Wednesday, December 24, 2014

தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ




தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?

   விம்சோத்ரி தசாமுறையில் விரியும் கிரக வரிசை ;கேது – 7 வருடம்சுக்கிரன் – 20, சூரியன் – 6,சந்திரன் -- 10, செவ்வாய் – 7, இராகு – 18, குரு – 16, சனி – 19, புதன் – 17 வருடங்கள் என்பதை நாம் அறிவோம்.

    இவை ஏன்இந்த முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன ? – என்ற சிந்தனை மற்றும் கேள்வி பல ஆண்டுகளாய்ப் பலர் மனதில் உள்ளனஇந்த தசாவரிசையில் செயல்படுவதில்பல புதிதான பொருத்தங்கள் உள்ளனஇந்த தசாமுறையானது மனித வாழ்க்கைக்கு மிகுந்த சீரான முறையாக மற்றும் நுண்ணிய முறையாகப் பார்க்கப்படவேண்டும்.

    கேது – கடவுளுக்கு அருகே நம்மை அழைத்துச்செல்லும் கிரகமாகும்எனவே கேது தசாவில் ஆரம்பமாவது சரிதானே ? அதாவது எங்கே ? – ஆன்மா உடலில் வேர்விட்டிராத காலத்தில் அதை நாம் கண்காணித்துக் கொண்டிருக்கிற மிகச் சிறிய குழந்தைப் பருவம் அதுகேது தசாக் காலத்தில்தான் நாம் நமக்குத் தேவையானது எது ? தேவையற்றது எது ? – என்பதை உணர்கிறோம்சிறு குழந்தையாக,நமக்குத் தேவைசிறிது சுவாசமும்சிறுதளவு உணவும் ஆகும்அதுவும் திடவுணவாக அன்றிதிரவ உணவே போதுமானதாகும்இக்குழந்தைப் பருவம் 0 – 1 வருடமாகும்.

    சுக்கிரதசா ;- இச் சிறு குழந்தை போஷிக்கப்பட வேண்டிய காலமாகும்எனவேபோஷிப்பாளரான சுக்கிரன் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறாள்குழந்தைக்குத் தேவையான கொழுப்புச் சத்தைக் குழந்தைக்குத் தருபவள் அவளேநாம் இந்த பூமியில் ஒருவருக்கொருவர் மனதளவில் புரிந்து கொண்டும்அனுசரணையாக வாழ்வதற்காக ஏற்பட்ட நீண்டதொரு தசாக்காலம் சுக்கிரனின் 

தசாக்காலமாகும்இந்த உடலுக்குத்தேவையானது நல்ல கவனிப்பும்உபசரிப்புமாகும்நமதுமனம் மற்றும் உடலைப்பற்றி நாம் அறியும் சக்தியை உருவாக்கித்தருவது இந்த தசாக் காலமேயாகும்சுக்கிர தசாக்காலமே நமது வாழ்க்கையின் முக்கியக் காலங்களில் ஒன்றாகும்இக் காலமானது 1 முதல் 3வயதினைக் குறிப்பதாகும்.

    சூரிய தசா ;- பிறரின்  உதவியின்றி நாம் நமது சுய அடையாளத்தை வெளிப்படுத்திஅவனுடைய பிரகாசமான ஒளியைப் பெற்றுஒளிரத் தயாராகும் உன்னதக் காலமாகும்ஆரோக்கியமான சுயஅறிவை,இந்த சுயநலம் அனுமதிப்பதோடுஒரு ஆரோக்கியமான சுய கர்வத்தால்நமது எல்லையைப் பிறர் தாண்டிச் செல்லாவண்ணம் பார்த்துக் கொள்ளும் அளவற்ற சக்தியை அவன் நமக்கு அளித்திருப்பதாக உணர்கிறோம்அதேபோல் நாமும் மற்றவர்களின் எல்லையைத் தாண்டி ஓட முற்படுவதில்லைஇந்த வயதானது 4 முதல் 12 வரையாலானதாகும்.

    சந்திர தசா ;- இக்காலத்தில் நாம் பெரும் சுய அனுபவங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள வழியில்,பிறரோடு பகிர்ந்துகொண்டு வாழும் இனிய வாழ்க்கைக்குத் தேவையான தசாக் காலமாகும்நாம் நம்மை மற்றவர் கண்களின் பிரதிபலிப்பாகக் கொண்டுஅவர்களின் அனுபவங்கள்இச்சமூகத்தில் நமக்கே மீண்டும் பிரதிபலிப்பதாகக் கருதிஅதன் மூலமாகப் புதியனவற்றைக் கற்றுக் கொள்ள முற்படவேண்டும்.ஏனெனில் நாம் மட்டுமே ஓளிர வேண்டும்முன்னேற வேண்டும் என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாதுஇந்த சந்திர தசையில் நாம் கவர்ச்சி மிக்க இளைஞனாகஉணர்வுபூர்வமாக வலம்வருகிறோம்இக்காலம் 13 முதல் 19 வயதுவரையாகும்.

     செவ்வாய் தசா;- இந்த தசையில்இவ்வுலகில் எப்போது நாம் மற்றவர்களோடு போட்டிபோடக் கற்றுக் கொள்வதோடுஅவர்களை எதிரிகளாக்கிக் கொள்வதைவிடநண்பர்களாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்பல முடிவுகள் நிறைந்த இவ்வுலகில்செவ்வாயின் கூடிவாழும் குணம் மற்றும் கடினமான சக்தியின் மூலமாகவும்தைரியத்தின் மூலமாகவும்ஒழுக்கமான செயல்களாலும் நமது கொள்கைகளைச் சோதிக்கவேண்டும்இந்த வயதானது 20 முதல் 27 ஆண்டு வரையாகும்.

இராகு தசா ;- இராகு தசாக்காலத்தில் நமது உலக வாழ்க்கையும்அதில் நாம் நிலைந்திருத்தலையும் காட்டுகிறதுநமக்குள் இருந்துகுதூகலிக்கும் இளமையோடுஇந்த உலக மாயையில் சிக்கித் தவிக்கிறோம்திருமணம்குழந்தைகள்தொழில் மற்றும் அதன் மூலமாக ஞானத்தைஆன்மாவில் மறைத்துவைக்கும் கலையையும் இராகு தசாவில் கற்றுத் தெளிகிறோம்.

     குரு தசா ;- பேராசை குணங்களால் நம்மை ஓடவைத்த இராகு தசாவைத் தாண்டிகுரு தசை வரும் போதுநாம் நம் முன்னோர்களின் பாண்டித்யங்கள் அனைத்தையும்  திரும்பப் பெறமுடியும்.இக்காலத்தில்தான் நமது மனபாரங்கள் அனைத்தும் குறைந்ததாக உணர்கிறோம் அல்லது மீண்டும் நம் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக உணர்கிறோம்குருநமக்கு உள்ளொளிமனமுதிர்ச்சி மற்றும் வாழ்வியல் பாடங்களை அளிக்க வருகிறார்அவர் குருவாதலால்நம் பாண்டித்தியங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளமுடியும்இதற்குச் சம்மான மனித வாழ்வு 40 முதல் 55 வயது வரையானதாகும்.

     சனி தசா ;- நமக்குள்ள எல்லைகளை நாம் சனி திசையில்தான் உணர்ந்து கொள்கிறோம்குரு தசாவில் குதூகலமாகஉற்சாகமாக உலவிய நாம்சனியால் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு,உண்மையின் முன் நிறுத்தப்படுகிறோம்உண்மை நிலை என்பதுகுருவின் ‘ எல்லாம் நன்மைக்கே என்ற நிலையல்ல’ இது சனியின் குளிர்ச்சியுடன் கூடிய கடுமையான உண்மை நிலையாகும்அவன்,நமது உடலின் தற்காலிக குணங்கொண்டஇயற்கையான வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கூறுகிறான்தனிமையில்நமது கர்மவினைகளை மேற்கொள்ளநமக்கு நேரத்தை அளிக்கிறான் சனி.இக்காலம் 55 வயது முதல் 65 வயதுவரையானதாகும்.

     புதன் தசா ;- இந்த தசையில் நாம் மீண்டும் குழந்தைகளாக மாறிவிடுக்கிறோம்விளையாட்டுத் தனம், நியாயமற்ற தன்மை என்பது அறிவு வளர்ச்சி, ஆணித்தரமான சிந்தனை, ஆகியவற்றினாலன்றி அறியாமையால் வருவதல்ல. சனி கொடுத்த உண்மையான பழுவை இறக்கி, நம் மனம் சுத்தமாகவும்,திறந்த நிலையிலும், எதையும் பகுத்துணர ஞானயோகம் பெறுகிறது. இதன் வயது 65 வயதுக்கு மேல் உள்ள காலமாகும்.
      இவ்வாறு தசா மாற்றங்கள் ஏற்படும் போதுதசாசந்தியில் ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றனஎனவேஇதன் காரணமாக தசா மாற்றத்தின் போது ஒரே இரவில் ஒருவரின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றனஇந்தப் பூர்ண மாற்றங்களுக்கு முன் நாம் நம்மைத் தயார்ப்படுத்தி கொள்ளும் நேரமாகதசாவின் கடைசிப் புத்தி கொடுக்கப்பட்டுள்ளது.அந்த புத்தியின் சக்தியானது அடுத்த தசாவில் ஏற்படும் நிகழ்வுகளைத் தாங்கும் சக்தியாக அமைந்துவிடுகிறது.

   கேது தசாவின் கடைசிப்புத்திபுதன் புத்தியாகும்புதன் ஒரு கட்டுமான நிபுணனாவார்அவர் உணர்ச்சி பூர்வமான உலகவாழ்க்கையில் மாற்றங்களை விரும்புபவர்அவர் வேறு உலகக் கேதுவுடன்,இவ்வுலக சுக்கிரனுக்குப் பாலமாக இணைக்க உதவுகிறார்இவ்வாறாக புதன் புத்திசுக்கிரன் புத்திக்குள் நுழைய ஒருவரின் மனதைத் தயார்ப்படுத்துகிறது.

    சுக்கிர தசாவின் கடைசி புத்தி கேது புத்தியாகும்கேது புத்தி ஒருவர் மனதைக் குழப்பிக் கஷ்டப்படவைத்துசூரியதசாவை வரவேற்கத் தயார்ப்படுத்துகிறது. 20 வருட சுக்கிர தசாவிற்குப் பிறகு,அதன் கடைசிப் பதினான்கு மாதக் கேது புத்தி நமக்குத் தேவையில்லாதவற்றை நம்மிடமிருந்து ஒதுக்கிவிடுகிறது.

    சூரியதசாவின் கடைசிப் புத்தி சுக்கிர புத்தியாகும்சுக்கிர புத்திசந்திர தசா மாற்றத்துக்கு நம் மனதைத் தயார்படுத்துகிறதுசந்திரன் எங்கிருக்கிறானோ அங்கே நாம் உலகத் தொடர்பையும்,சந்தோஷத்தையும் நம் குடும்பம் மற்றும் மக்கள் மூலமாக அடைய முற்படுகிறோம்சூரியதசாவில் ஆன்மாவைத் தொடரும் ஆவலுடையவர்களாக நாம் இருப்போம்.

சந்திர தசாவின் கடைசிப் புத்தி சூரிய புத்தியாகும்சூரியபுத்தியானது அடுத்து வரப்போகிற,செவ்வாய் தசாவிற்கு நம் மனதைத் தயார்ப்படுத்தி அழைத்துச் செல்லுகிறதுஏனெனில் சூரியனைப் போன்றே சந்திரனும் சுதந்திரமானவர்செவ்வாய் தசாக்காலத்தில் நாம் நமது உலக சக்தி மற்றும் தைரியத்தை நாடுவோம்அதற்கு சூரியன் நமது மனதில் நெருப்பின் மாற்றத்தைக் கொண்டு வருகிறார்.

    செவ்வாய் தசாவின் கடைசிப் புத்தி சந்திர புத்திசந்திர புத்தி இராகுதசாவை நெருங்கும் மனநிலையை உருவாக்க உதவுகிறதுஇராகுவால் மனதைக் (சந்திரனைகிரகணிக்க முடியும்இராகு என்பது உள்மனம்இவ்வாறாக சந்திரன் இங்கு உதவுகிறார்.

    இராகு தசாவின் கடைசிப் புத்தி செவ்வாய் புத்தியாகும்செவ்வாய் புத்தி தனது ஒழுக்கம் மற்றும் தைரியத்தால்மிகவும் நல்ல உள்ளமும்கருணையுள்ளமும் கொண்ட குருவின் தசையை அடைய நம்மைத் தாயர்ப்படுத்துகிறதுஇராகு தசாவின் கடைசிப் புத்தியிலிருந்துகடவுளின் தளபதியான செவ்வாய் தைரியத்தாலும்மனவுறுதியாலும்,தெளிவான வழியில்நல்வழியமைத்துகுரு தசாவை அடையச் செய்கிறார்இங்கு குரு நமக்கு உயர்ந்த பாடங்களுக்கான வகுப்பறை அமைத்துப் பாடம் நடத்துகிறார்.

    குரு தசாவின் கடைசி புத்தி இராகு புத்தியாகும்இராகு புத்தி தனது அழுத்தத்திலிருந்தும்உலக நடவடிக்கைகளிலிருந்தும் நம்மை விடுவித்துசனியின் அனுபவபூர்வமான மற்றும் உண்மையான மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள உதவுகிறதுசனியின் கற்பனையில்லாத உண்மை நிலைக்குக் குருவின் எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை எண்ணம் வழிவிட வேண்டும்.உலகத்தோடு நமது தொடர்பைபந்தத்தைக் குறிக்கும் இராகு உள்மனவழியாக சனியின் அழுத்தத்தை நமக்குக் கொண்டு வருகிறது.

    சனியின் கடைசி புத்தி குரு புத்தியாகும்குரு தனது எப்போதுமே நல்லதே நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலமாகநமது மனதைபுதன் திசைக்குத் தயார்ப்படுத்த உதவுகிறதுஇந்தப் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைபுதன் தசாவிற்குப் புதிய பாதை அமைத்துத் தருகிறதுஇந்தப் புதியபாதை மூலமாக புதன்நமது திறமைகளையும்பரிசோதனை மற்றும் விளையாட்டுக்களிலும்முன்னேற்றத்தை அளிக்கிறதுஉலகை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைக் கற்பதே புதனின் நாடகம் ஆகும்.

    புதன் தசையின் கடைசி புத்தி சனி புத்தியாகும்புதனின் ஒளிவீச்சு மற்றும் சக்திகொண்டுசனி,கேது தசாவை நெருங்க தயார்படுத்துகிறதுபுதன் தசாவின் 17 வருடங்களில்புதிதாக உருவாக்கப்பட்டும்,கண்டுபிடிக்கப்பட்டும் உள்ள அனைத்தையும் கேதுவின் மீது பிரதிபலிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அதற்கு சனிநம் மனதை ஒருநிலைப்படுத்தக் கற்றுத்தருகிறது.

    எனவேநண்பர்களேகேது தசாமுதல் ஏன் வரிசைப் படுத்தப்பட்டது ? என்பதற்கும்ஒரு தசாவின் கடைசிப் புத்தியானது எங்ஙனம்அடுத்துவரும் தசாவிற்குத் தோரணவாயிலாகிறது என்பதையும் விரிவாக அறிந்தகொண்டது பயனுள்ளதாக அமைந்ததல்லவா ? வாழ்க வளமுடன்.

வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.

1 comment:

  1. தசாபுத்தி பற்றிய அலசல் அருமை. மிகமிக உபயோகமான அலசல்.நன்றி

    ReplyDelete