Tuesday, April 29, 2014



தேர்தலோ ,தேர்தல்….?

    மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்ந்த, உலகின் மகத்தான மிகப்பெரிய சுதந்திர நாடு நமது இந்தியா. மாறுபட்ட மத, இன, மொழி, மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும்  ஒன்றே என ஒருங்கிணைந்து வாழும் பாரதம் போன்ற சிறந்த ஒரு பெரிய திருநாட்டை உலகில் வேறெங்கும் காண இயலாது. ஆயினும் நமது நாட்டின் மனித்தன்மை என்னவெனில், ஏழை - பணக்காரன், வேலையுள்ளவன்வேலையற்றவன், பசியுள்ளவன்தின்று கொழுத்து உணவை வீணடிப்பவன் என மக்களிடையே நிலைத்திருக்கும்  ஏற்றதாழ்வுகளை அனைவரும் உணர்ந்து வாழ்வதுதான். ஆனால், சில அரசியல்வாதிகள் மட்டும் தங்களைத் தாங்களே நாணயஸ்தர்களாக் கருதிக்கொள்கின்றனர். ஆனால், நடைமுறையில் அவர்கள் ‘?’ .

    வராஹிமிகிரர் மற்றும் கர்க மகரிஷிகளின் கூற்றுப்படி ஒவ்வொரு கிரகமும் உலகின் ஒவ்வொரு பகுதியையும் ஆள்கின்றன. அதன்படி  நமது இந்தியப் பெருநாட்டை ஆட்சி செய்பவர் குரு ஆவார். அவரே நமது நாட்டின் அரசியல் நிலவரங்களை ஆட்சி செய்பவராவார்.

    முண்டேன் அஸ்ட்ராலஜி எனும் இலோகஜோதிடத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் அதையொத்த தேர்தல்கள் என்பது மக்களின், வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையையும், பேராதரவையும் பெருவாரியாகக் காட்டும் ஒரு நிகழ்வாகும்இவர்தான் நமது நம்பிக்கைக்கு உரியவர் என மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பவரே மிகச்சிறந்த வேட்பாளர் ஆவார். இதை நிலைநாட்ட முக்கிய மூன்று காரணிகள் உண்டு, முதலாவது வாக்காளர் அடுத்து வேட்பாளர் மற்றும்  அவர்கள் நிற்கும் மாநிலமாகும். வாக்காளர்களையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. புத்திசாலிகள்எதையும் ஆராய்ந்து ஓட்டளிப்பவர்கள். 2. உடன் பிறப்புக்கள், ரத்தத்தின் ரத்தங்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் தீவிரமான தொண்டர்கள் மற்றும் மூன்றாவதாக நடுநிலையாளர்கள் ஆவர். அதேபோல் வேட்பாளரையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம். 1. சமூகசேவையில் ஆர்வமுள்ளவர்கள் 2. கட்சி சார்ந்த அரசியல் பிரமுகர்கள் 3. சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.

     இத்தகைய தேர்தல் நடவடிக்கைகளுக்கான காரகக் கிரகம் இராஜக்கிரகமான சூரியனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் ? சாத்திரங்களும் இதையே வழிமொழிகின்றன. வாக்காளர்களாகிய பொதுமக்களைக் குறிப்பது மற்றொரு இராஜக்கிரகமான சந்திரனே ஆவார். அடுத்து தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஆணயத்தைக் குறிப்பது அந்தந்த நாட்டுக்குரிய 10 ஆம் அதிபதியாகும்.  

    இந்தியாவுக்கான இராசி கடகமாகும். எனவே, தேர்தல் நடக்கும் பிரதேசத்தின் ஜாதகத்தில் அரசு மற்றும் நிர்வாகத்துக்குரிய இராஜக்கிரகமான சூரியனின் நிலையை ஆராய்ந்து, அத் தேர்தல் பிரச்சனைகள் ஏதுமின்றி, ஒழுங்காக, அராஜகம், கலகம் போன்றவைகள் ஏற்படாமல், நியாயமான, நேர்மையான முறையில் நடைபெறுமா ? - என்பதைத் தீர்மானிக்க முடியும்.

    உதாரணமாக, உத்திரப் பிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அலகாபாத்துக்கான இராசி மிதுனமாகும். அப்போது சூரியன் மேஷத்தில் உச்சநிலையில் இருப்பதாகக் கொண்டால், அது மிதுன இராசிக்கு லாப பாவமாகும். அந்தப் 11 ஆம் இடம், வழிமுறையற்ற லாபங்களுக்காகவும், ஆதாயங்களுக்காகவும், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை  அள்ளி வீசுதல் போன்றவற்றிற்கும் காரகம் பெறுவதால், கட்சிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

    அடுத்து, மிதுனத்துக்கு மூன்றாம் வீட்டு அதிபதியான சூரியன், தன் வீட்டுக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளது, தேர்தலை நடத்தும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை முழுவதுமாக அறிந்தவர்களாக, அதைச் சரிவர நிறைவேற்றுபவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடப்பதையும் குறிக்கும்.

    மனோகாரகன் சந்திரன், தேர்தல் நேரத்தில், வாக்குகளை  அளிப்பதில் மக்களின் நிலையான மனதையும், உறுதியான எண்ணத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.

    நாம் வாக்காளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதன்படி புத்தி கூர்மையுள்ளவர்களை, நவாம்சத்தில் குரு இடம்பெற்ற இராசி மூலமாகவும், பொதுமக்களை சனியைக் கொண்டும் மற்றும் கட்சித் தொண்டர்களைச் செவ்வாயைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

    அதேபோல், வேட்பாளர்களில் ஒரு தலைவரை மற்றும் கட்சிகளைக் கண்மூடித்தனமாகத் தொடரும் அரசியல்வாதிகளைக் கேதுவாலும், தன்னலமற்ற மற்றும் பொதுச் சேவைகளில் முழு ஈடுபாடுள்ள வேட்பாளரை 7 ஆம் இடத்து அதிபதியாலும், 7 இல் உள்ள அல்லது ஏழைப் பார்க்கும் கிரகம் குறிக்கும் (இவற்றில் எது பலம் மிக்கதோ, அதைப்பொருத்தது).

   இனி, இதேபோல் 24 – ஏப்ரல், 2014 அன்று, தமிழ் நாட்டில் நடக்கப் போகும் தேர்தலைப் பற்றி அலசவோம். அன்றைய கோசார நிலை:


கேது,புத
சூரி
லக்///

குரு

குரு

கேது
சுக்
சனி()
புத,செவ்
(),சூரி
சுக்
சந்
24-4-2014
07-30
சென்னை



நவாம்சம்



லக்///



இராகு
சனி()
செவ்()

இராகு
சந்



    ஜாதகத்தில் 4 ஆம் அதிபதி உச்ச சூரியன் 12 இல் மற்றும் தமிழ்நாடு இராசி சிம்மத்திற்கு  9 இல் கேது மற்றும் புதனுடன் இணைந்துள்ளார். 12 ஆம் இடத்தை செவ்வாய், இராகு மற்றும் சனி பார்க்கிறது. சூரியன் பகை நவாம்சம் பெற்றுள்ளார்  இந்நிலைகள் தேர்தல் அதிகாரிகளை ஒருதலைப்பட்சமாக நடக்கவும் மற்றும் கட்டாயம் காரணமாக, வேறுவொரு கட்சிக்கு மறைமுகமாக உதவும் நிலையையும் ஏற்படுத்தலாம். ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் நியாய உணர்வுகள் அவர்களுக்கே மனவருத்தத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

    ஏழாம் அதிபதியான செவ்வாய் பகை வீட்டில் அமர்ந்துள்ளார். அதன் காரணமாக, மக்களின் மனநிலையைப் புரிந்திகொள்ள முடியாத நிலை ஏற்படும். செவ்வாய், சனி இருவரும் 8, 12 ஆம் இடங்களையும், சூரியன் மற்றும் புதனையும், சனி 3 ஆம் இடத்தையும் பார்ப்பதால் வேட்பாளர்கள், சட்டம் பாயும் என்ற பயந்த நிலையில் காணப்படுவர். ஆனால், இத்தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பான நிகழ்வுகளும், குழப்பங்களும் ஏற்படலாம். இரகசியக் குற்றங்கள் அதிகரிக்கலாம்.

    இலக்னாதிபதி சந்திரனோடு இணைந்து, சந்திரன், சுக்கிரன் மற்றும் சனிக்கு இடையில் இருப்பதால், ஆட்சிக்கு வரப்போகும் கட்சி தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி, தனித்துச் செயல்படாத நிலையையே குறிகாட்டுகிறது.

   இவ்வாறாக அரசியலில் எந்தவிதமான தேர்தல்களையும் கட்டுக்குள் வைக்கப் பல 
காரணிகள் உள்ளன. எனவே, வரப்போகும் நிலைகளை முன்னரே அறிந்து சொல்லும் அல்லது அனுமானிக்கக் கூடிய திறமைகள் ஜோதிடப் பெருமக்களுக்கு இருந்தாலும், ஜோதிடர்கள் தேவையின்றி அல்லது சம்மன் இன்றி ஆஜராகாதிருப்பது அவர்களுக்கு நல்லதுதானே ?  

--- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி)







No comments:

Post a Comment