Monday, May 14, 2018

நாடியில் ஜாதக ஆய்வு


நாடியில் ஜாதக ஆய்வு




ஜாதகம் – 5



சுக்
சூரி,புத

உ. ஜா. 5
செவ்



சந், குரு



         இந்த ஜாதகத்தில் (5) கடகத்தில் நீச செவ்வாய் உள்ளார். அவர் விருச்சிகத்திலுள் சந்திரனோடு பரிவர்த்தனை பெறுகிறார். எனவே, தனது சுய வீட்டில், தெய்வீக குருவுடன் இணைந்துள்ளார். இந்த புனித ஆசிரியர் குருவின் தொடர்பால் செவ்வாயும் முருகனின் தெய்வ காடாக்ஷம் பெற்று விருச்சிகத்தில்  “கார்த்திகேய குரு” ஆகிறார். இந்த வித்தியாசமான குரு, செவ்வாய் இணைவு பரிவர்த்தனையால் (சந்,செவ்) ஏற்பட்டதன் விழைவாக ஜாதகருக்கு நம்பத்தாகாத குணமுள்ள கீழ்த்தரமான மக்களின் ஒத்துழைப்போடு சமூகத்தில் மதிப்பு மிக்க, கொரவமான நிலையை அடைகிறார்.
    ஜாதகம் – 6


செவ்

சனி

உ. ஜா. 6
குரு, சூரி
இராகு
கேது
லக்//
புத,சுக்

சந்



         ஜாதகம் 6 – ஒரு மகர இலக்கின, பெண்ணின் ஜாதகம். பாகை வரிசையில் கிரகங்களை இலக்னத்தில் இருந்து கேது+ செவ்+ சனி+ குரு+ சூரி+ இராகு+ புத+ சுக்+ சந் என வரிசைப் படுத்தலாம். உச்ச குரு ஆத்மகாரகன் சூரியனுடன் இணைந்திருப்பது ஒரு விசேஷமான இணைவாகும். ஆனால் இங்கு உள்ள மறைமுக ஆபத்து இராகுவின் இணைவு ஆகும். இராகுவின் வக்கிர நகர்வால் முதலில் சூரியனும் பிறகு குருவும் அதன் பிடியில் வருகிறது. எனவே, இவ்விரு கிரகங்களும் அதன் பலத்தை இழக்கின்றன.  இந்த சூரியன், குரு இணைவு ஜாதகரின் தந்தை இறைவனை சிந்திக்க வைக்கும். இந்த இரு கிரகங்களின் இராகுவுடனான அருகாமை தந்தையின் ஆயுள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர் குறைந்த வயதிலேயே இறந்துவிட்டார். இது பெண்ணின் ஜாதகமாதலால் ஜீவன் காரகன் சுக்கிரன் ஆவான். எனவே, ஜாதகி தன் கணவனை (செவ்வாய்) சந்திப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.
         இப்போது சுக்கிரன் + நீச சந்திரன் + மோட்ச காரகன் கேது ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு மேஷத்தில் உள்ள செவ்வாய் கணவனைக் குறிகாட்டுபவர். இவருக்கு 2, 12, 7 இல் கிரகங்கள் இல்லை. எனவே அவள் ஒரு சன்யாச அல்லது துறவு வாழ்க்கை வாழ வேண்டியதாயிற்று. மேலும் சகோதர குறிகாட்டி செவ்வாய், இராகு-கேதுவால் அமைந்த அரை வட்டத்துக்கு வெளியே இருப்பதால் ஜாதகியுடைய சகோதரன் தூர தேசத்தில் இருக்கிறான். செவ்வாய்க்கு 5 இல் சுக்கிரன் இருக்கிறார். இந்த இடமே பூர்வ புண்ணியத்தால் பெற்ற தகுதியை, யோக்கியதையைக் குறிக்கும். இது ஒரு அனுகூலமான நிலையாகும். ஆனால், சுக்கிரன், செவ்வாய், புதன் என்கிற இரு தீவிர எதிரிகளோடு இருப்பதால் அவை மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்தின. கணவன் காரகன் செவ்வாய் பலம் இழந்து காணப்படுவதால் ஜாதகிக்கு 50 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை.
         இங்கு வாழ்க்கையை குறிகாட்டும் கிரகங்கள் குருவும், சுக்கிரனும் ஆகும். குரு ஆண் ஜாதகருக்கு வாழ்க்கை குறிகாட்டி, ஆனால் பெண்ணுக்கு சுக்கிரன் வாழ்க்கை குறிகாட்டி ஆவான். இங்கு படைத்தவனால் படைக்கப்பட்ட ஆணுப் பெண்ணும் ஒன்றுதானே ? – என்ற கேள்வி எழலாம். பண்டைய இந்து புராணக் கதைகளின்படி ஒரே மாதிரியான தெய்வீகப் படைப்பின் மீது இருவேறு மாறுபட்ட பார்வைகள் உள்ளன. ஒன்றன் பெயர் இயற்கை எனும் பிரபஞ்ச பெண் மூலம் மற்றொன்று  புருஷன் எனும்  பிரபஞ்ச ஆண் மூலம் ஆகும். இந்த மூலகங்கள் இரண்டின் இணைவே இந்த மேதினியில் வாழ்க்கையின் நீடித்தலுக்கு பொறுப்பாகின்றன. பிரபஞ்சத்தில் காக்கும் கடவுளின் படைப்பில், பார்வையில் இரண்டுப் ஒன்றாகினும், இங்கு சுக்கிரன் பெண்ணின் வாழ்க்கையையும், குரு ஆணின் வாழ்க்கையையும் குறிகாட்டுகின்றன. இந்து கைரேகைக் கலையில் மூக்கால் சுவாசிக்கும் ஜீவன் காரகன் குரு. உடற்கூறில் மூக்கைக் குறிப்பவன் குரு ஆவான். இந்தியப் பெண்களின் மூக்கில் அணிகின்ற வைரமூக்குத்தியில் வைரத்தைக் குறிப்பவன் சுக்கிரன் ஆவான்.
ஜாதகம் - 7
   
சுக்(வ)
புத

சூரி,
செவ்
குரு
சந்


உ. ஜா. 7
கேது
இராகு
லக்//



சனி(வ)


        சுக்கிரன், சூரியன், சந்திரன், மற்றும் சனி ஆகிய 4 கிரகங்கள் உச்சம் பெற்ற மகர இலக்ன ஜாதகியின் ஜாதகம். ஆனால் இவரது வாழ்க்கை அமைதியற்ற, சந்தோஷமற்ற வாழ்க்கையானது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், இரண்டு கணவன்மார்களின் இறப்பு, மூன்று திருமணங்கள், கடைசியில் அவளது வாழ்க்கையின் முடிவு என இலக்னத்தில் இருந்து கிரகங்களை பாகை முறையில் வரிசைப்படுத்தி பார்க்கலாம்.   இராகு+ புதன்+ சுக்கிரன்+ சூரியன்+ செவ்வாய்+ குரு+ சந்திரன்+ கேது+ சனி என்ற வரிசையில் வருகிறது. இங்கு சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும், பகை கிரகமான சனி 7 இல் உள்ளார். சனியின் பரம எதிரி செவ்வாய், சூரியனுடன் உள்ளார். இது ஜாதகியின் தந்தை உணர்ச்சி வசப்படுபவர். பகைவர்களால் அதிக தொல்லைகளை அனுபவிப்பவர்.
         ஜாதகியின் வாழ்க்கையைக் குறிகாட்டும் உச்ச, வக்ர, சுக்கிரன், தனது நெருங்கிய நண்பரான நீச புதனை பின் பார்வையால் நோக்குகிறார். ஏனெனில் வக்ர சுக்கிரன் மீனத்தில் புதனுக்கு அடுத்து இருப்பதே ஆகும். அவருடையே நண்பரே அவருக்குக் கணவரானார் என்பதை இது குறிகாட்டுகிறது. சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை. பரிவர்தனையால் சுக்கிரன் ரிஷபத்துக்கும், குரு தனது சுய வீடான மீனத்துக்கு வருவதால் சுக்கிரனின் வக்ர பின் பார்வையால் செவ்வாய், சூரியன் பார்க்கப்படுகிறார்கள். இது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை குறிகாட்டுகிறது.  ஆனால், சுக்கிரன் ரிஷபத்தில் இணைந்துள்ளது அதன் சக்தியைக் குறைக்கிறது. ஆகையால், கௌரவம் (உச்ச சூரியன்) மிக்க குடும்பத்தில் அழகிய இளமையான இளைஞனை மணந்து கொண்டாள். ஆனால் பலமிழந்த செவ்வாயால் (கணவன்) அந்த இளைஞன் இறந்தான்.
         மேஷத்துக்கு அடுத்த ரிஷப 2 ஆம் வீட்டில் சுக்கிரன். ஆணின் விந்து, பெண்ணின் சுரோனிதம் மிக அருகில் இருப்பது போல் உச்ச சூரியன், செவ்வாய் மேஷத்தில் இருக்கின்றனர். எனவே, இவள் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்கிறாள், முடிவாக மரணம் எய்துகிறாள்.
         குருவிடம் சிஷ்யனின் கேள்வி- குருவே ! எங்ஙனம் இப் பெண் நீதிமன்றம் மூலமாக இரண்டு கணவர்களிடம் இருந்து தொடர்ந்து விவாகரத்து பெற்றாள்.        
        குரு – மீன இராசி வடக்கு திசை, கடகமும் வடக்கு திசையே குறிக்கிறது. எனவே, கேது (வழக்கு விவகாரங்கள், சட்ட நுணுக்கங்கள்) சுக்கிரனுக்கும் புதனுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார். இதுவே முதல் விவாகரத்துக்குக்கான காரணம். பின்னர் குரு மீனத்துக்கு சுக்கிரனுடனான பரிவர்த்தனையில் வருகிறார். மேலே சொன்னபடி பிரிவினைக் கிரகமான கேது (வழக்கு விவகாரங்கள், சட்ட நுணுக்கங்கள்) சுக்கிரன், குருவுக்கு  நடுவே வந்ததால் இரண்டாவது முறையும் விவாகரத்து கிடைத்தது.
         மேலும், ஜாதகி தந்தைக்குப் பின் என்பதை குறிகாட்டும் மேஷத்திலுள்ள சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் கேது ஆகியவை அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் காதலைக் குறிகாட்டுகிறது. அவளது ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், கேது இணைவு அவளுக்கு, தந்தையுடனான நிலம் (புதன்) மற்றும் சொத்துப் (சுக்கிரன்) பிரச்சனைகளில் வழக்கு விவகாரங்கள் நடப்பதைக் குறிகாட்டுகிறது. மேலும் சுக்கிரன் தனது வக்கிர நிலையால் 2 ஆம் இடத்துக்கு தனது பரிவர்த்தனையால் வருகிறது. ( மேஷத்தில் சூரியனுக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் ) ரிஷபத்திலுள்ள குருவுடனான பரிவர்த்தனை (கோர்ட் மற்றும் நீதிபதியைக் குறிக்கிறது) அவளுடைய தந்தை (சூரியன்) மாமா (செவ்வாய்) ஒரு வீட்டையும், கொஞ்சம் பணத்தையும் வழக்கு மூலமாக அடைந்தனர்.
        இதன் மூலமாக அறிவது, முதலில் கிரகங்களின் உச்ச நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
        முன்னர் கொடுக்கப்பட்ட விதிகளில் 2 மற்றும் 3 ஆம் விதிகளுக்கான உதாரணங்கள் -  
இராகு+சூரியன்+சனி = தந்தைக்கு மற்றும் மகனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் மற்றும்                       தடைகள்.
கேது+சனி+செவ்வாய் = தொழில்/வேலை தடுமாற்றம்/பாதியிலேயே தடைபடுதல்.
இராகு+சந்திரன்+செவ்வாய் = மன மயக்கம், மருட்சி மற்றும் குறுகிய                                   மனப்பான்மை.
சூரியன்+சுக்கிரன்+கேது = புத்திர பாக்கியம் அமைவதில் பிரச்சனை மற்றும்                                    பொருளாதார நஷ்டம்.
கேது+சனி+சந்திரன் =  பணியிடத்தில் கெட்ட பெயர் எடுத்தல்.
கேது+சந்திரன்+சனி =  பணியிடத்தில் மன அமைதியின்மை.
சூரியன்+சனி+செவ்வாய் = பணியிடத்தில் எதிரிகளால் துன்பம், தொல்லை,                                    கொடுமைகளுக்கு ஆளாதல்.
சுக்கிரன்+கேது+புதன் = சொத்துகள், பூமி, பணம், மனைவி மற்றும் காதல்                               ஆகிவற்றால் வழக்கு விவகாரங்கள்.
         இப்படியாக ஒரு கிரகத்துக்கு 12 அல்லது 2 இல் பகை கிரகம் இடம்பெற அல்லது ஒரு பகை கிரகம் இரு நட்பு கிரகங்களுக்கு இடையே இருக்க நற்பலன்கள் ரத்தாகும்/இல்லாமல் போகும்.
         4 ஆம் விதிக்கான விளக்கம் குருவும், வக்ர சுக்கிரனும் கிரக பரிவர்த்தனை பற்றிய விளக்கம் முந்தைய ஜாதகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment