Wednesday, May 7, 2014

செவ்வாய் தோஷமும் விதி விலக்குகளும்.

தோஷசாம்யம்

     ஓரு ஜாதகத்தில் இலக்கினம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்களிலிருந்து 12, 2, 4, 7 இலக்கினம் மற்றும் 8 ஆகிய பாவங்களில் இராகு, சூரியன், சனி மற்றும் செவ்வாய் இவர்களில் ஒருவரோ, ஒன்றுக்கும் மேலானவர்களோ இருக்க மணவாழ்வில் தோஷத்தை உண்டாக்கும். இதற்குச் சமமான தோஷம் ஆணின் ஜாதகத்தில் இருப்பது அவசியம். அப்போதுதான் அந்த தோஷம் நிவர்த்தியாகும். இதுவே தோஷசாம்யம் எனப்படுகிறது.

    மேற்சொன்ன நான்கு கிரகங்களில் மிகவும் குறைந்த தோஷமுள்ளது இராகு ஆகும். அதைவிட இரு மடங்கு தோஷமுள்ளது சூரியன், மூன்று மடங்கு தோஷமுள்ளது சனி, இராகுவைப் போல் 4 மடங்கு தோஷமுள்ளது செவ்வாய். அதே போல் அவையிருக்கும் ஸ்தானங்களுக்கும் தோஷமதிப்பீடு உண்டு. ஒரு பாபக்கிரகம் 12 ஆம் இடத்திலிருக்க ஒரு பங்கு தோஷமென்றால், 2 ல் மூன்று பங்கு, இலக்னத்தில் 5 பங்கு மற்றும் அட்டமத்தில் 6 பங்கு தோஷமெனக் கணக்கிட வேண்டும்.

    அடுத்து, இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும், அவை நிற்கும் வீட்டிற்கும் ஏற்படும் தோஷத்தைக் கணக்கிடவேண்டும். தோஷம் செய்யும் கிரகங்கள் இருக்கும் இடத்திற்குத் தக்கவாறு தோஷங்களை ஈடு செய்து சமன் படுத்த வேண்டும். நிகர தோஷம் கணக்கிட்டு ஆண், பெண் ஜாதகங்களில் ஏற்படும் தோஷ அளவை நிர்ணயித்து தோஷங்கள் சமமானதாக உள்ளதா ? – எனப் பார்க்கவேண்டும். ஆண் ஜாதகத்தில் தோஷ அளவு அதிகம் இருந்தால் பரவாயில்லை.

    எந்தவொரு தோஷம் தரும் பாபக்கிரகமும், இந்த 12, 2, 4, 7, 1 மற்றும் 8 ஆம் இடங்களில் நிற்க, அந்த வீடு அக் கிரகத்தின் உச்சவீடானால், முழுதோஷமும் நீங்கும். மூலத்திரிகோணமெனில் முக்கால் தோஷம், சுயவீடானால் - ½, அதிக நட்பு – 3/8, நட்பு - ¼, சமம் எனில் அரைக்கால் பங்கு தோஷம், பகை -  1/16 பாகம் இவற்றிலிருந்து குறைக்கப்படவேண்டும். வக்ர கிரகத்திற்கு முழுதோஷமும் குறையும். நீச கிரகங்கட்கு முழுதோஷமும் உண்டு. இராகுவுக்கு, இடங்கொடுத்தவன் தோஷநிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே தோஷசாம்யம் செய்ய வேண்டிய முறையாகும்.

    தோஷசாம்யம் சரியில்லையென்றால், தம்பதிகளுக்கு உடல் நலக் குறைவு, சந்தோஷமின்மை, ஒற்றுமையின்மை மற்றும்  கஷ்டங்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

    இவ்வாறாக இலக்கினம், சந்திரன்  மற்றும் சுக்கிரனுக்கு, எங்ஙனம்  இராகு, சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை தோஷம் தருகின்றன என்பதையும் கணக்கிட்டு, பெண் ஜாதகத்தில் இதற்கு நிகரான அல்லது சற்று குறைவுள்ள தோஷமாகவோ இருந்தால் தோஷசாம்யம் சமமாகிவிவிடும். மேலும் பெண் ஜாதகத்தில் 12, 2, 4 ஆகிய இடங்களிலுள்ள கிரகங்களின் தோஷங்களை, ஆண் ஜாதகத்தில் 12, 2, அல்லது 4 ல் உள்ள கிரகங்களின் நிலை சமப்படுத்திவிடும். இலக்னத்தில் உள்ள கிரக தோஷத்தை, ஆணின் எட்டாமிட கிரக தோஷம் சமன் செய்யாது. ஆனால் ஆணின் எட்டாமிட தோஷத்தை, பெண்ணின் எட்டாமிட தோஷம் சமன் செய்துவிடும்.

    இவ்வாறு சமமாகாத வீட்டின் காரகங்கள் பாதிக்கப்படும்.  உதாரணமாக 2 ஆம் வீடு சமமாகவில்லையெனில்மணவாழ்வில் சுகம் இருக்காது. சொத்துக்களும் நிலைத்திருக்காது. இலக்ன தோஷம் சமமாகவில்லையெனில் தாம்பத்யத்தில் உடல் மற்றும் மனோநிலை பாதிப்படையும். ஏழாமிட தோஷம் சமமாகாவிடில் தாம்பத்திய உறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். எட்டாமிட சமமற்ற தோஷம் அகால மரணம் தரும். 12 ஆம் இடம் கஷ்ட, நஷ்டங்கள், ஏக்கம் மற்றும் விருப்பம் நிறைவேறாமை ஆகியவை ஏற்படும்.

    எனவே, பொருத்தம் பார்க்கும் போது தோஷசாம்யத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று சாத்திரங்கள் வலியுறுத்துகின்றன.
     


செவ்வாய் தோஷமும் விதி விலக்குகளும்.

தனே வ்யயே ச பாதானே
 ஜாமித்ரே ச அஷ்டமே குஜக
 ஸ்திரீ ணாம் பர்த்ரு விநாசாய
 பும்ஸாம் பார்யா விநஸ்யதி

    மேற்கண்ட ஸ்லோகத்தில் குறிப்பிட்டுள்ளபடி 2, 12, 4, 7, 1 மற்றும் 8 ஆகிய பாவங்களில் ஒன்றில் ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்க மனைவி இறப்பாள் என்றும், பெண் ஜாதகத்தில் இருந்தால் அவள் விதவையாவாள் என்றும் மொட்டையாகச் சொல்வது அர்த்தமற்ற தாகும். ஏனெனில் இதில் விதிவிலக்குகளும் உண்டு. மேலும் விதிவிலக்குகளை மறந்து, இவ்விடங்களில் செவ்வாய் இருப்பதாகக் கணக்கிட்டால் உலகில் சரிபாதிப் பேருக்கு செவ்வாய் தோஷம் உடையவர்களாகி விடுவரல்லவா ? முன்னமே சொன்னபடி, இராகு, சூரியன், சனி இவர்களைக் காட்டிலும் செவ்வாய்க்கே அதிக தோஷம் உண்டுமற்ற கிரக தோஷங்களை விட்டுவிட்டு செவ்வாய் தோஷத்தை மட்டும் தோஷமெனப் பார்ப்பது ஆபத்தானதாகும்.

ரவீஇந்து க்ஷேத்ர ஜாதானாம் குஜதோஷம் ந வித்யதே
      ஸ்வோச்ச, மித்ரல , ஜாதானாம் தத்தோஷம் ந பாவேத் கில

    சிம்மம்,(சூரி-நட்பு) மகரம், (செவ்-உச்சம்) கடகம்(நீசம்) மேஷம்(ஆட்சி) விருச்சிகம்(ஆட்சி) தனுசு,(நட்பு) மீனம் ஆகிய 7 இலக்னங்களில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் இவற்றில் எங்கிருந்தாலும் தோஷமில்லை. மற்றும் இந்த ஏழு இடங்களில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்களுக்கு இத் தோஷம் கொஞ்சமுமில்லை.

இரண்டாம் இடத்தில் செவ்வாய்

 ˝ துவிதீயே குஜதோஷஸ்யாத் மேஷ வ்ருச்சிகயோர் வினா
              துவிதீயாயி பௌம தோஷஸ்து யுக்ம கன்யகோயோர் வினா.

    செவ்வாய் மற்றும் புதனின் சுய வீடுகளான மேஷ, விருச்சிக, மிதுன மற்றும் கன்னி இராசிகள் லக்/-சந்/-சுக்னிலிருந்து 2 ஆம் இடமாக அதில் செவ்வாய் இடம்பெற தோஷமில்லை.

4 ஆம் இடத்தில் செவ்வாய்

சதுர்த்தே குஜதோஷஸ்யாத் துலா, விருஷபயோர் வினா
              சதுர்தேயி பௌம தோஷஸ்து மேஷ விருச்சிகயோர் வினா

    அதேபோல், செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சுய வீடுகளான மேஷ,விருச்சிக ரிஷப மற்றும் துலா லக்/-சந்/-சுக்னிலிருந்து 4 ஆம் இடமாக அதில் செவ்வாய் இடம்பெற தோஷமில்லை.

              சாதுஷ் சப்தம கோ பௌம     
              மேஷ கர்கடி நக்ரஹ
              யதா ரஸ்ம் சுபா; ப்ரோக்தா
              குஜத் தோஷ ந வித்யதே.


செவ்





//, சந்/
சுக்



//, சந்/
சுக்


    மேஷத்தில் செவ்வாய் இருந்து, அதுவே, இலக்னத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ அல்லது சுக்கிரனிலிருந்தோ,  4 ஆம் வீடாகவும் அல்லது 7 ஆம் வீடாகவும் ஆக, இலக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் இருக்கும் இராசி, மகரமாகவோ அல்லது துலாமாகவோ கொண்டு பிறந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் தனது சுயவீடான மேஷ, விருச்சிகத்திலும், உச்ச, நீச வீடுகளான மகர, கடகத்திலும் இருந்து அதுவே, இலக்/ சந்/ சுக்இவற்றிலிருந்து 4 அல்லது 8 ஆம் வீடாக தோஷம் விதிவிலக்கு ஆகிறது. சிம்ம, ரிஷப இராசிகளில் பிறந்த ஜாதகருக்கு, விருச்சிகத்திலுள்ள செவ்வாயும் பாதிப்புத் தருவதில்லை.

    செவ்வாய் தோஷத்தைக் இலக்னத்திலிருந்துசந்திரனிலிருந்துசுக்கிரனிலிருந்து கணக்கிடும் போது, தோஷமானது இலக்னத்தைவிட, சந்திரனிலிருந்தும், அதைவிடச் சுக்கிரனிலிருந்தும் ஏற்படும் தோஷமே மிக அதிகமாகக் கருதப்படுகிறது.

     மற்ற இடங்களிலுள்ள செவ்வாயைவிட, அட்டமத்திலுள்ள செவ்வாய் அவ்வளவு மோசமானதல்ல எனக் கருதப்படுகிறது. அது திருமணத்தை நிச்சியிப்பதில் பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தி அதன் காரணமாக தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. வரும் துணை வாய்த்துடுக்கு அதிகம் உள்ளவராகவும், வீண் செலவு அதிகம் செய்பவராகவும் இருப்பார்.

     சில அறிஞர்கள் பெண் ஜாதகத்தில் 2 மற்றும் 7 இல் உள்ள செவ்வாய்  தோஷத்திற்குக் காரணமாவதில்லை எனத் தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேபோல் ஆண் ஜாதகத்தில் 1, 4 அல்லது 8 லுள்ள செவ்வாயும் பாதிப்புத் தருவதில்லை.

     லக்/சந்/சுக் னிலிருந்து 1, 2, 4, 8 மற்றம் 12 ஆம் இடங்கள் சரராசியாகி அதில் செவ்வாய் இருக்க ( மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ) செவ்வாய் தோஷக் கெடுதிகள் ஏற்படுவதில்லை.

                            சர ராசி கதவௌ பௌம
                            சதுர் அஷ்ட வியயே துவிய
                            லக்ன பாப வினாசஸ்யாத்
                            சஷே பாபோ விஷேஷதா.

    இந்த ஆசிரியர் 7 ஆம் இடத்தை ஒதுக்கிவிட்டாரே எனத் தோன்றலாம். ஏற்கனவே முன்னர் குறிப்பிட்டபடி செவ்வாய் இந்த 4 இராசிகளில் , அவை 7 ஆம் இடமாகி அமரும்போது செவ்வாய்க்கு தோஷம் தரமுடியாத நிலை ஏற்படுகிறது.
    
    அடுத்து குரு மற்றும் புதனுடன் இணைந்த அல்லது பார்க்கப்பட்ட, 1, 2, 4, 8, 12 ஆம் (லக்/சந்/சுக்) இடங்களிலுள்ள செவ்வாய்க்கும் தோஷம் ஏற்படுத்த முடியாத நிலைபெறுகிறது.

7 இல் செவ்வாய்

                          வி சப்தம பௌம தோஷஸ்து
                          நகிரக கர்கடக யோரே வினா.

    7 ஆம் (லக்/சந்/சுக்) இடத்தில் செவ்வாய் கெடுதல் தரும் என்று சொல்லப்பட்டாலும், 7 ஆம் இடம் மேஷம், கடகம், விருச்சிகம் மற்றும் மகரமானால் தோஷம் தருவதில்லை.

8 இல் செவ்வாய்

                          அஷ்டமே பௌம தோஷஸ்து
                          தனுர் மீனாத்வயோரே வினா
                          அஷ்டமே குஜ தோஷஸ்யாத்
                          கடக மகராயோரே வினா.

    குருவின் இராசிகள் அல்லது செவ்வாயின் நீச ஸ்தானமான மகரம், உச்ச இராசியான கடகம் ஆகியவை (லக்/சந்/சுக்) 8 ஆம் இடமாகி, அதில் செவ்வாய் இருக்க செவ்வாயால் பாதகமில்லை.

12 இல் செவ்வாய்

                          வியாயேஹ, குஜ தோஷாஸ்யாத்
                          கன்யா மிதுலாயோரே வினா
                          துவாதஸே பௌம தோஷஸ்து
                          விரிஷ தௌலிகாயோரே வினா.

    புதன் மற்றும் சுக்கிரனின் வீடுகள் 12 ஆம் இடமாகி அதில் செவ்வாய் இருக்க (லக்/சந்/சுக்) தோஷமில்லை. இருவர் ஜாதகத்திலுமே 12 இல் செவ்வாய் இருந்தால் தோஷ நிவர்த்தியாகிறது. சமமாகிறது. சில முனிவர்கள் செவ்வாயுடன் இணைந்த- பார்த்த சனி, இராகு மற்றும் கேது ஆகியவற்றாலும் செவ்வாய் தோஷம் விலகும்.
           
                          குரு மங்கள சம்யோகே
                          பௌம தோஷ ந வித்யாதே.

     குருவும் செவ்வாயும் 8° க்குள் இருந்தால் தோஷமில்லை. குருவுக்கு 2 இல் செவ்வாய் இருக்க, திருமணம் தாமதமாகும்.

                          சந்திர மங்கள சம்யோகே
                          பௌம தோஷ ந வித்யாதே

     குருவும், சந்திரனும் ஒரே இராசியில் இருக்க செவ்வாய் தோஷமில்லை.

     இவ்வாறாக செவ்வாய் தோஷ விதிகள் மற்றும் விலக்குகள் தேவகேரளம், ஹோராசாஸ்த்ரா, ஜாதக சந்திரிகா, நாரதீயம் ஆகிய நூல்களிலும் அத்திரி மகரிஷி, கர்க மகரிஷி ஆகியோராலும் விளக்கப்பட்டுள்ளன.

   இவற்றையெல்லாம் பார்க்கும் போது செவ்வாய்  தோஷம் என்பது மொத்தத்தில் 6 சதவிகித ஜாதகங்களில் மட்டுமே இருக்கும் என்பதுதான் உண்மை.

    ஸ்திரீ ஜாதகம் எனும் நூலில், 7 அல்லது 8 ஆம் இடத்தில், இராகு, சூரியன், சனி, செவ்வாய் இவர்களில் ஒருவரோ, அல்லது பலரோ நின்றால் கூட ஒன்பதாம் இடத்தில் ஒரு சுபகிரகம் இருக்க அந்த ஜாதகிக்கு, கணவனின் ஆதரவு, குழந்தை பாக்கியம், சுக வாழ்வு கண்டிப்பாக உண்டு என்றும் 2 ஆம் இடத்தில் சுபகிரகம் இருக்குமானால் விதவாயோகம் இருக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

     
--- ஜோதிடகலாநிதி.எஸ்.விஜயநரசிம்மன்.எம்.எஸ்ஸி





No comments:

Post a Comment