்கவும்.
எ.
குரு, சுக்கிரனுடன் இலக்னாதிபதியும் இணைந்திருக்கவும்.
ஏ.
இலக்னாதிபதி, 4 ஆம் அதிபதி, சந்திரன் ஆகியோரின் இணைவும்.
ஐ.
தர்மாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருக்கவும்.
ஒ.
சுகாதிபதியும், சுக்கிரனும் இணைந்து தனபாவத்தில் இருக்கவும்.
ஓ.
சுகாதிபதியும், தனகாரகனும் இணைந்து இருக்கவும்.
ஔ. செவ்வாய்,
சுக்கிரன், சந்திரன் ஆகியோர் இணைந்து சுக பாவததில் இருக்கவும்.
ஔ. 1. இலக்னத்தில் குருவும், சந்திரனும், புதனும்
களத்திர பாவத்தில் இருக்கவும்.
11. மகர இலக்ன ஜாதகருக்கு, ஒளிக்கிரகங்களான சூரிய, சந்திரர்கள்
சுக்கிரனுடன் இணைந்து சிம்மத்தில் இருக்க இளமையில் அதிக சொத்துக்கள் இருந்து, அவரது
காமவெறியால் பல பெண்களைத் தொடர்புற்று அதன் காரணமாக அனைத்து செல்வங்களையும் இழப்பார்.
8 ஆம் இடத்தில் சந்திரன், சுக்கிரனின் இணைவு
ஜாதகருக்கு காம இன்பங்களைப் பெறும் உணர்வுகளைத் தூண்டும். அதன் காரணமாகத் தன் மனைவி
இல்லாத பிற பெண்களிடம் ரகசியமான உறவுகளை வைத்திருப்பார். சூரியனும் இணைந்தால் மேலும்
ஜாதகரின் கேடு கெட்ட குணங்களை அதிகரிக்கும். இம் மூன்று கிரகங்களும் சேர்ந்து, தனபாவமும்,
இரகசியங்களுக்கு உரிய இராசியுமான கும்ப இராசியைப் பார்க்கும் போது, ஜாதருக்கு அவரின்
இரகசிய உறவுகளால் செல்வ இழப்பைத் தருகிறது.
12 கர்ம காரகன், கர்மாதிபதியுடன் இணைந்து பூர்வ புண்யத்தில்
அல்லது தர்ம பாவத்தில் இருக்க ஜாதகர் பெரிய இல்லங்களை உடையவராய் இருப்பார். இலக்னதிபதி
4 இல் இருந்து சுக்கிரன் அல்லது குரு நல்ல நிலையில் இருந்தால் இதே பலனே ஏற்படும்.
13. பாக்கியாதிபதி, கர்மாதிபதி, தனாதிபதி ஆகியோர்
இணைந்து சுக பாவத்தில் இருந்து, சுகாதிபதியும் பலம் மிக்கவராக இருந்து 12 ஆம் இடமும்
காலியாக இருக்க ஜாதகர் செல்வப் பிரபுவாக விளங்குவார்.
14. குரு 3 ஆம் பாவத்திலும், சுக்கிரனும், 4 ஆம்
அதிபதியும் பரஸ்பர பார்வை புரிந்து கொள்ளும் நிலை ஜாதகருக்கு செல்வ நிலையை உயர்த்தும். ஆனால் அவர் பழைய வீட்டில்
வசிப்பார்.
2
ஆம் அதிபதி குரு 3 இல் இருந்து, 4 ஆம் அதிபதி சனி புராதன/ பழமையான வீட்டைக் குறிகாட்டுவதால்
இந்த நிலை விருச்சிக இலக்னத்துக்கு சரியாக வரும்.
15. குருவும்,
சந்திரனும் இணைந்து தனபாவத்தில் இருக்க 9 ஆம் அதிபதி பார்க்க ஜாதகருக்கு அரசு மரியாதைகள் கிடைத்து, செல்வமும்
சேரும்.
16. இராகு, குரு, சுக்கிரன் மற்றும் சந்திரனுக்கு
இடம் கொடுத்த கிரகங்கள் இலக்னம் அல்லது சந்திர கேந்திரங்களில் இருந்து 7 ஆம் அதிபதியும்,
11 ஆம் அதிபதியும் இணைந்து திரிகோணத்தில் இருக்க ஜாதகர் உயர்கல்வி கற்றவராகவும், செல்வந்தராகவும்,
நிறைய வேலைக்காரர்கள் உடையவராகவும், இவரைப் பின்பற்றி நடக்கும் கூட்டத்தையும் கொண்டவராகத்
திகழ்வார். இந்த நான்கு கிரகங்களுக்கு இடம் கொடுத்த கிரகங்களின் நிலையைப் பொருத்து
யோக பலன்கள் மாறுபடும்.
17. 1. குரு மற்றும் இலக்னாதிபதி இலக்னத்தில்
இருக்க அல்லது
2. புதனுக்கு 11 இல் குருவும், சுக்கிரனும்
இருக்க, அல்லது
3. சூரியன் தனபாவத்திலும், 12 ஆம் அதிபதி
5 ஆம் இடத்திலும் இருக்கவும் ஜாதகர் அவரின் தந்தையை விடவும் உயர்கல்வி கற்ற மேதையாகவும்,
பெரிய பணக்காரராகவும் விளங்குவார்.
18. 1. 5 ஆம் அதிபதி ஒரு கேந்திராதிபதியுடன்
இணைந்து தனபாவத்தில் இருக்கவும். அல்லது
2. குரு 9 ஆம் வீட்டில் இருந்து இராகு
ஒரு கேந்திரத்தில் இருக்கவும் அல்லது
3. ஒளிக் கிரகங்கள் பாக்கிய பாவத்தில்
இருக்கவும் ஜாதகர் வசதி மிக்கவராக இருப்பார்.
19. தர்ம கர்மாதிபதிகளுடன் சுக்கிரன் இணைந்து 10 இல்
இருக்க அல்லது 11 ஆம் அதிபதி இலக்னாதிபதியுடன்
இணைந்து தனபாவத்தில் இருக்கவும் ஜாதகருக்கு செல்வங்கள் வந்து குவிவதோடு வாழ்க்கைக்குத்
தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவார்.
20. சந்திர கேந்திரத்தில் தனபாவாதிபதி, பாக்கியாதிபதி,
இலாபாதிபதி இணைந்து இருக்க குரு பார்க்க ஜாதகர் அளவற்ற சொத்துக்களை அடைவார். இந்த மூன்று
கிரகங்களில் ஒன்று சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகர் பெரிய சொத்துக்களை உடையவராவார்.
இலக்னத்துக்கு தனபாவாதிபதி, பாக்கியாதிபதி,
இலாபாதிபதி இணைந்து சந்திர கேந்திரத்தில் இருந்து குருவும் பார்க்க ஜாதகர் அளவிட முடியாத
சொத்துக்களை உடையவராய் இருப்பார். உதாரணமாக – துலா லக்னம் 2 ஆம் அதிபதி செவ்வாய், பாக்கியாதிபதி
புதன், இலாபாதிபதி சூரியன் ஆகியோர் சந்திரனுக்குக் கேந்திரத்தில் இருத்து குருவின்
பார்வை பெற்றால் இந்த பலன்கள் அமையும்.
21. 2 இல் குரு இருந்து அவருக்கு இடம் கொடுத்தவர்
9 இல் இருக்க ஜாதகர் அளவிட முடியாத சொத்துக்களை உடையவராய் இருப்பார். உச்சம், ஆட்சி
அடையாத தனித்த குரு மட்டும் இரண்டில் இருந்தால் சொத்து சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.
22. தனபாவாதிபதியும், சந்திரனும் இணைந்து பஞ்சம பாவத்தில்
இருந்தால் மேற் சொன்ன பலன்களே நிகழும்.
23. கீழ்கண்ட இணைவுகள் ஜாதகர் அதிக சொத்துக்களுடன்
திகழ்ந்தாலும், விசன முள்ளவராகவும், உற்சாகம் அற்றவராகவும் ஆக்கிவிடும்.
அ). பஞ்சமாதிபதி ஆட்சி வீட்டில் இருந்து இலாபாதிபதி பாக்கிய பாவத்தில்
இருந்தாலும் அல்லது
ஆ) தனாதிபதியும், சுகாதிபதியும் பாக்கியத்தில் இருக்க, கர்மாதிபதி
தன பாவத்தில் இருக்கவும் அல்லது
இ) இலக்னாதிபதி கர்ம பாவத்திலும்,
தனாதிபதி உச்சம் பெற்றோ, அல்லது
பாக்கியத்தில் இருந்தாலோ – அல்லது
ஈ). பஞ்சமாதிபதியும், ரோகாதிபதியும்
பாக்கியத்தில் இருந்து, பாக்கியாதிபதி தனபாவத்தில் இருக்கவும் இந்த நிலை
ஏற்படும்.
24. இலக்னாதிபதியும்,
செவ்வாயும் தனாதிபதி மற்றும் கர்மாதிபதியுடன் இணைந்து தர்ம பாவத்தில் இருக்க ஜாதகருக்கு
அளவிட முடியாத சொத்துக்கள் சேரும்.
25. ரிஷப இலக்ன ஜாதகருக்கு மகரத்தில் சனி இருந்து
புதன் உச்சம் அடைய மேற்சொன்ன பலனை ஏற்படும்.
9 இல் சனி, புதன் 5 இல் இருந்தால் மேற்
சொன்ன பலனுடன், 5, 9 ஆம் பாவங்கள் புத்திர பாக்கியத்திற்கு தொடர்புள்ள பாவங்கள் ஆதலால்
ஜாதகருக்கு இரட்டைக் குழந்தைகளைத் தரும். அதுபோல் புதனும், சனியும் இரட்டைப் பிறவிகளைக்
குறிக்கும்.
26. குரு 4 ஆம் இடத்திலும், சுக்கிரன் 5 ஆம் இடத்திலும்
செவ்வாய் 7 ஆம் இடத்திலும் இருக்க அல்லது இலக்னத்தை சந்திரன் பார்க்க ஜாதகருக்கு மதிப்பு
மரியாதை, கௌரவம் உயர்வதோடு சொத்துக்களும் சேரும்.
கல்வி, வாகனங்கள்.
27. பாக்கியாதிபதி பூர்வ புண்ணிய
ஸ்தானத்தில் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஜாதகருக்கு பல நவீனமான, ஆடம்பரமான வாகனங்கள்
அமையும்.
28. இலாபாதிபதியுடன் இணைந்த வளர்பிறை சந்திரன் தனபாவத்தில்
அமர ஜாதகருக்கு பல நவீனமான, ஆடம்பரமான வாகனங்கள் அமையும்.
29. இலக்னாதிபதி திரிகோணம் ஏறி, தைரிய, சுக பாவாதிபதிகள்
கர்ம பாவத்தில் இணைந்து இருக்க ஜாதகருக்கு சொத்துக்கள் சேரும். தொழில் வெற்றியும் ஏற்படும்.
30. பாக்கியாதிபதி இலாபத்திலும், இலாபாதிபதி தனபாவத்திலும்
இருந்து இவர்களில் எவரேனும் ஒருவர் இலக்னத்தைப் பார்க்க ஜாதகருக்கு மேற் சொன்ன பலன்களே
ஏற்படும்.
31. குருவும், சந்திரனும் இணைந்து 7 ஆம் இடத்திலும்,
செவ்வாய் விரய பாவத்திலும் இருந்து சூரியனால் பார்க்கப்பட ஜாதகர் அளவற்ற சொத்துக்களுடன்,
அதிகம் கற்றவராகவும் விளங்குவார்.
32. 5 இல் குருவும், 7 இல் புதனும், 11 இல் சந்திரனும்
அமர ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
33. சனி துலாத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருந்து, சுக்கிரனால்
பார்க்கப்பட ஜாதகர் பெரிய செல்வந்தராகவும், உயர் பதவிகளை அடைபவராகவும் திகழ்வார்.
34. குருவும், புதனும் இலக்னத்தில் இருந்து, அவர்களில்
ஒருவர் உச்சம் பெற்று, பஞ்சமாதிபதி 5 ஆம் இடத்திலோ அல்லது 9 ஆம் இடத்திலோ இருக்க மேற்
சொன்ன பலன்களே ஏற்படும்.
35. பாக்கியாதிபதி தைரிய பாவம்
ஏறி குருவால் பார்க்கப்பட அல்லது பாக்கியாதிபதியுடன் சுக்கிரன் இணைந்து இலாபத்தில்
இருக்கவும், ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
36. குரு இலக்னத்திலும், புதனும், தனபாவதிபதியும் இணைந்து
கேந்திர பாவத்தில் இருக்கவும் ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும்
விளங்குவார்.
37. ஒருவர் தன்னிகரில்லாத தனத்துடன் விளங்குவது எப்போது
? –
அ). இலக்னாதிபதி, 3 ஆம் அதிபதி, குரு ஆகிய
மூவரும் உச்சம் பெற அல்லது
ஆ). இலக்னாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து
திரிகோணத்தில் இருந்து சனியால் பார்க்கப்பட
அல்லது
இ). இலக்னாதிபதி உச்சம் பெற்று, அவருக்கு இடம்
கொடுத்தவர் திரிகோணம் ஏறவும் அளவற்ற செல்வந்தராக இருப்பார்.
38. 2, 3, 11 ஆம் அதிபதிகள் இணைந்து 9 இல் இருந்து
5 ஆம் அதிபதியால் பார்க்கப்பட இந்த யோகம் ஜாதகருக்கு அவரின் தந்தையைவிட இணையற்ற செல்வத்தையும்,
சந்தோஷத்தையும், வாகனங்களையும், புகழையும் வாரி வழங்கும்.
39. 2, 9 ஆம் அதிபதிகள் இணைந்து
கேத்திரத்தில் இருந்து இலக்னாதிபதியால் பார்க்கப்பட ஜாதகருக்கு ஆரம்ப காலத்தில் சொத்துக்கள்
இல்லை என்றாலும் பிற்காலத்தில் செல்வம் சேரும்.
40. இலக்னம், தன, இலாப பாவதிபதிகள் எவ்விதத்திலேனும்
கேந்திர / திரிகோணங்களில் இடம் பெற ஜாதகர் செல்வ நிலைகளை சந்தோஷமாக அனுபவிப்பார்.
41. இலாபாதிபதி தனபாவத்திலும், தனபாவாதிபதி, பாக்கிய
பாவாதிபதியுடன் இணைந்து பாக்கியத்திலும் இருக்க ஜாதகருக்கு தந்தைவழி சொத்துகள் சேர்வதோடு,
சுயமுயற்சியாலும், அதிர்ஷ்டத்தாலும் கிடைக்கக் கூடிய சொத்துக்களும் சேரும்.
42. செவ்வாய் 9 இல் இருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால்
ஜாதகருக்கு சொத்து விவகாரங்களில் வழக்கு ஏற்பட்டு இறுதியில் வெற்றியைத் தழுவுவார்.
43. 2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து 9 இல் இருந்து
குருவால் பார்க்கப்பட அளவற்ற செல்வம் பெருகும். குருவின் பார்வை இல்லாமல் 6 ஆம் அதிபதியின்
பார்வை பெற தந்தைவழி சொத்துக்களை அடைய உடன் பிறப்புக்களுக்குள் வழக்கு விவகாரங்களை
சந்திக்க நேரும்.
44. 2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் இலக்ன பாவத்தில் இருந்து,
4 ஆம் அதிபதி பாக்கிய பாவத்தில் இருந்தால் ஜாதகர் மண்ணில் உதித்த நாள் முதல் செல்வச்
செழிப்போடு வாழ்வார்.
45. 2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் திரிக்கோண பாவத்தில்
இணைந்து இருக்க ஜாதகர் ஒழுக்கமான வழிகளில் சம்பாதித்து செல்வம் சேர்ப்பார்.
ஏழ்மை நிலை
46. 2 மற்றும் 6 ஆம் அதிபதிகள் தங்கள் நீச பாவத்தில்
அமர்ந்து, அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ அசுபரால் பார்க்கப்பட ஜாதகருக்கு மகிழ்ச்சியற்ற
மணவாழ்க்கை அமைவதோடு, திருப்தியற்ற குடும்ப முன்னேற்றமும், ஏழ்மையால் மிகுந்த இன்னல்களையும்
அனுபவிப்பார்.
மேஷ இலக்னத்திற்கு சுக்கிரனும், புதனும்
2 மற்றும் 6 ஆம் வீட்டுக்கு உரியவர்கள் ஆகிறார்கள், அவர்கள் இருவரும் ஒருசேர நீசம்
ஆக முடியாது எனவே, இந்த இரு இலக்னங்களுக்கு இந்த யோகம் சாத்தியம் இல்லை.
47. ஒளிக் கிரகங்கள் 2 இல் இருந்து அவர்களுக்கு
இடம் கொடுத்தவன் 6 ஆம் வீட்டிலும், குரு 12 ஆம் வீட்டிலும் இடம் பெற்றால் ஜாதகர் அனைத்தையும்
இழந்து, மீழமுடியாத துயரத்தில் ஆள நேரிடும்.
48. 6 ஆம் அதிபதி உச்சம் பெற்று, 2 ஆம் அதிபதி
பலம் இழந்த நிலையில் விரய பாவத்தில் அமர்ந்து அசுப தாக்கமும் பெற ஜாதகர் தொழில், வேலைகளில்
மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்படுவார்.
பொதுவாக 6 ஆம் பாவம் ஜாதகர் ஒருவருக்கு கீழ்
வேலை செய்வதை குறிகாட்டுகிறது. 2 ஆம் அதிபதி 12 இல் இருந்தால் 6 ஆம் வீட்டைப் பார்ப்பார்.
6 ஆம் அதிபதி உச்சம் பெறும் இந்த யோகத்தில் பாதக நிலையே ஏற்படும். இந்த யோகத்தில் அவர்
சுதந்திரமாக உச்சமானால் சாதக நிலை ஏற்படும்.
பலம் இழந்த 6 ஆம் அதிபதியின் மீதான 2 ஆம் அதிபதியின் தாக்கம் கஷ்டங்களைக் குறைக்கும்.
மேஷ இலக்னத்திற்கு இந்த யோகம் வராது.
49. இலக்னாதிபதி
மற்றும் விரயாதிபதி, இராகுவுடன் இணைந்து விரய பாவத்தில் சுபர் தொடர்பு இன்றி இருந்தால்
ஜாதகருக்கு சொத்துக்கள் சேராது. இந்த யோகம் பிறப்பு முதலே பல தனயோகங்களை பலம் இழக்கச்
செய்துவிடுகிறது.
50. 2 ஆம் அதிபதியும்
சந்திரனும் இணைந்து செவ்வாய் திரிகோணத்தில் அமர்ந்து, இலக்னாதிபதி பலமிழந்து 8 ஆம்
அதிபதியுடன் இணைய ஜாதகருக்கு தன உடலை மறைத்து உடுக்க ஒரு பிட் துணியும் இருக்காது.
51. இலக்னத்தில் இருந்து 2 ஆம் அதிபதியும், சந்திரா இலக்னத்தில்
இருந்து 2, 6, 12 ஆம் அதிபதிகள் ஆகிய 4 கிரகங்கள் இலக்னத்துக்கு 6 ஆம் இடத்தில் இடம்பெற ஜாதகருக்கு முற்றுப் பெறாத கஷ்டங்களும், கவலைகளும்
இருப்பதோடு, அவரை இழிவான ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிடும்.
52. மறைவு ஸ்தானங்களான
6, 8, 12 இல் அனைத்து சுப கிரகங்களும் இருக்கவும் அசுப கிரகங்கள் கேந்திர / கோணங்கள்
மற்றும் தன பாவத்தில் இடம் பெற ஜாதகரின் ஏழ்மை நிலைக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது.
எனினும் யோக காரர்களான அசுபர்கள் 3, 10. 11 இல் இடம்பெற இந்த ஏழ்மை நிலையின் தாக்கம்
குறைந்து ஓரளவு சொத்துக்கள் சேரும்.
No comments:
Post a Comment